‘தக்காளி கூழ் ஆலை அமைக்கப்படும்’ – தருமபுரி பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணி வாக்குறுதி
தருமபுரி: “தருமபுரி மக்களவைத் தொகுதியில் பாமக வெற்றி பெற்றால், பாலக்கோடு பகுதியில் தக்காளி கூழ் தொழிற்சாலை அமைக்கப்படும்” என்று வாக்குறுதி அளித்து தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் சவுமியா அன்புமணி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். தருமபுரி மக்களவைத் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமக சார்பில் சவுமியா அன்புமணி போட்டியிடுகிறார். தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஒன்றியங்கள் வாரியாக வேட்பாளர் சவுமியா அன்புமணியும், கட்சி நிர்வாகிகளும் தினமும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வரிசையில் இன்று காலை பாலக்கோடு … Read more