சிஎஸ்கேவுக்கு பெரும் பின்னடைவு… தாயகம் பறந்த முக்கிய பவுலர்… காரணம் என்ன?

Mustafizur Rahman Return To Bangladesh: இந்தியன் பிரீமியர் லீக் (Indian Premier League) எனப்படும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் நாடு முழுவதும் உள்ள பல்வேறு பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது வரை 15 லீக் போட்டிகள் நிறைவடைந்துள்ளன. இன்று இரவு நடைபெறும் 16ஆவது லீக் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையலிான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன. ஒவ்வொரு அணிகளும் தற்போது அவற்றின் பிளேயிங் … Read more

GOAT: “படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பை நிராகரித்து விட்டேன், ஏனென்றால்" – வினீத் சீனிவாசன்

‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ (GOAT) படத்தில் நடிக்க வாய்ப்பு வந்ததாகவும் ஆனால், அப்படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டதாகவும் மலையாள நடிகரும் இயக்குநருமான வினீத் சீனிவாசன் கூறியிருக்கிறார். நடிகர் விஜய், வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ (GOAT) படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கிறது. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த், மோகன், பிரபுதேவா, … Read more

டீக்கடையில் டீ, பொதுமக்களுடன் செல்ஃபி: திருவண்ணாமலையில் முதலமைச்சர் ஸ்டாலின் நடந்து சென்று பிரசாரம்

திருவண்ணாமலை: மக்களவை தேர்தலையொட்டி, திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வரும் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திருவண்ணாமலையில் வாக்கு வேட்டையாடி வருகிறார். இன்று காலை, திருவண்ணாமலை  தேரடி வீதியில் நடந்து சென்று திமுக வேட்பாளருக்கு வாக்கு சேகரித்தார்.  அப்போது எப்போதும்போல, டீக்கடையில் டீ குடித்தும் பொதுமக்களுடன் செல்பி எடுத்தும் மகிழ்ந்தார். முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று வேலூரில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட நிலையில், இன்று திருவண்ணாமலையில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். முன்னதாக திருவண்ணாமலை வந்த  மு.க.ஸ்டாலின், … Read more

பாசிட்டிவ்வாக பறந்து போன மார்ச் : ஐஸ்வர்யா ரஜினி பதிவு

நடிகர் ரஜினிகாந்தை போலவே அவரது மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினியும் தீவிரமான ஆன்மீகவாதியாக தன்னை வெளிப்படுத்திக் கொண்டு வருகிறார். கடைசியாக இவர் இயக்கிய லால் சலாம் படத்தின் படப்பிடிப்பை திருவண்ணாமலையில் தொடங்கியவர் இறுதிக்கட்டப் படப்பிடிப்பையும் அங்கு தான் நடத்தி முடித்தார். அதோடு, திருவண்ணாமலை, காஞ்சி காமாட்சி அம்மன், காசி உள்ளிட்ட பல பிரசித்தி பெற்ற ஆலயங்களுக்கும் தொடர்ந்து ஆன்மீக பயணம் சென்று வந்த ஐஸ்வர்யா ரஜினி, அது குறித்த புகைப்படங்களையும் எனது சோசியல் மீடியாவில் வெளியிட்டார். இந்நிலையில் … Read more

இந்தியாவிலேயே அதிக சம்பளம்.. படத்துக்கு படம் 50 கோடி எகிறுது.. லியோ டு தளபதி 69 வரை விஜய் சம்பளம்!

 சென்னை: நடிகர் விஜய் தளபதி 69 படத்துக்கு வாங்கப்போகும் சம்பளம் தான் தற்போது இந்தியாவிலேயே அதிகம் பேசப்பட்டுக் கொண்டிருக்கும் டாப்பிக்காக மாறியிருக்கிறது. பாலிவுட்டில் கான் நடிகர்களே வாங்காத அளவுக்கு ஒரு படத்துக்கு அதிக சம்பளம் வாங்கப் போகிறார் விஜய் என்கின்றனர். ஹாலிவுட்டில் மார்வெல் படங்களில் நடிக்கும் பல நடிகர்களே இன்னமும் 200 கோடி சம்பளத்தை

தேர்தல் பிரசார விளம்பரம்: பா.ஜனதா மீது தேர்தல் கமிஷனில் காங்கிரஸ் புகார்

புதுடெல்லி, நாடாளுமன்ற தேர்தலையொட்டி பா.ஜனதா சார்பில் வீடியோ வடிவில் பிரசார விளம்பரங்கள் தயாரிக்கப்பட்டு தொலைக்காட்சிகளிலும், சமூக வலைத்தளங்களிலும் ஒளிபரப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பா.ஜனதா தனது பிரசார விளம்பரங்களில் திரிக்கப்பட்ட மற்றும் சித்தரிக்கப்பட்ட வீடியோக்களை பயன்படுத்தி காங்கிரஸ் கட்சியை அவமதித்து வருவதாக பா.ஜனதா மீது தேர்தல் கமிஷனில் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது. கட்சியின் மூத்த தலைவர்களான சல்மான் குர்ஷித், பவன் கெரா மற்றும் குர்தீப் சப்பல் ஆகியோர் அடங்கிய பிரதிநிதிகள் குழு தேர்தல் கமிஷன் அலுவலகத்துக்கு நேரில் … Read more

இலங்கை-வங்காளதேசம் கடைசி டெஸ்ட்: 5-வது நாள் ஆட்டம் இன்று நடக்கிறது

சட்டோகிராம், இலங்கை – வங்காளதேசம் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சட்டோகிராமில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இலங்கை அணி 531 ரன்னும், வங்காளதேச அணி 178 ரன்னும் எடுத்தன. 353 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி 3-வது நாள் முடிவில் 6 விக்கெட்டுக்கு 102 ரன்கள் எடுத்திருந்தது. 4-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய இலங்கை அணி 40 ஓவர்களில் 7 விக்கெட் … Read more

தைவானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை; வைரலான வீடியோ

தைப்பே, தைவான் நாட்டின் தலைநகரான தைப்பேவில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவாகி இருந்தது. இதனை தைவான் நாட்டு மத்திய வானிலை ஆய்வு அமைப்பு தெரிவித்து உள்ளது. நிலநடுக்கம் 35 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இதனால், நகரின் பல்வேறு பகுதிகளிலும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தினால், ஏற்பட்ட பாதிப்பு உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை. எனினும், கிழக்கு நகரான ஹுவாலியனில் பல கட்டிடங்கள் … Read more

குடும்ப வன்முறைகளைத் தீர்பதற்கான புதிய சட்டம் கொண்டுவரப்படும் – மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க

தற்போதைய குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்து புதிய சட்டமூலமொன்றை பாராளுமன்றத்திற்கு கொண்டு வருவதற்கான அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதென மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்தார். அதேநேரம், வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள பெண்களை வலுவூட்டுவதற்கான சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்பித்த பின்னர் தேசிய மகளிர் ஆணைக்குழுவை ஸ்தாபிக்க வாய்ப்பு கிட்டும் என்றும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த போதே அவர் இதனை தெரிவித்தார். … Read more