ஜம்மு – ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் ஹெலிகாப்டர்களை தரையிறக்கி விமானப்படை ஒத்திகை

புதுடெல்லி: அவசர கால நடவடிக்கையின் ஒருபகுதியாக ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் விமானப்படையைச் சேர்ந்த ஹெலிகாப்டர்களை தரையிறக்கி இந்திய விமானப்படை ஒத்திகை நடத்தியுள்ளது. ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பிஜ்பெஹரா பகுதியில் உள்ள ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலையில் சுமார் 3.5 கிலோமீட்டர் தூரத்துக்கு இந்திய விமானப்படையைச் சேர்ந்த ஹெலிகாப்டர்கள் தரையிறக்கப்பட்டு ஒத்திகை பார்க்கப்பட்டது. இந்திய விமானப்படையில் உள்ள அமெரிக்காவின் தயாரிப் பான சினூக் உள்ளிட்ட 5 ஹெலிகாப்டர்கள் இந்த ஒத்திகையில் பங்கேற்றன. இந்த சோதனை நேற்று அதிகாலை 2.50 மணிக்கு … Read more

‘எல்லாவற்றையும் இழந்துவிட்டேன்’ – 25 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட சாம் பேங்க்மேன் வருத்தம்

வாஷிங்டன்: தன்னுடைய கிரிப்ட்டோ நிறுவனம் மூலம், வாடிக்கையாளர்களின் 8 பில்லியன் டாலர் (ரூ.66,400 கோடி) பணத்தை மோசடி செய்ததாக, கடந்த வாரம் அமெரிக்க நீதிமன்றம் சாம் பேங்க்மேனுக்கு 25 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இந்நிலையில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சாம் பேங்க்மேன், தன்னுடைய சரிவு குறித்து பகிர்ந்துள்ளார். ‘‘2022-ம் ஆண்டில் நான்எடுத்த பல தவறான முடிவுகள் காரணமாகவே எப்டிஎக்ஸ் திவாலானது. நான் மேற்கொண்ட நடவடிக்கைகள் சட்டவிரோதமானவை என்று அந்த சமயத்தில் நினைக்கவில்லை. பல வாடிக்கையாளர்கள் கடுமையான இழப்பைச் … Read more

Champions League T20: மீண்டும் வரும் சாம்பியன்ஸ் லீக் டி20 போட்டி! எப்போது தெரியுமா?

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், கிரிக்கெட் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ஆகியவை இணைந்து 2014ம் ஆண்டு கடைசியாக சாம்பியன்ஸ் லீக் டி20யில் விளையாடியது. தற்போது இந்த தொடரை மீண்டும் கொண்டு வர கிரிக்கெட் வாரியங்கள் தீவிர பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தொடரிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.  பெங்களூருவில் நடந்த இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸை வீழ்த்தி கோப்பையை வென்று இருந்தது சென்னை அணி. சாம்பியன்ஸ் … Read more

தமிழக அரசு வெள்ளம் நிவாரணம் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு : முதல்வர் அறிவிப்பு

வேலூர் இன்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மத்திய அரசிடம் வெள்ள நிவாரணம் கோரி வழக்கு தொடக்க உள்ளதாக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார். வேலூர் மாவட்டம் கோட்டை மைதானத்தில் தி.மு.க. கூட்டணி தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தி.மு.க. வேட்பாளர்கள் கதிர் ஆனந்த் (வேலூர்), ஜெகத்ரட்சகன் (அரக்கோணம்) ஆகியோரை ஆதரித்து, தி.மு.க. தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் ‘உதயசூரியன் சின்னத்துக்கு வாக்குகள் திரட்டினார். கூட்டத்தில் முதல்வர் மு க ஸ்டாலின்,- ”இந்த … Read more

தைவானில் அதி சக்திவாய்ந்த நிலநடுக்கம்- ரிக்டரில் 7.4 ஆக பதிவு- ஜப்பானிலும் சுனாமி எச்சரிக்கை!

தைபே: தைவான் நாட்டில் இன்று அதிகாலை அதிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டரில் இந்த நிலநடுக்கம் 7.4 ஆக பதிவாகி இருந்தது. இதனையடுத்து தைவான் நாட்டில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தைவானைத் தொடர்ந்து ஜப்பானிலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தைவானின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் கட்டிடங்கள் குலுங்கின. Source Link

14 வருடங்களுக்கு பிறகு ரீ-ரிலீஸ் ஆகும் பையா

கடந்த 2010ல் லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி, தமன்னா நடிப்பில் வெளியான படம் பையா. இந்த படம் 14 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கு மாற்றப்பட்டு வருகிற ஏப்ரல் 11ம் தேதி ரிலீஸ் செய்யப்படவுள்ளது. மேலும், பருத்திவீரன் படத்தில் முரட்டுத்தனமான கிராமத்து இளைஞனாக நடித்திருந்த கார்த்தி இந்த பையா படத்தில் நகரத்து இளைஞனாக காதல் உணர்வுகளை வெளிப்படுத்தும் மென்மையான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் வெளியான நேரத்தில் கார்த்தி, தமன்னா ஜோடிக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதோடு இந்த … Read more

என்னடா இது விஜய்க்கு வந்த சோதனை?.. லியோவை விட கோட் பிசினஸ் டல்லாம்.. அந்தணன் பகீர் பேச்சு!

சென்னை: தளபதி விஜய் சரியான நேரத்தில் தான் சினிமாவில் இருந்து அரசியலுக்கு செல்கிறார் என்றும் இல்லை என்றால் அவரது மார்க்கெட் சரிந்துக் கொண்டு வருவது வெளிப்படையாக அம்பலமாகி விடும் என வலைப்பேச்சு அந்தணன் பேசியிருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. விஜய் நடித்த படங்களிலேயே பிகில் படம் தான் 300 கோடி வசூல் எனக் கூறப்பட்டது. அதன்

5 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க இந்திய ஆக்கி அணி ஆஸ்திரேலியா பயணம்

புதுடெல்லி, பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகும் பொருட்டு இந்திய ஆக்கி அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்தியா-ஆஸ்திரேலியா ஆக்கி அணிகள் இடையிலான போட்டி தொடர் வருகிற 6, 7, 10, 12, 13 ஆகிய தேதிகளில் நடக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்க ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி நேற்று முன்தினம் இரவு ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டுச் சென்றது. முன்னதாக இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் … Read more

பணப் பட்டுவாடா புகார் எதிரொலி: சென்னையில் 5 இடங்களில் வருமானவரி துறை சோதனை

சென்னை: பணப் பட்டுவாடா புகார் தொடர்பாக சென்னையில் 5 இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை நடத்தினர். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வரும் 19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. வாக்குப் பதிவு நெருங்கி வரும் நிலையில், பணப் பட்டுவாடாவை முற்றிலும் தடுத்து நிறுத்தும் வகையில் தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, பறக்கும் படையினருடன் வருமான வரித் துறை, அமலாக்கத் துறை, சுங்கத்துறை அதிகாரிகள் உட்பட பல்வேறு … Read more

சட்டவிரோத மணல் குவாரி வழக்கில் ஏப்.25-ம் தேதி அமலாக்கத் துறை விசாரணைக்கு 5 ஆட்சியர்களும் ஆஜராக வேண்டும்: உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: சட்டவிரோத மணல் குவாரி தொடர்பான விசாரணைக்கு திருச்சி, கரூர், அரியலூர், தஞ்சாவூர், வேலூர்ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்களும் வரும் ஏப்.25-ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்பு கட்டாயம் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கண்டிப்புடன் உத்தரவிட்டுள்ளனர். தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக மணல் அள்ளப்பட்டு சட்டவிரோதமாக விற்பனை செய்து, அதன் மூலம் ஈட்டப்பட்ட பல கோடி ரூபாய் வருமானத்தை சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் … Read more