மக்களவைத் தேர்தலில் போட்டி இல்லை : பாஜகவில் இணையும்.சுமலதா அறிவிப்பு
பெங்களூரு பிரபல திரைப்பட நடிகை சுமலதா வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை எனவும் பாஜகவில் இணைய உள்ளதாகவும் அறிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் உள்ள மாண்டியா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர் நடிகை சுமலதா. இவர் பாஜக ஆதரவுடன் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஆவார். வரும் தேர்தலிலும் சுமலதாவுக்கு பாஜக ஆதரவு அளிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. மாண்டியா தொகுதியை மதச்சார்பற்ற ஜனதா தள கட்சிக்கு ஒதுக்க பாஜக முடிவு செய்துள்ளது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட போவதில்லை என்று இன்று நடிகை சுமலதா அறிவித்துள்ளார். மேலும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் குமாரசாமியை ஆதரிப்பதாக … Read more