பிளாஷ்பேக்: முதல் அலிபாபா என்.எஸ்.கிருஷ்ணன்

புகழ்பெற்ற அரேபிய கதை 'ஆயிரத்தொரு இரவுகள்'. இதில் இடம் பெற்ற முக்கியமான கதை அலிபாபாவும், அலாவுதீனும். இரண்டுமே தமிழ் சினிமாவில் படமாகி உள்ளது. 1955ம் ஆண்டு வெளிவந்த எம்.ஜி.ஆர் நடித்த 'அலிபாபாவும் 40 திருடர்களும்' படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. தமிழில் தயாரான முதல் கலர் (கேவா) படம் இது. அலிபாபா கதையில் முதலில் நடித்தது எம்.ஜி.ஆர். தான் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அலிபாபாவாக முதலில் நடித்தது என்.எஸ்.கிருஷ்ணன். 1941ல் வெளியான 'அலிபாபாவும் 40 … Read more

Vanitha: ப்பா.. இந்த வயசுல இப்படி ஒரு போஸ்.. வனிதாவை கலாய்க்கும் பேன்ஸ்!

சென்னை: விஜயகுமாரின் மகள் வனிதா விஜயகுமார் வித்தியாசமான உடையில் இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார். இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டுள்ள பதிவு இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. விஜயகுமார் மஞ்சுளா தம்பதியினரின் மூத்த மகளான வனிதாவிற்கு பெரிய அளவில் அறிமுகம் தேவை இல்லை. இவர், தளபதி விஜய்யோடு சந்திரலேகா என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகம் ஆனார். இந்த படத்தில்

“தமிழக அரசுக்கான வெளிநாட்டு வங்கிகளின் கடன்தான் அந்த 5,000 கோடி ரூபாய்!” – நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் பதில்

திருவண்ணாமலை: “மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஐந்தாயிரம் கோடியைக் கொடுத்துவிட்டோம்; அதற்குக் கணக்கு கொடுங்கள், என்று ஏதோ கந்துவட்டிக்காரர் போன்று பேசியிருக்கிறார். அது முதலில் மத்திய அரசு கொடுத்த நிதி என்று அவரால் சொல்ல முடியுமா? சொல்ல முடியாது. ஏன் என்றால், அது வெளிநாட்டு வங்கிகள், தமிழகத்துக்குக் கொடுத்த கடன். அந்தக் கடனையும் தமிழக அரசுதான் திரும்பக் கட்டப்போகிறது” என்று திருவண்ணாமலையில் நடந்த பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். தமிழக முதல்வர் … Read more

'தேர்தல் வந்தால் கைது செய்யக் கூடாதா?' – கேஜ்ரிவால் ஜாமீன் வழக்கில் அமலாக்கத் துறை வாதம்

புதுடெல்லி: “தேர்தல் வந்தால் கைது செய்யக் கூடாது எனச் சொல்வது மோசமான வாதம். நாட்டை கொள்ளையடித்தாலும் தேர்தல் வந்தால் கைது செய்யக் கூடாது எனப் பேசுவது தவறு” என்று டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் ஜாமீன் வழக்கில் அமலாக்கத் துறை வாதிட்டுள்ளது. மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கைதான டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலின் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடந்தது. இதில், கேஜ்ரிவால் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு … Read more

திண்டுக்கல்: லேகியம் விற்ற மோடி, ஓபிஎஸ், எடப்பாடி இரண்டும் பைத்தியம் – லியோனி

Dindigul Leoni campaign: திண்டுக்கல் தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர் சச்சிதானந்தம்-ஐ ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட லியோனி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை பங்கமாய் கலாய்த்தார்.

காங்கிரஸில் இருந்து பாஜகவுக்குத் தாவிய பிரபல குத்துச் சண்டை வீரர் விஜேந்தர் சிங்.

புதுடெல்லி காங்கிரஸில் இருந்து விலகிய பிரபல குத்துச் சண்டை வீரர்  விஜேந்தர் சிங் இன்று பாஜகவில் இணைந்துள்ளார்.  கடந்த மக்களவைத் தெர்தலுக்கு முன்பு பிரபல குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் காங்கிரஸ் கட்சியில் இணைந்து 2019 தேர்தலில் தெற்கு டெல்லி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். நடைபெற உள்ள தேர்தலில், உ.பி.,யின் மதுரா தொகுதியில் நடிகை ஹேமாமாலினியை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் விஜேந்தர் சிங் களமிறங்குவார் என கடந்த சில நாட்களாகப் பேசப்பட்டு வந்தது. இன்று, குத்துச்சண்டை வீரர் … Read more

உலாவரும் சிறுத்தை.. மயிலாடுதுறையில் 7 பள்ளிக்கு நாளை விடுமுறை.. 10ம் வகுப்புக்கு தேர்வு உண்டு

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் நாளை 7 பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மாறாக 10ம் வகுப்பு பொதுத்தேர்வு திட்டமிட்டப்படி நடைபெறும். 10ம் வகுப்பு தேர்வு நடைபெறும் பள்ளிகளில் காவல்துறை, தீயணைப்பு துறை, வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் செம்மங்குளம் பகுதியில் நேற்று இரவில் சிறுத்தை நடமாட்டம் இருந்தது. சாலையில் சிறுத்தை நடமாடியது Source Link

24ம் தேதி அபர்ணா தாஸ் திருமணம் : மஞ்சும்மேல் பாயை மணக்கிறார்

விஜய் நடிப்பில் வெளியான 'பீஸ்ட்' படத்தில் நடித்தவர் அபர்ணா தாஸ். அதன்பிறகு 'டாடா' படத்தில் நடித்து புகழ்பெற்றார். இதனைத் தொடர்ந்து தெலுங்கில் 'ஆதிகேசவா' படத்திலும் நடித்தார். மலையாளத்தில் மனோஹரம், ப்ரியன் ஒட்டதில்லானு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது 'சீக்ரெட் ஹோம்' என்ற படத்தில் நடித்து வருகிறார். அபர்ணா தாஸ் தன் காதலையும், திருமணத்தையும் ஏற்கெனவே அறிவித்து விட்டார். அவரது திருமணம் வருகிற 24ம் தேதி கேரளாவின் வடக்கன்சேரியில் நடக்கிறது. எளிமையாக நடக்கும் இந்த திருமணத்தில் நெருங்கிய … Read more

நடிகர் முரளியின் மகனை தெரியும்.. மகள் என்ன செய்கிறார் தெரியுமா?

சென்னை: மறைந்த நடிகர் முரளியின் மகனான அதர்வா தந்தை வழியில் நடிக்க வந்துவிட்டார். அவர் படங்களில் நடிப்பதுடன், தயாரிக்கவும் செய்கிறார். நல்ல நடிப்புத் திறமை இருந்தும் இன்னும் முன்னணி நடிகர் என்கிற அந்தஸ்தை பெற முடியாமல் போராடி வருகிறார். இவரது இரண்டாவது மகன் விரைவில் சினிமாவில் அறிமுகமாக உள்ள நிலையில், முரளியின் மூத்த மகள் குறித்த தகவல்