`கொலை மிரட்டல் விடுத்தாரா? சரண்யா பொன்வண்ணன்' – உண்மையில் நடந்தது இதுதான்…

தமிழ் சினிமாவின் பாசக்கார; சென்டிமென்ட் தாயாக இருப்பவர் நடிகை சரண்யா பொன்வண்ணன். இந்நிலையில் சரண்யா பொன்வண்ணன் மீதுதான் கொலைமிரட்டல் புகார் எழுந்து தற்போது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சினிமா காட்சிகளில்கூட அவ்வளவு சீக்கிரம் கோபப்படாத சாஃப்ட்டான சரண்யா கொலைமிரட்டல் விடுக்கும் அளவுக்குப் போனாரா? புகார் கொடுத்த பக்கத்து வீட்டு பெண்மணிக்கும் சரண்யா பொன்வண்ணனுக்கும் இடையே நடந்தது என்ன? விசாரித்தபோதுதான், இரு தரப்பிலும் நடந்த உண்மைத் தகவல்கள் கிடைத்தன. ‘நாயகன்’ படத்தின் மூலம் பிரபலமாகி பல்வேறு படங்களில் நடித்துத் தமிழ் … Read more

மணல் குவாரி முறைகேடு: அமலாக்கத்துறை சம்மனுக்கு ஆஜராக 5 மாவட்ட நீதிபதிகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு…

டெல்லி: மணல் குவாரி முறைகேடு தொடர்பாக  அமலாக்கத்துறை சம்மனுக்கு ஆஜராக 5 மாவட்ட நீதிபதிகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள மணல்குவாரிகளை அரசு நடத்துவதாக கூறி வரும் நிலையில், அதை ஒப்பந்ததாரர்களுக்கு கைமாற்றி வருமானம் ஈட்டி வருகிறது. இதில் ஏராளமான முறைகேடுகள் நடைபெறுவதாக புகார்கள் உள்ளன. இதுதொடர்பாக அமலாக்கத்துறை ரெய்டு நடத்தியது. இதையடுத்து,  மணல் குவாரி முறைகேடு தொடர்பாக 5 மாவட்ட கலெக்டர்கள் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பியது. இதை … Read more

சத்தீஸ்கர்: அதிரடிப்படையின் வேட்டையில் அலறி ஓடிய மாவோயிஸ்டுகள்.. 9 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!

சுக்மா: சத்தீஸ்கர் மாநிலத்தில் லோக்சபா தேர்தலை சீர்குலைக்க ஊடுருவிய மாவோயிஸ்டுகள் 9 பேரை பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தினர். சத்தீஸ்கர், ஒடிஷா, ஆந்திரா, மகாராஷ்டிரா மாநிலங்களின் எல்லைகளில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருந்து வருகிறது. இம்மாநிலங்களின் மலை பிரதேச ஆதிகுடிகளின் ஆதரவுடன் இத்தனை ஆண்டுகாலம் அரசுடன் மாவோயிஸ்டுகள் யுத்தம் நடத்தி வந்தனர். கடந்த சில ஆண்டுகளாக Source Link

'சென்னை ஸ்டோரி' படப்பிடிப்பில் ஸ்ருதிஹாசன்

பிலிப் ஜான் இயக்கத்தில், ஸ்ருதிஹாசன் நடிக்கும் சர்வதேசத் திரைப்படமான 'சென்னை ஸ்டோரி' படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகியுள்ளது. திமேரி என் முராரி எழுதிய 'தி அரேஞ்ச்மென்ட்ஸ் ஆப் லவ்' என்ற நாவலைத் தழுவி எடுக்கப்படும் படம் இது. இந்தக் காலத்து காதல், காமெடி கலந்த படமாக சென்னை பின்னணியில் இப்படம் உருவாக உள்ளது. தனியார் துப்பறியும் நிபுணர் அனு என்ற கதாபாத்திரத்தில் ஸ்ருதி நடிக்கிறார். “புதிய நாள், புதிய படம், புதிய எனர்ஜி, நன்றி,” என பூஜை மற்றும் … Read more

Baakiyalakshmi: பாக்கியாவின் ரெஸ்டாரெண்ட் பார்க்கிங் பிரச்சினை.. தீர்த்து வைத்த பழனிச்சாமி!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலான பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோடும் ரசிகர்களை கவரும் வகையில் சிறப்பாக அமைந்திருந்தது. ஆயிரம் எபிசோட்களை தாண்டி இந்த சீரியல் வெற்றிகரமாக ரசிகர்களை கவர்ந்துவரும் நிலையில் விரைவில் சீரியல் நிறைவடையவுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது எழில் மற்றும் செழியனின் வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் தீர்க்கப்பட்டுள்ளன. இதையடுத்து இன்றைய தினம் அடுத்தடுத்த பிரச்சினைகளுக்கான முகாந்திரங்களை

மத்திய மாகாண ஆளுநர் தலைமையில் இடம்பெற்ற நுவரெலிய மாவட்ட பருவகால வசந்த விழா

எழில் கொஞ்சும் நுவரெலியாவின் பருவகால வசந்த விழாவின் ஆரம்ப நிகழ்வு நுவரெலிய நகரத்தின் மத்திய விமர்சையாக நேற்று (01) இடம்பெற்றது. மத்திய மாகாண ஆளுநர் லலித் யு கமகே தலைமையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் பங்குபற்றலுடன் நடைபெற்றது. பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு மற்றும் குதிரையேற்றப் பிரிவின் குதிரைச் சவாரியுடன் ஆரம்பமான வசந்த விழாவில் நடனம், நாட்டியம், பாண்டு வாத்தியம் உட்பட பல விசேட நிகழ்வுகள் இடம்பெற்றன. இந்நிகழ்வில் நகர சபை மற்றும் பிரதேச செயலக அதிகாரிகள், ஹோட்டல் உரிமையாளர்கள், … Read more

Patanjali: `உங்கள் மன்னிப்பை ஏற்க முடியாது..!' – பாபா ராம்தேவைச் சாடிய உச்ச நீதிமன்றம்

பதஞ்சலி நிறுவனத்தின் நிறுவனர் பாபா ராம்தேவ். அவரது நிறுவன மருந்துப்பொருள்களின் விளம்பரங்களில் தவறான தகவல்கள் இடம்பெறுவதாகவும், அதைத் தடை செய்யக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், “விளம்பரங்களில் தவறான தகவல்களை வெளியிடக் கூடாது. பதஞ்சலி நிறுவனத்தின் பொய்யான மற்றும் தவறான விளம்பரங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். பதஞ்சலி கடை இந்த நீதிமன்றம் இத்தகைய மீறல்களை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்ளும், ஒவ்வொரு பொருளின் விளம்பரத்தின்மீதும் ரூ.1 கோடி … Read more

மைதான் புதிய டிரெய்லர்: அஜய் தேவ்கனின் போராட்டமும் வெற்றியும் கலந்த உணர்வூட்டும் கதை

திரைப்பட ஆர்வலர்களே, சவால்களை மீறி விளையாட்டு உலகில் தங்களது பெயரை பொறித்துக்கொண்ட பயிற்சியாளர் சையத் அப்துல் ரஹீம் மற்றும் அவரது அணியின் ஊக்கம் மிக்க சாகாவை சாட்சியாக இருக்க தயாராகுங்கள். அஜய் தேவ்கன் நடிக்கும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான மைதான் ஏப்ரல் 10 அன்று திரைக்கு வரவுள்ளது. காலதாமதத்திற்கு பிறகு, ரசிகர்கள் கடைசியாக மகிழ்ச்சியடையலாம், ஏனெனில் படக்குழுவினர் செவ்வாயன்று புதிய டிரெய்லரை வெளியிட்டனர். மைதானில், அஜய் தேவ்கன், 1952 முதல் 1962 வரையிலான தங்க யுகத்தில் இந்திய … Read more

கோவை – துபாய் விமானம், கோவை – பெங்களூரு இரவு ரயில் சேவை நிலை என்ன? – அண்ணாமலை விளக்கம்

கோவை: கோவை-துபாய் இடையே விமான சேவை தொடங்கவும், கோவையிலிருந்து பெங்களூருவிற்கு இரவு நேர ரயில் சேவை தொடங்க வேண்டும் என்ற 10 ஆண்டு கால கோரிக்கை குறித்து அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார். தொழில் நகரான கோவையில் இருந்து தற்போது ஷார்ஜா, சிங்கப்பூர் ஆகிய இரு வெளிநாடுகளுக்கு மட்டுமே விமான சேவை வழங்கப்படுகிறது. துபாய் உள்ளிட்ட பல வெளிநாடுகளுக்கு புதிதாக விமான சேவை தொடங்க வேண்டும் என தொழில்துறையினர் சார்பில் தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. அதே போல் … Read more

“தேர்தலுக்கு முன் மேலும் சில ஆம் ஆத்மி தலைவர்கள் கைதாக வாய்ப்பு” – டெல்லி அமைச்சர் அதிஷி குற்றச்சாட்டு

புதுடெல்லி: “பாஜகவில் இணையாவிட்டால் கைது செய்யப்படுவேன் என எனக்கு மிரட்டல் வருகிறது. நான் உட்பட ஆம் ஆத்மியின் மேலும் சில தலைவர்கள் குறிப்பாக, சவுரப் பரத்வாஜ், துர்கேஷ் பதக், ராகவ் சதா உள்ளிட்டோர் தேர்தலுக்கு முன் கைது செய்யப்படலாம்.” என்று டெல்லி கல்வி அமைச்சர் அதிஷி குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக புதுடெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிஷி, “எனது நெருங்கிய உதவியாளர் ஒருவர் மூலம், எனது அரசியல் வாழ்க்கையை காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்றால், பாஜகவில் சேர வேண்டும் … Read more