தோட்டப் பகுதி மக்களுக்கு காணி உரிமைகளை வழங்குவதற்காக அமைச்சரவை அனுமதி

தோட்ட மக்களுக்கான காணி உரிமைகளை வழங்குவதற்கான விசேட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்காக 2024வரவு செலவுத் திட்ட யோசனைக்கு ஊடாக தோட்டப் பகுதி மக்களுக்கு காணி உரிமைகளை வழங்குதல் குறித்த யோசனை நிதிப் பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைக்கான அமைச்சராக ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்டது. இவ்யோசனையை நடைமுறைப்படுத்துவதற்காக அமைச்சரவை அந்தஸ்தற்ற இராஜாங்க பெருந்தோட்டக் கைத்தொழில் மறுசீரமைப்பு அமைச்சின் ஒத்துழைப்புடன் நீர் வளங்கள் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சு மற்றும் பெருந்தோட்ட வலயம் என்பவற்றுக்கான புதிய கிராமிய அபிவிருத்தி … Read more

பால்டிமோர் பாலம் விபத்து… கப்பலில் உள்ள 20 இந்திய பணியாளர்கள் நிலை என்ன..!

அமெரிக்காவின் பால்டிமோர் நகரில் உள்ள பாலத்தின் மீது கப்பல் மோதியதன் காரணமாக 2.6 கிலோமீட்டர் நீளமுள்ள பாலம் இடிந்து விழுந்தது. கப்பலில் 20 இந்தியர்கள் மற்றும் ஒரு இலங்கையர் உட்பட 21 பணியாளர்கள் இருந்தனர்.

SBI: 1994-ல் தாத்தா வாங்கிய 500 ரூபாய் பங்கை கண்டுபிடித்தவர்… இப்ப இவ்வளவு மதிப்பா?!

சண்டிகரைச் சேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணர் தன்மய் மோதிவாலா. இவர் தனது குடும்ப சொத்து பத்திரங்களை அடுக்கிக் கொண்டிருந்தார். அப்போது அவரின் கையில் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவிலிருந்து பெறப்பட்ட சான்றிதழ் ஒன்று கிடைத்திருக்கிறது. அது என்னவென்று பார்த்தவருக்கு ஒரே ஆச்சர்யம். SBI 1994-ல் அவரது தாத்தா 500 ரூபாய் மதிப்புள்ள எஸ்பிஐ பங்குகளை வாங்கியிருக்கிறார். அந்த பங்குகளை அவரது தாத்தா விற்கவே இல்லை. காலப்போக்கில் அதைப் பற்றி மறந்து போயிருக்கிறார். 1994-ல் அவரது தாத்தா செய்த ஒரு … Read more

மயிலாடுதுறை பாமக வேட்பாளரை மறித்து முழக்கமிட்ட கரும்பு விவசாயிகள்!

கும்பகோணம்: நரசிம்மபுரத்தில் வாக்கு சேகரித்துச் சென்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பாமக வேட்பாளரை மறித்து கரும்பு விவசாயிகள் முழக்கமிட்டனர். மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியின் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பாமக வேட்பாளர் ம.க.ஸ்டாலின் இன்று பாபநாசம் வட்டத்தில் வாக்கு சேகரித்தார். இவர், ஆதனூர்-புள்ளபூதங்குடி இடையில் உள்ள நரசிம்மபுரத்தில், கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் வாகனத்தில் நின்றபடிச் சென்று வாக்குச் சேகரித்துக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த திருமண்டங்குடி தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகத்தால் பாதிக்கப்பட்டு, கடந்த 291 நாட்களாக போராடி … Read more

கடப்பாவில் ஒய்.எஸ்.சர்மிளா போட்டி – 17 வேட்பாளர்களை அறிவித்தது காங்கிரஸ்

புதுடெல்லி: ஆந்திரப் பிரதேசம், பிஹார், ஓடிசா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய நான்கு மாநிலங்களின் 17 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் கட்சி இன்று (ஏப்.2) வெளியிட்டுள்ளது. ஒடிசாவில் 8, ஆந்திரப் பிரதேசத்தில் 5, பிஹாரில் 3 மற்றும் மேற்கு வங்கத்தில் 1 ஆகிய மக்களவைத் தொகுகளுக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் அறிவித்துள்ளது. அதன்படி, ஆந்திரப் பிரதேசத்தின் கடப்பா தொகுதியில் அம்மாநில முதல்வர் ஜெகனின் தங்கையும், மாநில காங்கிரஸ் கட்சித் தலைவருமான ஒய்.எஸ்.சர்மிளா போட்டியிடுகிறார். அதேபோல் … Read more

கனடா பள்ளிகளில் உணவுத் திட்டத்தை அறிவித்த பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

ஒட்டாவா: கனடா பள்ளிகளில் உணவுத் திட்டத்தை கொண்டுவர இருப்பதாக அந்நாட்டுப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார். அந்நாட்டின் 2024-ம் ஆண்டுக்கான பட்ஜெட் வரும் ஏப்ரல் 16-ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், அதன் முன்னோட்டமாக தேசிய பள்ளி உணவுத் திட்டத்தை அமல்படுத்த இருப்பதாக பிரதமர் அறிவித்திருக்கிறார். இந்தத் திட்டத்துக்காக 5 ஆண்டுகளுக்கு 1 பில்லியன் டாலர் ஒதுக்கப்படும் என்றும். ஆண்டுதோறும் 4 லட்சம் குழந்தைகளுக்கு இத்திட்டத்தின் மூலம் உணவு வழங்கப்படும் என்றும் கனடா அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. … Read more

ராகுல் காந்தி கேரளாவை விடுத்து உத்தர பிரதேசத்தில் போட்டியிட வேண்டும்: CPI(M) காட்டம்

Lok Sabha Elections: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஏன் பாஜகவை நேருக்கு நேர் எதிர்த்துப் போட்டியிடவில்லை என்று கேட்ட சுபாஷினி அலி, பாஜகவின் கோட்டையான உத்தரப் பிரதேசத்தில் இருந்து ராகுல் காந்தி போட்டியிட வேண்டும் என்றும் கூறினார்.

பிடிஆர் கிட்ட இந்த மாற்றத்தை கவனிச்சீங்களா? மதுரை களத்தில் சூறாவளி பிரச்சாரம்

Minister PTR Palanivel thiagarajan; அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மதுரையில் சுறுசுறுப்பாக இந்தியா கூட்டணி வேட்பாளரான சு.வெங்கடேசனை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறார். பிரச்சாரத்தின்போது அவர் புள்ளவிவரங்களோடு பாஜகவுக்கு பதிலடியும் கொடுத்து வருகிறார்.

மது போதையில் மக்களைக் கடிக்க முயன்ற இங்கிலாந்து ராணுவ அதிகாரி

சென்னை சென்னை ராயப்பேட்டையில் உள்ள வணிக வளாகம் முன்பு மது போதையில் இங்கிலாந்து நாட்டு ராணுவ அதிகாரி மக்களைக் கடித்துத் தாக்க முயன்றுள்ளார்  சென்னை ராயப்பேட்டையில் உள்ள பிரபல வணிக வளாகத்துக்கு நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு வந்த வெளிநாட்டை சேர்ந்த வாலிபர் ஒருவர், மது போதையில் பொதுமக்களிடம் தகராற்றில் ஈடுபட்டு அவர்களைக் கடிக்க முயன்றுள்ளார் அவரைப் பொதுமக்கள் தட்டிக்கேட்டபோது, கடும் ரகளையில் ஈடுபட்டார். எனவே அவரை பிடித்து கைகளைக் கட்டி ஆட்டோ ஒன்றில் ஏற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்ப … Read more

கடப்பா தொகுதியில் போட்டி.. ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கைக்கு காங்கிரஸ் வாய்ப்பு!

அமராவதி: ஆந்திராவில் லோக்சபா தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தல் ஒன்றாக நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கையான ஒய்எஸ் சர்மிளா காங்கிரஸ் கட்சியின் கடப்பா தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக அந்த கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி உள்ளார். இந்நிலையில் Source Link