“ஜெயலலிதாவின் இடத்தில் மோடி இருக்கிறார்” – டிடிவி தினகரன் கருத்து

“ஜெயலலிதா இன்று நம்மோடு இல்லை. ஜெயலலிதாவின் இடத்தில் பிரதமர் மோடி இருக்கிறார்” என்று, டிடிவி. தினகரன் தெரிவித்தார். தென்காசி தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிடும், ஜான் பாண்டியனுக்கு ஆதரவாக, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி. தினகரன் நேற்று பல்வேறு இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார். முன்னதாக, நேற்று முன்தினம் இரவு தூத்துக்குடி தமாகா வேட்பாளர் விஜய சீலனை ஆதரித்து, வைகுண்டத்தில் அவர் பேசியதாவது: கடந்த 60 ஆண்டுகளாக அதலபாதாளத்தில் இருந்த இந்திய பொருளாதாரம், பிரதமர் மோடி ஆட்சிக் காலத்தில் … Read more

4 வயது மகனை கழுத்தை நெறித்து கொன்ற பெங்களூரு பெண் சிஇஓ – குற்றப்பத்திரிகையில் அதிர்ச்சி

பெங்களூரு/பனாஜி: பெங்களூருவை சேர்ந்த தனியார் நிறுவனத்தின் பெண் சிஇஓ தன் 4 வயது மகனை விஷம் கொடுத்து கொலை செய்யவில்லை; கழுத்தை நெறித்தே கொலை செய்திருக்கிறார் என கோவா போலீஸார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தை சேர்ந்த சுச்சானா சேத் (39) பெங்களூருவில் The Mindful AI Lab என்ற நிறுவனத்தை தொடங்கி, அதன் தலைமை செயல் அதிகாரியாக இருந்தார். தனது கணவர் வெங்கட்ராமனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து தனியாக வசித்த … Read more

படே மியான் சோட் மியான் படத்தில் இணைந்த ஜவான் ஸ்டண்ட் இயக்குனர்!

பதான் & ஜவான் படத்தின் மூலம் புகழ் பெற்ற ஸ்டண்ட் இயக்குநர் கிரேக் மேக்ரே ‘படே மியான் சோட் மியான்’  படத்தின் ஸ்டண்ட் இயக்குனராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.  

`தேர்தல், ஐ.பி.எல் இருக்கட்டும், நாங்க வர்றோம்!' – ஏப்ரல் மாதத்தில் எதிர்பார்ப்பிலிருக்கும் படங்கள்!

தமிழ், தெலுங்கு, மலையாளம் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்படும் சில படங்கள் ஏப்ரல் மாத ரிலீஸுக்குத் தயாராகிவிட்டன. நாடாளுமன்றத் தேர்தல் நடக்கவிருப்பதால் இம்மாதத்தில் வெளியாகவிருந்த சில பெரிய திரைப்படங்களின் தேதியைத் தள்ளி வைத்துவிட்டனர். சில திரைப்படங்கள் தேர்தல் தேதிக்கு முன்பாகவே ரமலான் வெளியீடாகத் திரைக்கு வருகின்றன. சில தமிழ்த் திரைப்படங்கள், தமிழகத் தேர்தல் தேதிக்குப் பிறகு இம்மாத இறுதியில் திரைக்கு வருகின்றன. தமிழ் மட்டுமல்லாது, இந்த ஏப்ரல் மாதம் வெளியாகவிருக்கும் சில முக்கியமான படங்கள் குறித்து இங்கே பார்க்கலாம். … Read more

வயநாட்டில் ஆனி ராஜாவுக்கு எதிராக ராகுல் போட்டியிடுவது பொருத்தமற்ற செயல்! பினராயி விஜயன் விமர்சனம்…

கோழிக்கோடு:  வயநாடு தொகுதியில்,  கம்யூனிஸ்டு வேட்பாளர்  அன்னி ராஜாவுக்கு எதிராக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியை களமிறக்குவது பொருத்தமற்றது என்றும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை வெல்வது என்ற கூட்டணியின் பிரகடன இலக்கை தோற்கடிக்கும் செயல் என்று இந்தியா கூட்டணியைச் சேர்ந்த கேரள முதல்வர் பினராயி விஜயன் விமர்சனம் செய்துள்ளார். பாஜகவுக்கு எதிரான இந்தியா கூட்டணியில் காங்கிரஸ், கம்யூனிஸ்டு உள்பட 28 கட்சிகள் இணைந்திருந்தாலும், மாநில அளவிலான போட்டிகள் வரும்போது, ஒருவருக்கொருவர் மோதல் போக்கை கடைபிடித்து … Read more

அதிர வைத்த ரிங் ஆப் ஃபயர்! தைவானை புரட்டி போட்ட நிலநடுக்கம்! அதிர்ச்சி தரும் காட்சிகள்!

தைவான்: தைவானின் கிழக்கு பகுதியில் இன்று காலை 7.4 ரிக்டர் அளவிலான பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக தைவான், தெற்கு ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸின் சில பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கைகள் விடப்பட்டது. தைவானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அதிர்ச்சி தரும் வீடியோக்கள் பல வெளியாகி உள்ளன. உள்ளூர் நேரப்படி காலை 8:00 மணிக்கு (0000 GMT) நிலநடுக்கம் Source Link

த்ரிஷாவைத் தொடர்ந்து சம்பளத்தை உயர்த்திய நயன்தாரா

பொன்னியின் செல்வன், லியோ படங்களில் நடித்த பிறகு அரை டஜன் புதிய படங்களில் கமிட்டாகி நயன்தாராவை பின்னுக்கு தள்ளி இருக்கிறார் த்ரிஷா. அதோடு, 7 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி வந்த த்ரிஷா புதிய படங்களில் நடிப்பதற்கு 12 கோடி ரூபாயாக உயர்த்திருக்கிறார். இப்படி த்ரிஷா சம்பளத்தை உயர்த்தி விட்டதை அடுத்து நயன்தாராவும் புதிய படங்களில் நடிப்பதற்கு 12 கோடி சம்பளம் கேட்டு வருவதாக கோலிவுட்டில் ஒரு செய்தி வெளியாகி இருக்கிறது. ஹிந்தியில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்த … Read more

ஏகே ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. விடாமுயற்சி ஷூட்டிங் மீண்டும் ஆரம்பிக்கப்போகிறதாம்

சென்னை: அஜித் நேற்று அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அவருக்கு அங்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. இதனையடுத்து அவரது ரசிகர்கள் உச்சக்கட்ட அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து அவரது உடலுக்கு பெரிய பிரச்னை எதுவும் இல்லை; சிறிய அளவிலான அறுவை சிகிச்சைதான் என்று உறுதியானது. பூரணமாக குணமடைந்த அவர் தற்போது பைக் டூரில் இருக்கிறார். அவருடன் ஆரவ் உள்ளிட்டோரும்

தேர்தல் பத்திரம் பற்றிய நடைமுறையை தெரிவிக்க முடியாது – பாரத ஸ்டேட் வங்கி மறுப்பு

புதுடெல்லி, அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்க கடந்த 2018-ம் ஆண்டு தேர்தல் பத்திர திட்டம் கொண்டுவரப்பட்டது. அதற்கு எதிரான வழக்குகளை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, அத்திட்டத்தை ரத்து செய்தது. தேர்தல் பத்திரங்களை வாங்கியவர்கள், அவற்றின் மூலம் நன்கொடை பெற்ற கட்சிகள் உள்ளிட்ட விவரங்களை தேர்தல் கமிஷனிடம் அளிக்குமாறு பாரத ஸ்டேட் வங்கிக்கு உத்தரவிட்டது. அதன்படி, அந்த விவரங்களை வங்கி அளித்தது. அவை தேர்தல் கமிஷன் இணையதளத்தில் வெளியிடப்பட்டன. இந்நிலையில், தேர்தல் பத்திரங்களின் விற்பனை, பணமாக்குதல் தொடர்பாக பாரத … Read more

ஐ.பி.எல். கிரிக்கெட்: 'ஹாட்ரிக்' வெற்றி பெறும் முனைப்பில் கொல்கத்தா – டெல்லியுடன் இன்று மோதல்

விசாகப்பட்டினம், 10 அணிகள் பங்கேற்றுள்ள 17-வது ஐ.பி.எல். சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதன்படி விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெறும் 16-வது லீக் ஆட்டத்தில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தனது முதலாவது ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்சிடமும், 2-வது ஆட்டத்தில் 12 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்சிடமும் தோல்வி கண்டது. அடுத்து, … Read more