விஸ்தாரா நெருக்கடி… 100க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து… விளக்கம் கேட்கும் DGCA!

Vistara Airlines Crisis: நாடு முழுவதும் பல விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக விஸ்தாரா பயணிகள் புகார் தெரிவித்ததை அடுத்து, சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது. 

நீங்கள் மன்னிப்பு கோரியது உதட்டளவிலானது;  பாபா ராம்தேவ்-ஐ கடுமையாக விமர்சித்த உச்சநீதிமன்றம்

டெல்லி: தவறான விளம்பரங்களை வெளியிட்டது தொடர்பான வழக்கில், இன்று  உச்சநீதிமன்றத்தில்,  நேரில் மன்னிப்பு கோரிய பாபா ராம்தேவ்-ஐ கடுமையாக விமர்சனம் செய்த நீதிபதிகள், இவர்கள்  மன்னிப்பு கோரியது உதட்டளவிலானது என்று கூறியதுடன், இதுதொடர்பாக ஒரு வாரத்திற்குள்  பிரம்மான பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டது. முன்னதாக, பதஞ்சலி ஆயுர்வேத மருந்துகளுக்கான விளம்பரங்களில் தவறான தகவல்கள் வெளியிடுவது குறித்து உச்சநீதிமன்றம் அனுப்பிய நோட்டீஸுக்கு பதிலளிக்காததால், அந்நிறுவனத்தின் இணை நிறுவனர் பாபா ராம்தேவை நேரில் ஆஜராக உச்சநீதிமன்றம்  மார்ச் 19ந்தேதி அதிரடி  … Read more

ஆரணியில் அதிரடி! சில்க் சிட்டியில் திமுக, அதிமுக வெல்லுமா? கிரவுண்ட் ரிப்போர்ட் இதோ! செம பாயிண்ட்!

ஆரணி: பட்டு நகரம் என அழைக்கப்படும் ஆரணியில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் யார் வெல்வார்கள் என்பது குறித்த கள நிலவரத்தை பார்க்கலாம் ஆரணி பட்டு, ஆரணி அரிசி, தறி உள்ளிட்டவைகளுக்கு பெயர் பெற்ற இந்த நகரம், முதலில் காடுகளாக இருந்தது. காடுகளை சங்க காலங்களில் ஆரணியம் என அழைப்பதுண்டு. அந்த ஆரணியம் என்ற பெயரில் இருந்து வந்ததுதான் Source Link

தெலுங்கிலும் சாதனை படைக்குமா 'மஞ்சும்மேல் பாய்ஸ்'?

சிதம்பரம் இயக்கத்தில், சவுபின் ஷாகிர், ஸ்ரீநாத் பாஸி, பாலு வர்கீஸ் மற்றும் பலர் நடித்த 'மஞ்சும்மேல் பாய்ஸ்' படம் பிப்ரவரி 22ம் தேதி மலையாளத்தில் வெளியானது. தமிழகத்திலும் அப்படம் தமிழில் டப்பிங் செய்யப்படாமல் மலையாளத்திலேயே வெளியானது. இங்கு சுமார் 50 கோடிக்கும் அதிகமாக வசூலித்து பெரிய லாபத்தைக் கொடுத்தது. சுமார் 15 கோடி ரூபாய் செலவில் தயாரான படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை புரிந்துள்ளது. தற்போது இப்படத்தைத் தெலுங்கிலும் டப்பிங் செய்து ஏப்ரல் 6ம் … Read more

தக் லைஃப் படத்திலிருந்து விலகிய ஜெயம் ரவி.. சிம்பு தான் காரணமா? இருவருக்கும் என்ன பிரச்சனை?

சென்னை: மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் தக் லைஃப் படத்தில் கமிட்டாகி இருந்த ஜெயம் ரவி, படத்தில் இருந்து திடீரென விலகியதற்கு சிம்பு இந்த படத்தில் ஒப்பந்தம் ஆகியதுதான் காரணம் என வலைப்பேச்சு அந்தணன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அப்படி அவர்களுக்குள் என்ன பிரச்சனை என்று தெரியவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். வரலாற்று காவியமான பொன்னியின்

செல்போன் பேசியபடி ஸ்கூட்டரில் சென்ற பெண்ணுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்

பெங்களூரு, பெங்களூருவில் சாலை விபத்துக்களில் சிக்கி ஏராளமானோர் உயிரிழந்து வருகின்றனர். போக்குவரத்து விதிகளை மீறி வாகனங்களை ஓட்டும்போது விபத்துகளில் சிக்கி அவர்கள் பலியாகின்றனர். இதனால் பெங்களூருவில் போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பெண் ஒருவா் ஸ்கூட்டர் ஓட்டும்போது துப்பட்டாவை தலையை சுற்றி கட்டிவிட்டு, அதில் செல்போனை செருகி வைத்து பேசிக்கொண்டே சென்ற வீடியோ சமீபத்தில் வைரலானது. புதுமையான யோசனை என பலர் கிண்டலாக கருத்து தெரிவித்தனர். மேலும் … Read more

பாகிஸ்தான் அரசியலில் திடீர் திருப்பம்: இம்ரான்கானின் சிறை தண்டனை நிறுத்தி வைப்பு

இஸ்லாமாபாத், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் (வயது 71) மீது பணமோசடி, அதிகார துஷ்பிரயோகம் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளன. இதில் அவர் பிரதமராக இருந்தபோது பெற்ற பரிசுப்பொருட்களை விற்று ஊழல் செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. தோஷகானா ஊழல் எனப்படும் இந்த வழக்கில் இம்ரான்கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபி (59) ஆகியோருக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி கடந்த ஜனவரி 31-ந்தேதி முதல் அவர்கள் இருவரும் சிறை … Read more

தேசிய நீர்வரைவியல் சபைக்கான தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம்

தேசிய நீர்வரைவியல் சபையின் புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று (ஏப்ரல் 1) கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றது. இவர்களுக்கான நிமனக் கடிதங்களை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன வழங்கிவைத்தார். 2024ஆம் ஆண்டின் 7ஆம் இலக்க தேசிய நீர்வரைவியல் சட்டத்தின் கீழ் தேசிய நீர்வரைவியல் சபை நிறுவப்பட்டது. தேசிய நீர்வரைவியல் சபையின் புதிதாக நியமிக்கப்பட்ட தலைவர் ரியர் அட்மிரல் (ஓய்வு) சிசிர ஜெயக்கொடி இன்று பாதுகாப்பு … Read more

Chiranjeevi: "மிடில் க்ளாஸ் மென்டாலிட்டி என்று சொன்னாலும் எனக்குக் கவலை இல்லை"- நடிகர் சிரஞ்சீவி

தெலுங்கு திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் சிரஞ்சீவி. சமீபத்தில் இவர், நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் கலந்துரையாடியிருக்கும் காணொலிகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்நேர்காணலில் சிரஞ்சீவி, தனது வாழ்வில் தான் பின்பற்றும் சிக்கனங்கள் குறித்து பேசியிருப்பது கவனம் ஈர்த்துள்ளது. விஜய் தேவரகொண்டா, சிரஞ்சீவி இது குறித்து பேசியிருக்கும் சிரஞ்சீவி, “எங்கள் வீட்டில் யாரும் சிக்கனமாக இருக்க மாட்டார்கள். வீட்டில் எல்லா லைட்டுகளையும் அப்படியே போட்டுவிட்டு சென்றுவிடுவார்கள். ஹீட்டர் போடுவார்கள் அதையும் அப்படியே ஆன் செய்துவிட்டுச் சென்றுவிடுவார்கள். … Read more

‘ஸ்டார் தொகுதி’ தென்காசி கள நிலவரம் என்ன? – ஒரு பார்வை அலசல்

தென்காசி (தனி) மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி போட்டியிடுவதால், இத்தொகுதி நட்சத்திர அந்தஸ்து பெற்றுள்ளது. தென்காசி தொகுதியில் தென்காசி, கடையநல்லூர், வாசுதேவநல்லூர் (தனி), சங்கரன்கோவில் (தனி), விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி), ராஜபாளையம் ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகள் அடங்கும். இவற்றில் தற்போது, சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், ராஜபாளையம் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகள் திமுக வசமும், கடையநல்லூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய தொகுதிகள் அதிமுக வசமும், தென்காசி சட்டப்பேரவைத் தொகுதி காங்கிரஸ் … Read more