தைவான் பூகம்பம் – 9 பேர் உயிரிழப்பு, 900 பேர் காயம்

டோக்கியோ: புதன்கிழமை அன்று தைவான் நாட்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த பூகம்பத்தால் சுமார் 9 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதில் சுமார் 900 பேர் காயமடைந்துள்ளனர். அதோடு மக்கள் வசித்து வந்த குடியிருப்புகளும் சேதமடைந்துள்ளன. பூகம்பம் ஏற்பட்டதையடுத்து ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டில் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மக்கள் பலர் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் கொண்டுள்ளனர். இருந்தும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள காரணத்தால் அவர்களை அணுகுவது சவாலான காரியமாக உள்ளது. இதில் சிலர் சுரங்களில் … Read more

பாஜகவின்  வாஷிங் மெஷின் பாணி தோலுரிப்பு : முதல்வர் ஸ்டாலின்

சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பாஜகவின் வாஷிங் மெஷின் பாணி தோலுரிக்கப்பட்டுள்ளதாகக் கூறி உள்ளார். இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின்  எக்ஸ் வலைத்தளத்தில், ”பா.ஜ.க.வின் ‘வாஷிங் மெஷின்’ பாணியை ஆதாரப்பூர்வமாகத் தோலுரித்துள்ளது ஆங்கில செய்தி நாளேடு. பா.ஜ.க.வுக்குத் தாவிய எதிர்க்கட்சித் தலைவர்கள் 25 பேரில், 20 பேர் மீதான ஊழல் வழக்குகளில் நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும், 3 பேர் மீதான வழக்குகள் மொத்தமாக முடித்தே வைக்கப்பட்டுவிட்டன.  10 ஆண்டு பா.ஜ.க. ஆட்சி என்பது இந்தியாவின் உயர் விசாரணை அமைப்புகளை … Read more

படம் புடிக்கலைனா செருப்பால அடிங்க : 'ஹாட்ஸ்பாட்' இயக்குனர் வேதனை

சமீபத்தில் வெளியான படம் ஹாட்ஸ்பாட். நான்கு கதைகள் மூலம் புதுமையான கருத்துக்களை சொன்ன படம். இந்த படத்தை விக்னேஷ் கார்த்திக் என்ற புதுமுகம் இயக்கி உள்ளார். கலையரசன், சோபியா, சாண்டி மாஸ்டர், அம்மு அபிராமி, கவுரி கிஷன், ஆதித்யா பாஸ்கர், ஜனனி ஐயர், சுபாஷ், உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கே.ஜே.பி டாக்கீஸ் மற்றும் 7 வாரியர் பிலிம்ஸ் நிறுவனங்கள் சார்பில் கே.ஜே.பாலமணி மார்பன் மற்றும் சுரேஷ்குமார் தயாரித்துள்ளனர். படத்தை மீடியாக்கள் பாராட்டியபோதும் படத்திற்கு மக்கள் ஆதரவு இல்லாமல் … Read more

அடக்கருமமே.. தங்க டாய்லெட்டில் ஜிபி முத்து.. கூடவே அந்த பிரபலமும்.. தீயாக பரவும் வீடியோ!

சென்னை: பிரபல ஸ்பா நிறுவனம் ஒன்றின் பாத்ரூம் டூர் வீடியோவை ஜி.பி. முத்து செய்துள்ள நிலையில், அந்த காட்சிகள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன. பிக் பாஸ் பிரபலமான ஜி.பி. முத்து “பேதியில போவான்” என பேசியே சோஷியல் மீடியாவில் ரசிகர்களை அதிகம் கவர்ந்தவர். தற்போது உண்மையிலேயே டாய்லெட்டில் உட்கார்ந்த படி வீடியோவை வெளியிடும் அளவுக்கு வந்து

சிதம்பரம்: `கச்சத்தீவு, கறுப்புப் பணம், கார்ப்பரேட், தேர்தல் பத்திர மோசடி’- பாஜகவை விளாசிய கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், திரைப்பட நடிகருமான கமல்ஹாசன் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் தொல்.திருமாவளவனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், “எந்த சித்தாந்தமும் மக்களுக்காகத்தான். மாவோயிஸ்ட், கம்யூனிஸ்ட், பெரியாரிஸ்ட், அம்பேத்கரிஸ்ட் அனைத்தும் தேசத்திற்கு பாதுகாப்பின்மை வரும்போது தோளோடு தோள் நின்று களம் காண வேண்டும். ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது. அதனால்தான் நானும், தம்பி திருமாவளவனும் தோள் உரசி களம் கண்டிருக்கிறோம்.  இந்த முறை அவர்களுக்கு இன்னொரு வாய்ப்பை கொடுத்துவிட்டால், ஜனநாயகமே இருக்காதோ என்று … Read more

பிரதமர், முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் வருகையால் கோவையில் தீவிரமடையும் தேர்தல் பிரச்சாரம்

கோவை: பிரதமர், முதல்வர், எதிர்கட்சி தலைவர் என அடுத்தடுத்து அரசியல் கட்சியின் தலைவர்கள் பிரச்சாரத்துக்காக கோவைக்கு வருகின்றனர். இதனால் கோவையில் மக்களவைத் தேர்தல் பிரச்சாரக் களம் சூடுபிடித்துள்ளது. தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 19-ம் தேதி நடக்கிறது. மக்களவைத் தேர்தலுக்கான தேதி நெருங்குவதால் அரசியல் கட்சியின் வேட்பாளர்கள் தங்களது பிரச்சாரங்களை தீவிரப்படுத்தியுள்ளனர். தமிழக அரசியல் களங்களில் கோவை முக்கியமானது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் கோவை, பொள்ளாச்சி ஆகிய இரு மக்களவைத் தொகுதிகள் உள்ளன. கோவை மக்களவைத் தொகுதியில் … Read more

பாஜகவில் குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங்… காங்கிரஸ் அதிர்ச்சி! – நடந்தது என்ன?

புதுடெல்லி: சர்வதேச குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் இன்று திடீரென பாஜகவில் இணைந்துள்ளார். இவரை மதுராவில் போட்டியிட வைக்கத் திட்டமிட்டிருந்த காங்கிரஸுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஹரியாணாவின் பிவானியை சேர்ந்த குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங். தனது விளையாட்டுகளின் வெற்றிக்காக இவர், அர்ஜூனா மற்றும் பத்மஸ்ரீ உள்ளிட்டப் பல முக்கிய விருதுகளை பெற்றுள்ளார். கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் விஜேந்தர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து, தெற்கு டெல்லி தொகுதியில் போட்டியிட்டு பாஜக வேட்பாளர் ரமேஷ் பிதூரியிடம் தோல்வியுற்றார். … Read more

ஆண்ட்ராய்டு 15 இயங்குதள அம்சங்கள்: கூகுள் வெளியிட்ட ப்ரிவியூ

கலிபோர்னியா: ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு மேம்படுத்தப்பட்ட பயனர் அம்சத்தை வழங்கும் வகையில் ஆண்ட்ராய்டு 15 இயங்குதளத்தை வெளியிட உள்ளது கூகுள். இந்நிலையில், அதில் இடம்பெற்றுள்ள சில முக்கிய அம்சங்கள் ப்ரிவியூ செய்யப்பட்டுள்ளது. கடந்த 2008-ல் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் முதல் வெர்ஷன் வெளியானது. அது முதலே உலகை ஆட்சி செய்து வருகிறது. அவ்வப்போது சீரான இடைவெளியில் அடுத்தடுத்த ஆண்ட்ராய்டு வெர்ஷன்களை தொழில்நுட்பத்தின் தேவைகளுக்கு ஏற்ப வடிவமைத்து வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இந்த … Read more

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு: புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன்மூர்த்தி

Lok Sabha ELections: அதிமுக கூட்டணிக்கு ஆதரவளிப்பது குறித்து இரண்டு நாட்களில் தெரிவிப்பதாக புரட்சி பாரதம் கட்சியின் தலைவரும், எம்எல்ஏவுமான ஜெகன் மூர்த்தி தெரிவித்திருந்தார். இது அதிமுக -வுக்கு ஒரு நெருடலாக இருந்து வந்தது. 

கெஜ்ரிவால் கைதை எதிர்த்த வழக்குத் தீர்ப்பை ஒத்திவைத்த டெல்லி உயர்நீதிமன்றம்

புதுடெல்லி டெல்லி உயர்நீதிமன்றம் கெஜ்ரிவல் கைது நடவடிக்கைக்கு எதிரான வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது. கடந்த 21- ஆம்தேதி. டெல்லி மதுபானக் கொள்கையுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். அதைத் தொடர்ந்து 22-ந்தேதி அரவிந்த் கெஜ்ரிவாலை டெல்லியில் உள்ள ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் அமலாக்கத்துறையினர் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த சிறப்பு நீதிபதி காவேரி பாவேஜா, டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை 28 ஆம் தேதி வரை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டார். அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கைக்கு எதிராக டெல்லி … Read more