இன்றுடன் 33 வருட அரசியல் பயணத்தை முடிக்கும் மன்மோகன் சிங்

புதுடெல்லி  இன்றுடன் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மேலவை உறுப்பினர் பதவிக்காலம் முடிவடைகிறது.  இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், 33 ஆண்டுகளாக நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். இவர் இந்தியப் பொருளாதாரத்தில் பல துணிச்சலான சீர்திருத்த நடவடிக்கைகளை ஏற்படுத்தி உள்ள மன்மோகன்சிங், 1991 அக்டோபரில் முதல்முறையாக எம் பி  ஆனார். நரசிம்மராவ் அரசில் 1991-96 வரை நிதி அமைச்சராகவும், 2004 முதல் 2014 வரை பிரதமராகவும் இருந்தார். தற்போது 91 வயதாகும் மன்மோகன்சிங், இன்று (புதன்கிழமை) தனது பதவி காலத்தை … Read more

மயிலாடுதுறை: தனியார் பள்ளியில் 'முகாமிட்ட' சிறுத்தை- லீவ் அறிவித்த ஆட்சியர்!

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் செம்மங்குளம் அருகே தனியார் பள்ளியில் சிறுத்தை முகாமிட்டிருப்பதால் அப்பள்ளிக்கு இன்று விடுமுறையை அறிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர். மயிலாடுதுறை மாவட்டம் செம்மங்குளம் அருகே பால சரஸ்வதி மெட்ரிகுலேஷன் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் திடீரென சிறுத்தை நடமாட்டம் இருப்பது தெரியவந்தது. தற்போது சிறுத்தையின் நடமாட்டத்தை சிசிடிவி கேமரா மூலம் வனத்துறையினரும் கல்வித் Source Link

யுவராஜ் சிங் தயாரித்து, இயக்கி, நடிக்கப் போகும் அவரது பயோபிக்

இந்திய கிரிக்கெட் அணி 2011ம் ஆண்டு ஏப்ரல் 2ம் தேதி நடைபெற்ற ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்ற தினம் இன்று. 1983க்குப் பிறகு இரண்டாவது முறையாக அக்கோப்பையை வென்ற இந்திய அணியில் யுவராஜ் சிங்கும் ஒருவர். இந்திய அணிக்காக 304 ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளிலும், 59 டி20 போட்டிகளிலும், 40 டெஸ்ட் மேட்ச்களிலும் விளையாடிய ஆல்ரவுண்டர். அதிரடி ஆட்டத்திற்குப் பெயர் போனவர். இடையில் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்து அசத்தியவர். தன்னுடைய … Read more

யப்பா எவ்வளவு ஒற்றுமை.. சூர்யா – ஜோதிகா செஞ்ச செம விஷயம்.. ட்ரெண்டாகும் வீடியோ

மும்பை: கோலிவுட்டின் ஃபேவரைட் ஜோடி சூர்யா – ஜோதிகா. காதலித்து பல வருடங்கள் காத்திருந்து திருமணம் செய்துகொண்டார்கள். இப்போது மும்பையில் வசித்துவரும் அவர்கள் சினிமாக்களில் நடிப்பதில் பிஸியாக இருந்துவருகிறார்கள். ஜோதிகாவுக்கும் சூர்யா ரொம்பவே சப்போர்ட்டாக இருந்துவருகிறார். இந்தச் சூழலில் சூர்யாவும் ஜோதிகாவும் இணைந்து செய்திருக்கும் ஒரு விஷயம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. அதனைப் பார்த்த

பிரபல சமையல் கலைஞர் குணால் கபூருக்கு விவாகரத்து வழங்கி டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு

புதுடெல்லி, தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த சமையல் கலைஞர் குணால் கபூர், தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி குடும்ப நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். ஆனால், அவருக்கு விவாகரத்து வழங்க குடும்ப நீதிமன்றம் மறுப்பு தெரிவித்த நிலையில், டெல்லி ஐகோர்ட்டில் குணால் கபூர் மேல்முறையீடு செய்தார். சமையல் கலைஞர் குணால் கபூருக்கு கடந்த 2008-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. தொடர்ந்து 2012-ம் ஆண்டு இந்த தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதனிடையே தனது மனைவி தன்னை தொடர்ந்து … Read more

கேன்டிடேட் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: இன்று தொடக்கம்

டொரோன்டோ, உலக சாம்பியனுடன் மோதும் வீரர், வீராங் கனையை முடிவு செய்யும் கேன்டிடேட் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி கனடாவில் இன்று தொடங்குகிறது. கேன்டிடேட் செஸ் போட்டி கனடாவின் டொரோன்டோ நகரில் இன்று (புதன்கிழமை) தொடங்கி 23-ந்தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கு ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் 8 முன்னணி வீரர், வீராங்கனைகள் தகுதி பெற்றுள்ளனர். கேன்டிடேட் செஸ்சில் ஆண்கள் மற்றும் பெண்கள் போட்டி ஒரே நேரத்தில் நடத்தப்படுவது வரலாற்றில் இதுவே முதல் முறையாகும். ஆண்கள் பிரிவில் … Read more

ஐ.நா.,பணியாளர்கள் மரணம்: தற்செயலாக நடைபெற்ற தாக்குதல் – நெதன்யாகு விளக்கம்

ஜெருசலேம், காசாவில், இஸ்ரேல் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில், உணவு வழங்கும் பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்கள் 7 பேர் பலியானதாக உணவு அறக்கட்டளை தெரிவித்துள்ளது. மிகப்பெரிய உணவுக் கலைஞர் ஜோஸ் ஆன்ட்ரெஸால் நிறுவப்பட்ட உலக மத்திய சமையலறை என்ற உணவு அறக்கட்டளையில் இணைந்து காசாவில் மக்களுக்கு உணவு வழங்கும் பணியில் ஈடுபட்டு வந்த ஆஸ்திரேலிய, போலந்து, இங்கிலாந்து, அமெரிக்க கனடா இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் என ஏழு பேர் இஸ்ரேல் தாக்குதலில் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், உடனடியாக, … Read more

எரிபொருள் பம்பில் கோளாறு கிளான்ஸாவை ரீகால் செய்த டொயோட்டா

சமீபத்தில் பலேனோ காருக்கு மாருதி திரும்ப அழைக்கும் அழைப்பை விடுத்திருந்த நிலையில் ரீபேட்ஜ் செய்யப்பட்ட டொயோட்டா கிளான்ஸா காரிலும் உள்ள எரிபொருள் மோட்டார் பம்பில் உள்ள கோளாறினை நீக்க 2,305 கார்களை நாடு முழுவதும் திரும்ப அழைத்துள்ளது. கடந்த ஏப்ரல் 2, 2019, முதல் அக்டோபர் 6, 2019 வரை தயாரிக்கப்பட்ட வாகனங்களில் இடம்பெற்றுள்ள ஃப்யூவல் மோட்டார் பம்பில் (Fuel Pump Motor component) உள்ள பிரசன்னையின் காரணமாக வாகனம் ஸ்டார்ட் செய்யும் பொழுது சிரமங்கள் உள்ளதாக … Read more

விருதுநகர்: பறக்கும்படை அதிகாரிகளின் வாகன சோதனை… முறையான ஆவணம் இல்லை; 16 கிலோ தங்கம் பறிமுதல்!

ஏப்ரல் 19-ம் தேதி தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்த நிலையில், கடந்த மார்ச் 20-ம் தேதி முதல் தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. வாக்காளர்களுக்கு பணம், நகை மற்றும் பரிசு பொருள்கள் கொடுப்பதை தடுக்கும் பொருட்டு தேர்தல் பறக்கும் படை குழு அமைக்கப்பட்டிருக்கிறது. தேர்தல் நடத்தை விதிகளை கருத்தில் கொண்டு பொதுமக்கள் ரொக்கமாக கையில் 50,000 வரை மட்டும் எடுத்துச்செல்ல அனுமதிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் பறக்கும்படை … Read more

போதை பொருள் விவகாரத்தில் தமிழகத்தின் நிலையை பார்த்தால் கண்ணீர் வருகிறது: நிர்மலா சீதாராமன் வேதனை

பல்லாவரம்: போதை பொருள் விவகாரத்தில் தமிழகத்தின் நிலையைப் பார்த்தால் கண்ணீர் வருகிறது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வேதனை தெரிவித்தார். பல்லாவரம் தனியார் கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாணவ, மாணவிகளுடன் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துரையாடினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ஒரு நாட்டின் பாதுகாப்பு, இறையாண்மை சம்பந்தப்பட்ட விஷயத்தை தேர்தலுக்காகத்தான் பேசவேண்டும் என்பதில்லை. அதுகுறித்து எப்போது வேண்டுமானாலும் பேசலாம். அது நமது உரிமை. கச்சத்தீவு தொடர்பாக 50 ஆண்டுகளாக … Read more