இந்தியாவில் அறுவை சிகிச்சை மகப்பேறுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு: சென்னை ஐஐடி தகவல்

சென்னை: இந்தியாவில் அறுவை சிகிச்சை மகப்பேறுகளின் எண்ணிக்கை திடீரென அதிகரித்திருப்பதும், ‘மருத்துவ ரீதியான அவசியம்’ இல்லாத சூழலிலும் அறுவை சிகிச்சை மகப்பேறுகள் நடைபெறுவதும் சென்னை ஐஐடி நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக சென்னை ஐஐடி வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழக (ஐஐடி) ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில், 2016-2021 ஆண்டுகளுக்கு இடையே நாடு முழுவதும் நடைபெற்ற அறுவை சிகிச்சை முறையிலான பிரசவங்களின் (சி- செக்சன்) எண்ணிக்கை திடீரென கடுமையாக உயர்ந்திருப்பதைக் கண்டறிந்துள்ளனர். ஆராய்ச்சியாளர்களான … Read more

நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் கட்சி வாரி வேட்பாளர்கள் பட்டியல்

சென்னை இந்தியத் தேர்தல் ஆணையம் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்திலிருந்து 950 பேர் போட்டி இடுகின்றனர் என அறிவித்துள்ளது. வரும் 19 ஆம் தேதி தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. வேட்பு மனு தாக்கல் கடந்த 20 ஆம் தேதி தொடங்கி 27 ஆம்தேதி நிறைவடைந்தது. 27 ஆம் தேதி நிலவரப்படி 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 1,403 பேர் 1,749 மனுக்களை தாக்கல் செய்து இருந்தனர். கடந்த 28 ஆம் தேதி இந்த மனுக்கள் மீதானபரிசீலனை நடைபெற்றபோது 1,085 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. … Read more

30 வருடங்களுக்குப் பிறகு சந்திப்பு – மதுபாலா மகிழ்ச்சி

தமிழ் சினிமா உலகம் மட்டுமல்லாது இந்திய சினிமா உலகமும் திரும்பிப் பார்க்க வைக்கும் படங்களைக் கொடுத்தவர் இயக்குனர் ஷங்கர். தற்போது தமிழில் 'இந்தியன் 2', தெலுங்கில் 'கேம் சேஞ்சர்' என இரண்டு பிரம்மாண்டப் படங்களை இயக்கி வருகிறார். இந்த ஆண்டில் இந்த இரண்டு படங்களும் வெளியாகி இந்தியத் திரையுலகத்தில் வசூல் சாதனைகளைப் படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஷங்கர் இயக்குனராக அறிமுகமான 'ஜென்டில்மேன்' படம் 1993ம் ஆண்டு வெளியானது. அப்படத்தில் அர்ஜுன் ஜோடியாக மதுபாலா நடித்திருந்தார். அவரது அப்பாவித்தனமான … Read more

Actor Mohanlal: ஆடு ஜீவிதம் படத்திற்காக காத்திருந்தேன்.. நடிகர் மோகன்லால் வெறித்தனம்!

சென்னை: நடிகர் பிரித்விராஜ், அமலா பால் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த 28ம் தேதி சர்வதேச அளவில் வெளியாகியுள்ள ஆடு ஜீவிதம் படத்தை 16 ஆண்டுகள் முயற்சிக்கு பிறகு உருவாக்கியுள்ளார் இயக்குநர் பிளெஸ்ஸி. இந்தப் படத்திற்கான அவரது தொடர் முயற்சிகளுக்கு உறுதுணையாக பிரித்விராஜூம் இருந்துள்ளார். இந்தப் படத்திற்காக உடல் குறைப்பு உள்ளிட்ட பல்வேறு முயற்சிகளை அவர்

இந்தியாவில் எம்ஜி மோட்டார் விற்பனை நிலவரம் FY’24 | Automobile Tamilan

எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் மாரச் 2024 விற்பனை 23 % வீழ்ச்சி அடைந்திருந்தாலும் ஒட்டு மொத்த 2023-2024 ஆம் நிதியாண்டின் விற்பனை முந்தைய நிதி வருடத்துடன் ஒப்பீடுகையில் 14 % வளர்ச்சி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எம்ஜி கடந்த ஆண்டு இதே மாதத்தில் 6,051 யூனிட்களை விற்பனை செய்திருந்த நிலையில், இந்த மார்ச் மாதத்தில் சில்லறை விற்பனையில் 23 சதவீதம் சரிவடைந்து 4,648 யூனிட்டுகளாக மட்டுமே பதிவாகியுள்ளது. 2023-24 நிதியாண்டில், 2022-23 நிதியாண்டில் விற்பனையில் ஆண்டு வளர்ச்சியில் சுமார் … Read more

`நான்கு தலைமுறை திராவிட ஆட்சியை, உதயநிதி இன்னும் 50 ஆண்டுகள் எடுத்துச் செல்வார்’ – எ.வ.வேலு

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணி கட்சியினரின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு, விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியின் இந்தியா கூட்டணி வேட்பாளரும், சிட்டிங் எம்.பி-யுமான ரவிக்குமார் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். அப்போது பேசிய அமைச்சர் எ.வ.வேலு, “விழுப்புரம் வேட்பாளரான ரவிக்குமார் ஒரு அற்புதமான பேச்சாற்றல் மிக்க வேட்பாளர். மிகவும் அறிவுப்பூர்வமாக இயங்க கூடியவர். அவருக்கு பானை சின்னம் கிடைத்திருப்பது மிகவும் பொருத்தமாக உள்ளது. ஏனெனில் … Read more

“தமிழகத்தில் பாஜகவை கொண்டு வந்ததே திமுக தான்!” – சீமான் குற்றச்சாட்டு @ திண்டுக்கல்

திண்டுக்கல்: “கடந்த தேர்தலில் பாஜக வந்துவிடும் என்று திமுக கூறியதைக் கேட்டு பயந்த கிறிஸ்தவ, இஸ்லாமிய மக்கள் நாம் தமிழருக்கு வாக்களிக்காமல் அவர்களுக்கு வாக்களித்தனர். ஆனால், திமுக இப்போது பாஜக வந்துவிட்டது, பாஜக வந்துவிட்டது என்று கூறுகின்றனர். நாம் தமிழருக்கு வாக்களித்து இருந்தால், தமிழகத்தில் பாஜக வளர்ந்திருக்குமா? வந்திருக்குமா? மக்கள் மறுபடியும் திமுகவுக்கு வாக்களித்தால் வளர்ந்துவிட்டது பாஜக என்று கூறுவார்கள்” என்று திண்டுக்கல்லில் பிரச்சாரம் மேற்கொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளார். நாம் … Read more

அருணாச்சலப் பிரதேசத்தின் 30 இடங்களின் பெயர்களை மாற்றியது சீனா

புதுடெல்லி: அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள 30 இடங்களுக்கு சீனா தனது மொழியில் புதிய பெயர்களை வைத்துள்ளது. இந்தியாவின் வடகிழக்கு மாநிலத்தில் உள்ள இந்தியாவின் ஓர் அங்கமான அருணாச்சலப் பிரதேசம் மீது சீனா தொடர்ந்து உரிமை கொண்டாடி வருகிறது. அருணாச்சலப் பிரதேசத்தின் பல பகுதிகளை தங்களின் மொழியில் புதிய பெயர்களை அறிவித்தும், தங்கள் நாட்டு வரைபடத்தில் இணைத்தும் சீனா தொடர்ச்சியான அத்துமீறல்களை செய்துவருகிறது. சீன சிவில் விவகார அமைச்சகம், அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள இடங்களை மறுப்பெயரிட்டு வருகிறது. ஏற்கனவே … Read more

உதயநிதி பொது வெளியில் கவனமாக பேச வேண்டும் : உச்சநீதிமன்றம்  அறிவுரை

டில்லி தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொது வெளியில் கவனாமாக பேச வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. சென்னையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி, சனாதனம் பற்றி குறிப்பிட்டது பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.  அவருடைய பேச்சுக்கு பா.ஜ.க. மற்றும் இந்துத்துவ அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன. நாடு முழுவதும் உதயநிதிக்கு எதிராக பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. உச்சநிதிமன்றத்தில் தன்மீது பதியப்பட்ட வழக்குகளை ஒரே வழக்காக … Read more

தனியொருத்தியாக ஒரு படத்தை உருவாக்கிய சாதனை பெண்

சினிமாவின் அனைத்து பணிகளையும் ஒருவரே செய்து ஒரு படத்தை உருவாக்கும் சாதனை முயற்சிகள் அவ்வப்போது நடந்துள்ளது. கணேஷ் பாபு என்ற நடிகர் மற்றும் இயக்குனர் காட்டு புறா, நானே வருவன் உள்ளிட்ட சில படங்களில் 24 துறைகளில் பணியாற்றி சாதனை படைத்தார். 'வெங்காயம்' படத்தை இயக்கிய சங்ககிரி ராஜ்குமார் தற்போது 'தி ஒன்' என்ற படத்தின் அனைத்து பணிகளையும் அவரே செய்து வருகிறார். இந்த நிலையில் சினிமாவின் 31 துறைகளை கையாண்டு பல விருதுகளை பெற்று சாதனை … Read more