கைதி பாணியில் ரஜினி 171வது படத்தை திட்டமிடும் லோகேஷ்

ஞானவேல் இயக்கத்தில் ‛வேட்டையன்' படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. இதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் தனது 171வது படத்தில் நடிக்கவுள்ளார். அனிரூத் இசையமைக்கிறார். இதன் முன் தயாரிப்பு பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இதன் டைட்டில் டீசர் வருகின்ற ஏப்ரல் 22ம் தேதி வெளியாகும் என அறிவித்தனர். தொடர்ந்து தற்போது கிடைத்த புதிய தகவலின் படி, இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இதற்கு முன்பு … Read more

கயல் ஆனந்தி நடிக்கு ஒயிட் ரோஸ்

நடிகர்கள் கயல் ஆனந்தி, ஆர் கே சுரேஷ், விஜித் நடிப்பில் உருவாகி திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் ஒயிட் ரோஸ். நல்ல கதையம்சம் கொண்ட திரைக்கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் கயல் ஆனந்த்தின் நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் ஒயிட் ரோஸ். இயக்குநர் ராஜசேகர் இயக்கியுள்ள இந்தத் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் ஆர்.கே.சுரேஷ் நடித்துள்ளார்.

‘தமிழக உரிமைகளை பறித்தது பாஜக; துணை போனது அதிமுக’ – செல்வப்பெருந்தகை தாக்கு

கரூர்: தமிழக உரிமைகளை பறித்தது பாஜக, துணை போனது அதிமுக என காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்தார். கரூர் உழவர் சந்தை எதிரில் கரூர் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து அவர் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் தெரிவித்தது.. “மத்திய பாஜக அரசு கடந்த 10 ஆண்டுகளில் மக்களுக்கு என்ன செய்தது. தமிழகத்துக்கு என்ன செய்தது. திமுக ஆட்சிக்கு வந்த ஓராண்டு கரோனா மற்றும் பொருளாதார நெருக்கடி. இருந்தும் திமுக அரசு கொடுத்த … Read more

“கருத்துக்கணிப்பு வாயிலாக ஏமாற்றுகிறார் மோடி” – சித்தராமையா

கர்நாடக முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான‌ சித்தராமையா நேற்று மைசூருவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மக்களவைத் தேர்தல் நிலவரம் குறித்து பாஜகவினர் நாடு முழுவதும் பல்வேறு கட்டங்களாக ரகசிய கருத்துக்கணிப்பு மேற்கொண்டனர். அதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 200 இடங்களில் வெற்றி பெறுவதே கடினம் என தெரியவந்தது. அதனை மறைத்து 400 இடங்களில் வெற்றி பெறுவோம் என பாஜகவினர் பேசி வருகின்றனர். இத்தகைய பொய்யான கருத்துக்கணிப்பு வாயிலாக வாக்காளர்களை திசை திருப்பும் வேலையில் பாஜகவினர் இறங்கியுள்ளனர். … Read more

ஆம் ஆத்மி எம் பி சஞ்சய் சிங்குக்கு 6 மாதங்களுக்குப் பிறகு ஜாமீன்

டெல்லி கைதாகி ஆறு மாதங்களுக்குப் பிறகு ஆம் ஆத்மி நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் சிங்குக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. டெல்லி ஆளும் கட்சியான ஆம் ஆத்மிக்கு மதுபான கொள்கை முறைகேடு வழக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இவ்வழக்கு தொடர்பாக சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறை தனித்தனியே விசாரணை நடத்தி வருகின்றன. வழக்கில் டெல்லி துணை முதல்வராக இருந்த மனிஷ் சிசோடியா, நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் சிங், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் என ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்கள் தற்போது … Read more

தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து மரணங்கள் : புற்றுநோயால் நடிகர் விஸ்வேஷ்வர ராவ் காலமானார்

தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து நிகழ்ந்துள்ள மரணங்கள் திரையுலகினர் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் தான் காமெடி நடிகர் சேஷு மற்றும் நடிகர் டேனியல் பாலாஜி ஆகியோர் காலமாகினர். இப்போது மற்றொரு காமெடி மற்றும் குணச்சித்ர நடிகரான விஸ்வேஷ்வர(62) ராவ் காலமானார். ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட இவர் தமிழ், தெலுங்கில் குழந்தை நட்சத்திரமாக மட்டும் சுமார் 100 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். தமிழில் பிதாமகன், உன்னை நினைத்து உள்ளிட்ட ஏராளமான படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் … Read more

ஏப்ரல் 5 முதல் ஓடிடி தளத்தில், \"ஹனுமான்\" திரைப்படம் !!

‘ஹனுமான்’ படத்தின் தமிழ், கன்னடம் மற்றும் மலையாள பதிப்புகளை ஏப்ரல் 5 முதல் ஸ்ட்ரீம் செய்கிறது ஹாட் ஸ்டார். அதிரடி ஆக்சன், பொழுதுபோக்குடன் பக்தியும் கலந்த, இந்த சூப்பர் ஹீரோ என்டர்டெய்னர், பிரபல இயக்குநர் பிரசாந்த் வர்மா உடைய சினிமா யுனிவர்ஸின் முதல் படைப்பாகும். ‘ஹனுமான்’ படத்தில் தேஜா சஜ்ஜா மற்றும் அமிர்தா ஐயர்

பயணிகளிடம் கூடுதல் கட்டண வசூல்: தனியார் பேருந்துக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் @ தருமபுரி

தருமபுரி: தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலித்த தனியார் பேருந்துக்கு போக்குவரத்துத் துறையினர் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர். தருமபுரி – பாலக்கோடு வழித்தடத்தில் இயக்கப்படும் தனியார் பேருந்துகள் சிலவற்றில், பயணிகளிடம் நிர்ணயிக்கப்பட்டதை விட கூடுதலாக கட்டணம் வசூலிப்பதாக மாவட்ட ஆட்சியருக்கு தொடர்ந்து புகார் சென்றது. அதைத் தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க போக்குவரத்துத் துறையினருக்கு மாவட்ட ஆட்சியர் சாந்தி உத்தரவிட்டார். அதன்படி, பாலக்கோடு மோட்டார் வாகன … Read more

உ.பி.யின் 17 தனித் தொகுதிகள் இந்த முறை யாருக்கு?

புதுடெல்லி: உத்தரப்பிரதேசத்தில் உள்ள 17 தனித் தொகுதிகள் இந்தமுறை யாருக்கு என்ற கேள்வி எழுந்துள்ளது. இவற்றை ஆளும் பாஜக, எதிர்கட்சிகளான சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் குறி வைத்துள்ளன. எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் 17 தனித் தொகுதிகள் உ.பி.யில் உள்ளன. ஆனால், இங்குள்ள தலித் வாக்காளர்கள் ஆதரவுக் கட்சியாக இருந்தும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியால்(பிஎஸ்பி) அந்த தொகுதிகளில் தனது வெற்றியை நிலைநாட்ட முடியவில்லை. கடந்த 2014 மக்களவைத் தேர்தல் முதல் பாஜக இந்த … Read more

ராகுல் காந்தி நாளை வேட்பு மனுத் தாக்கல்

டெல்லி நாளை ராகுல் காந்தி வேட்பு மனுத் தாக்கல் செய்ய உள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. வரும் ஏப்ரல் 26 ஆம் தேதி கேரளாவில் ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. எனவே காங்கிரஸ், கம்யூனிஸ்ட், பாஜக உள்ளிட்ட அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  கடந்த 26 ஆம் தேதி இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறும் கேரளா உள்பட மாநிலங்களில் வேட்பு மனு தாக்கல் தொடங்கி வரும் 4-ம் தேதி மனுத் தாக்கல் செய்யக் கடைசி நாள் ஆகும். நாளை … Read more