Virat Kohli: `டி20 உலகக்கோப்பை அணியில் விராட் கோலி இடம்பெறுவாரா?- பிசிசிஐ அதிகாரி கூறுவதென்ன!

அமெரிக்காவில் நடைபெறும் டி 20 உலகக்கோப்பையில் இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி இடம்பெறுவார் என்று பிசிசிஐ தரப்பில் இருந்து தகவல் வெளியாகி இருக்கிறது. 2024-ம் ஆண்டிற்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் 1-ம் தேதி அமெரிக்காவில் கோலாகலமாக நடைபெற இருக்கிறது. ஐசிசி நடத்தும் இந்தப் போட்டியில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கின்றன. இதில் இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி பங்கேற்பாரா, மாட்டாரா என்ற கேள்வி எழுந்திருந்தது. இந்தியத் தேர்வுக்குழுவினர், இந்தத் தொடருக்கான அணியில் … Read more

ஸ்டாலின் பாணியில் இபிஎஸ் மார்க்கெட் பிரச்சாரம்: திருப்பத்தூர் அதிமுகவினர் உற்சாகம்

திருப்பத்தூர்: திருப்பத்தூர் தினசரி காய்கறி மார்க்கெட்டில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி இன்று காலை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பாணியில் காய்கறி மார்க்கெட், தேநீர் கடைகளுக்கு சென்று எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டதால் அதிமுகவினர் உற்சாகமடைந்து ஆரவாரம் செய்தனர். தமிழகத்தில் மக்களவை தேர்தல் வரும் 19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதையொட்டி தமிழக தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் வேட்பாளர்களை ஆதரித்து கட்சித் தலைவர்கள் தீவிர வாக்கு … Read more

கம்போடியாவில் சைபர் குற்றங்களில் ஈடுபடுத்தப்படும் 250 இந்தியர்கள் மீட்பு: மத்திய அரசு தகவல்

புதுடெல்லி: கம்போடியாவில் வேலைவாய்ப்பு என்று இந்தியாவிலிருந்து அழைத்துச் செல்லப்பட்டு அங்கு சைபர் குற்றங்களில் ஈடுபடுத்தப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சுமார் 5,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் அங்கு சிக்கியுள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இவர்கள் அனைவரும் தங்களது விருப்பத்துக்கு மாறாக தடுத்துவைக்கப்பட்டு இணைய மோசடிகளில் ஈடுபட வற்புறுத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில், வெளியுறவுத் துறை அமைச்சகம் கம்போடிய அரசுடன் மிகவும் நெருக்கமாக செயல்பட்டு 250 இந்தியர்களை மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியுறவு விவகாரத் துறை அமைச்சக செய்தித் … Read more

அம்மா இடத்தில் தற்போது மோடி உள்ளார் – டிடிவி தினகரன் பேச்சு!

அம்மா நாம்மொடு இல்லை. அம்மா இடத்தில் தற்போது மோடி உள்ளார். அம்மாவின் பெயரைச் சொல்லி பொதுமக்களை எடப்பாடி ஏமாற்றி வருகிறார் என ஸ்ரீவைகுண்டத்தில் டிடிவி தினகரன் பேச்சு.  

திமுக அரசின் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை கொச்சைப் படுத்தாதீர்கள்! கார்த்தி சிதம்பரம்

சிவகங்கை: திமுக அரசு கொண்டு வந்துள்ள  மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு வரவேற்பு தெரிவித்துள்ள  சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம், இந்த திட்டத்தை கொச்சைப்படுத்தாதீர்கள் என்று  கூறியுள்ளார். தமிழ்நாடு அரசு சார்பில் தகுதியுடைய பெண்களுக்கு மாதந்தோறும்  ரூ.1000 த மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இதன்முலும் பல லட்சக்கணக்கான பெண்கள் பயன் அடைந்து வருகின்றனர்.  இதற்கு பெண்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. சமீபத்தில்,  வேலூர் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் … Read more

அடுத்த தலைமுறைக்கும் சென்ற ராகவா லாரன்ஸின் கல்வி சேவை

நடிகர் ராகவா லாரன்ஸ் தொடர்ந்து ஏழை எளிய மாணவ மாணவிகளை தத்தெடுத்து படிக்க வைத்து வருகிறார். இந்த நிலையில் தற்போது தனது சமூக வலைதளத்தில் அவர் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெண் தனது இரண்டு குழந்தைகளை அழைத்து வந்து தனது கணவர் இறந்து விட்டதாகவும், இந்த குழந்தைகளை படிக்க வைக்க உதவி செய்யுங்கள் என்று கூறினார். அப்போது அந்த குழந்தைகளை என் வீட்டிலேயே தங்க வைத்து படிக்க … Read more

பிக்பாஸ் நிகழ்ச்சியே வீண்தான்.. கமலே பணத்துக்காகத்தான் போனாரு.. ராபர்ட் மாஸ்டர் சாட்டையடி

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசனில் கலந்துகொண்டவர் ராபர்ட் மாஸ்டர். அந்த சீசனில் அவர் பாதியில் வெளியேறினாலும் ரச்சிதாவுடன் அவர் காட்டிய நெருக்கத்தால் பலரது மத்தியில் ட்ரோலுக்கு உள்ளாக்கப்பட்டார். இந்தச் சூழலில் அவர் சமீபத்தில் கலந்துகொண்ட செய்தியாளர் சந்திப்பில் பிக்பாஸ் குறித்தும் கமல் ஹாசன் குறித்தும் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அந்தப் பேச்சை பார்த்த ரசிகர்கள்

பெட்ரோல், டீசல் வாகனங்களை இந்தியா கைவிடுமா..? மத்திய மந்திரி நிதின் கட்காரி பதில்

மும்பை, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்காரி நேற்று மராட்டிய மாநிலம் நாக்பூரில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:- பெட்ரோல், டீசல் மற்றும் மின்சாரத்தில் இயங்கும் ஹைபிரிட் ரக வாகனங்களுக்கு ஜி.எஸ்.டி. வரியை குறைக்க வேண்டும். நாட்டில் உள்ள 36 கோடி பெட்ரோல், டீசல் வாகனங்களை ஒழிக்க வேண்டும். இந்தியாவில் பெட்ரோல், டீசல் வாகனங்களை ஒழிக்க 100 சதவீதம் வாய்ப்புள்ளது. அது கடினமானது தான். ஆனால் சாத்தியமில்லாதது இல்லை. இதுதான் எனது … Read more

ரோகித் சர்மாவுக்கு எதிராக நிறைய விளையாடியுள்ளேன்… அதனால் – ஆட்ட நாயகன் டிரெண்ட் போல்ட் பேட்டி

மும்பை, ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற 14-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் மும்பை அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் வீழ்த்தியது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை 20 ஓவர்களில் 125 ரன்கள் மட்டுமே எடுத்தது. ராஜஸ்தான் சார்பில் அதிகபட்சமாக டிரெண்ட் போல்ட், சஹால் தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர். பின்னர் 126 ரன்களை துரத்திய ராஜஸ்தானுக்கு ரியான் பராக் அரைசதம் அடித்து 15.3 … Read more

தேர்தலை முன்கூட்டியே நடத்தக்கோரி இஸ்ரேலில் ஆயிரக்கணக்கானோர் போராட்டம்

ஜெருசலேம், காசாவில் செயல்படும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த அக்டோபர் மாதம் 7-ந்தேதி இஸ்ரேலுக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தினர். இதில் அப்பாவி பொதுமக்கள் சுமார் 1,140 பேர் கொல்லப்பட்டனர். மேலும் இஸ்ரேலில் இருந்து 250-க்கும் மேற்பட்டோரை பணய கைதிகளாக அவர்கள் கடத்திச் சென்றனர். இதற்கு பதிலடியாக இஸ்ரேலும் காசா மீது போர் தொடுத்தது. இந்த போர் சுமார் 6 மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் காசா தரப்பில் இதுவரை 32 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். … Read more