அருணாச்சலில் சீனா ஆக்கிரமிப்பை மறைக்கவே கச்சத்தீவு நாடகம்: காங்கிரஸ் குற்றச்சாட்டு

சேலம்: “அருணாச்சலப் பிரதேசத்தில் சீனா ஆக்கிரமிப்பை மறைக்க கச்சத்தீவு நாடகத்தை பாஜக அரங்கேற்றி வருகிறது” என காங்கிரஸ் கட்சியின் மாநில செய்தி தொடர்பாளர் செந்தில் குற்றம் சாட்டியுள்ளார். சேலத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநில செய்தி தொடர்பாளர் செந்தில் செய்தியாளர்களிடம் கூறியது: “பிரதமர் மோடி தேர்தலுக்காக அரசியல் நாடகம் நடத்தி வருகிறார். கடந்த 10 ஆண்டாக தாங்கள் செய்த ஆட்சியின் சாதனைகளையும், திட்டங்களையும் மக்களுக்கு வெளிப்படுத்தாமல், கச்சத்தீவை முன்வைத்து அரசியல் செய்து நாடகத்தை பாஜக அரங்கேற்றி வருகிறது. அப்போதைய … Read more

ஒடிசாவில் பிஜேடி முக்கியத் தலைவர் பாண்டியன் சுவரொட்டிகள் அகற்றம் – பின்னணி என்ன?

புதுடெல்லி: ஒடிசாவில் பிஜு ஜனதா தளம் (பிஜேடி) கட்சியின் முக்கியத் தலைவர் வி.கே.பாண்டியன் சுவரொட்டிகள் அகற்றப்பட்டுள்ளன. இது, அக்கட்சிக்கு பாஜகவுடன் கூட்டணி உருவாகாமல் போனது காரணமாகக் கருதப்படுகிறது. ஒடிசா மாநிலத்தை கடந்த 2000 ஆண்டு முதல் ஆட்சி செய்யும் பிராந்தியக் கட்சி பிஜேடி. இதன் தலைவரான நவீன் பட்நாயக்(77) அதன் மாநில முதல்வராக ஐந்தாவது முறையாக தொடர்கிறார். தன் கூட்டணிக் கட்சியாக கடந்த 1998 முதல் இருந்த பாஜகவிடமிருந்து பிஜேடி 2009-ல் விலகி விட்டது. எனினும், தொடர்ந்து … Read more

பாஜகவை கண்டு ஜோதிமணி பயப்படுகிறார் – கரூர் வேட்பாளர் செந்தில்நாதன்

TN Lok Sabha Elections: என்னையும் பாஜகவையும் கண்டு ஜோதிமணி பயப்பட ஆரம்பித்துள்ளார் என்று கரூர் பாஜக வேட்பாளார் செந்தில்நாதன் தெரிவித்துள்ளார்.

ரூட்டை மாற்றிய ஆர்சிபி! பிளானை ஓபனாக சொன்ன கேப்டன் டூபிளெசிஸ்

ஐபிஎல் 2024 தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி), லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (எல்எஸ்ஜி) அணிகளுக்கு இடையிலான 15வது லீக் போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வெற்றி பெற்ற கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ் பவுலிங் வீசுவதாக அறிவித்தார். முதலில் பேட்டிங் ஆடுவதற்கான முக்கிய காரணத்தை அவரே தெரிவித்தார். இது குறித்து அவர் பேசும்போது, “கடந்த போட்டியில் முதலில் ஆடி தோல்வியை தழுவினோம், நாங்கள் எதிர்பார்த்தப்படி பிட்ச் இல்லை என்பதை பேட்டிங் ஆடிய … Read more

கடப்பாவில் காங்கிரஸ் வேட்பாளராக ஒய் எஸ் ஷர்மிளா ரெட்டி போட்டி

அமராவதி கடப்பா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக ஒய் எஸ் ஷர்மிளா ரெட்டி போட்டியிடுகிறார்.  நாடெங்கும் நாடாளுமன்றத் தேர்தல் வருகிற 19 ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடக்க இருக்கிறது. இன்று நாடாளுமன்ற தேர்தலில் 17 பேர் கொண்ட வேட்பாளர்களின் பட்டியலைக் காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. இதில் ஒடிசாவில் இருந்து 8 வேட்பாளர்கள், ஆந்திராவில் இருந்து 5 பேர். பீகாரில் இருந்து 3 பேர் மற்றும் மேற்கு வங்காளத்தில் … Read more

ரோபோ சங்கர் மருமகனின் மறுபக்கம்

ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவுக்கு அவரது தாய் மாமா கார்த்திக்குடன் சென்ற வாரம் கோலாகலமாக திருமணம் நடந்து முடிந்தது. ரோபோ சங்கரின் மனைவி பிரியங்காவின் தம்பி தான் இந்த கார்த்திக் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கையில் அவரை பற்றிய சில தகவல்களை அவரே கூறியுள்ளார். கார்த்திக் சிறுவயதாக இருக்கும்போதே அவரது தந்தை இறந்துவிட்டார். அதன்பின் தாயாருடன் மிகவும் கஷ்டப்பட்டு உழைத்த அவர் தொடர்வோம் என்ற தொண்டு நிறுவனத்தின் கீழ் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். அவர் அண்மையில் … Read more

Actress Jyotika: மகிழ்ச்சி மட்டுமில்ல வியர்வையும் டபுள்தானாம்… ஜோதிகா பகிர்ந்த வொர்க்அவுட் வீடியோ!

சென்னை: நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் இணைந்து பல படங்களில் நடித்து அதன் மூலம் ஏற்பட்ட பழக்கத்தில் ஒருவரை ஒருவர் காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணமும் செய்து கொண்டனர். இவர்களுக்கு தியா மற்றும் தேவ் என இரு குழந்தைகள் உள்ள நிலையில் அவர்கள் பெயரிலேயே 2D என்டர்டெயின்மெண்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் துவங்கி சிறப்பாக செயல்படுத்தி

நெருக்கடியைத் தீர்க்க மிகப் பொருத்தமான தலைவர் ரணில் விக்ரமசிங்க என்பது தற்போது உறுதியாகியுள்ளது

அவரது தலைமை எதிர்காலத்திலும் தேவை. 24 இலட்சம் பேருக்கு அஸ்வெசம வழங்கிய பின்னர் முழுமையாக மீளாய்வு செய்யப்படும் – நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க. நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மிகவும் திறமையான மற்றும் பொருத்தமான தலைவர் என்பதை இதுவரை அடைந்துள்ள முன்னேற்றம் உறுதிப்படுத்துவதாகவும், எனவே எதிர்காலத்தில் அவரது தலைமை நாட்டுக்குத் தேவை எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார். இதுவரையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை வைத்து நாட்டை … Read more

`Innova Car… தங்கச் சங்கிலி தருகிறேன்' – அதிமுக-வினருக்கு பரிசுகள் அறிவித்த விஜயபாஸ்கர்!

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் கருப்பையாவை ஆதரித்து, புதுக்கோட்டை வடக்கு மாவட்ட அ.தி.மு.க சார்பில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தலைமையில் நகர செயலாளர்கள் மற்றும் வட்டச் செயலாளர்களின் கூட்டம், புதுக்கோட்டை ஆலங்குடி சாலையில் உள்ள அ.தி.மு.க தேர்தல் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக நிர்வாகிகள் மத்தியில் பேசிய முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், சி விஜயபாஸ்கர் “நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளர் கருப்பையாவை வெற்றி பெற வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் … Read more

வாக்குப் பதிவு இயந்திர குறைபாடுகளைக் களைய உத்தரவிட கோரி திமுக வழக்கு

சென்னை: வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கு ஒப்புதல் வழங்குவது தொடர்பான விதிமுறைகளை வகுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக சார்பில், அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த மனுவில், ‘கடந்த 1950 முதல் 1990 வரை தேர்தல்களில் வாக்குச்சீட்டு நடைமுறை பின்பற்றப்பட்டு வந்தது. அதன் பிறகு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. சமீப காலமாக மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், ஒப்புகைச் … Read more