ஜூலை 24 வரை காங்.,க்கு எதிராக நடவடிக்கை இல்லை: வரி நிலுவை வழக்கில் வருமான வரித்துறை பதில்

புதுடெல்லி: “வரி நிலுவை தொடர்பாக ஜூலை 24-ம் தேதி வரை காங்கிரஸுக்கு எதிராக எந்த கட்டாய நடவடிக்கையும் எடுக்கமாட்டோம்” என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. அரசியல் கட்சிகள் பெறும் நன்கொடைகளுக்கு அளிக்கப்பட்டு வந்த வரி விலக்கு முடிவுக்கு வந்துவிட்டது. இதையடுத்து கடந்த 2017-18 முதல் 2020-21-ம் ஆண்டு வரையிலான 4 ஆண்டுகளுக்கான வரி நிலுவை ரூ.1,823 கோடி செலுத்துமாறு காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது. தற்போது 2014-15 ஆண்டுக்கான நிலுவைத் தொகை ரூ.663 கோடி, … Read more

மதுபான கொள்கை முறைகேடு வழக்கு.. டெல்லி திஹார் சிறையில் முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால்!

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை ஏப்ரல் 15ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க டெல்லி ரூஸ் அவென்யூ நீதிமன்றம் திங்கள்கிழமை ஏப்ரல் 1ஆம் தேதி உத்தரவிட்டது. இதனை அடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் திஹார் ஜெயிலில் அடைக்கப்பட இருக்கிறார். 

தேர்தல் பத்திரம் தொடர்பான எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு பிரதமர் மோடி பதில்….

சென்னை: தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த பிரதமர் மோடி, தேர்தல் பத்திரத்தில் சில குறைபாடுகள் உள்ளன என்பதை ஒப்புக்கொண்டதுடன், தேர்தல் பத்திரம் தொடர்பான விமர்சனங்களுக்கு பதில் அளித்துள்ளார். மத்திய பாஜக அரசு கொண்டு வந்த தேர்தல் பத்திரம் விவகாரத்தில் உச்சநீமன்றத்தின் தீர்ப்பை தொடர்ந்து, அதன்மூலம் பலன் பெற்றவர்கள் விவரம் வெளியாகி உள்ளது. தேசிய கட்சியான பாஜக அதிக அளவில் பயன் அடைந்துள்ளதுடன், மாநில கட்சிகளான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, திமுக, தெலுங்கானா ராஷ்டிரிய சமீதி கட்சி … Read more

ஜாபர் சாதிக் விவகாரம்! இயக்குனர் அமீருக்கு சம்மன்!

கடந்த மாதத்தில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக் என்பவர் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இவர் கயல் ஆனந்தி நடித்துள்ள மங்கை மற்றும் அமீர் இயக்கி வரும் இறைவன் மிகப்பெரியவன் போன்ற படங்களை தயாரித்துள்ளார். அதனால் ஜாபர் சாதிக் கைதானபோது அவருடன் அமீரையும் இணைத்து சோசியல் மீடியாவில் செய்திகள் வெளியாகி வந்தன. அதையடுத்து அவர் ஜாபர் சாதிக்கின் போதை பொருள் கடத்தலுக்கும், எனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று மறுப்பு … Read more

Pandian stores 2 serial: சக்திவேல் குறித்து தெரியவந்த உண்மை.. அதிர்ச்சியில் செந்தில் -மீனா!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடர் இன்றைய தினம் பரபரப்பான காட்சிகளுடன் காணப்பட்டது. இந்த சீரியலில் சரவணனின் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்ததாக கதிர் மற்றும் ராஜியின் திருமண வாழ்க்கை குறித்த காட்சிகள் இன்றைய எபிசோடில் காணப்பட்டது. கல்லூரிக்கு செல்வதற்கு காசு இல்லாமல் தன்னுடைய மனைவி ராஜி, தன்னுடைய அப்பா பாண்டியனிடம்

ஏப்ரல் 3 ஆம் தேதி டொயோட்டா Taisor அறிமுகமாகிறது

மாருதி ஃபிரான்க்ஸ் அடிப்படையில் ரீபேட்ஜ் செய்யப்பட்ட டொயோட்டா டைசோர் க்ராஸ்ஓவர் காரின் அறிமுக தேதியை உறுதி செய்து முதல் டீசர் வெளியிடப்பட்டுளதால் விற்பனைக்கு நடப்பு மாத இறுதியில் கிடைக்க துவங்கலாம். மிக அமோகமாக வரவேற்பினை பெற்ற பலேனோ (டொயோட்டா கிளான்ஸா) அடிப்படையில் மாருதி சுசூகி தயாரித்துள்ள Fronx காரில் இருந்து மாறுபட்ட முகப்பு கிரில் உட்பட புதிய அலாய் வீல், இன்டிரியர் உள்ளிட்ட பகுதிகளில் என சிறிய அளவிலான மாற்றங்கள் பெற்றதாக டைசோர் அமைந்திருக்கலாம். தற்பொழுது வரை … Read more

ஏப்ரல் மாதத்தில் 35 ரூபாயிற்கும் குறைவான விலையில் முட்டை…

ஏப்ரல் மாதத்தில் உள்நாட்டு முட்டை ஒன்றின் விலை 35 ரூபாவிற்கும் குறைவாக பெற்றுக்கொள்ள முடியும் என்று விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலை தொடர்பில் விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சில் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். குறிப்பாக சிங்கள, தமிழ் புத்தாண்டு காலத்தில் கோழி இறைச்சி மற்றும் முட்டைகளை சந்தைக்கு தட்டுப்பாடு இன்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், … Read more

`என் கணவனைக் கொல்பவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும்!' – வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் வைத்த இளம்பெண்

கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டால், இருவரும் பிரிந்து செல்வது வழக்கம். ஆனால் சில நேரம் இருவரில் ஒருவர் பழிவாங்கும் வேலையில் இறங்கிவிடுவது வழக்கம். மத்தியப் பிரதேச மாநிலம், பாஹ் மாவட்டத்தில் உள்ள பிண்ட் என்ற கிராமத்தைச் சேர்ந்த பெண்ணை நிஷாந்த் என்பவர், கடந்த 2022-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணமான ஐந்து மாதங்களில் அப்பெண் தனது கணவருடன் சண்டை போட்டுக்கொண்டு தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். அதோடு தனது கணவருக்கு எதிராக போலீஸில் … Read more

“கச்சத்தீவு தாரைவார்ப்பு மன்னிக்க முடியாத துரோகம்” – ராமதாஸ்

சென்னை: “கச்சத்தீவு தாரைவார்ப்பு மன்னிக்க முடியாத துரோகம். அதை நியாயப்படுத்தும் காங்கிரஸுடன் திமுக உறவு வைத்திருப்பதன் மர்மம் என்ன?” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்த கச்சத்தீவை இந்திரா காந்தி தலைமையிலான மத்திய அரசு, இலங்கைக்கு தாரை வார்த்தது மன்னிக்க முடியாத துரோகம் ஆகும். இதை ஐம்பதாண்டுகளுக்கு முன்பு நடத்த நிகழ்வாக கடந்து சென்று விட முடியாது. கச்சத்தீவு அன்று தாரை வார்க்கப்பட்டதன் விளைவுகளை … Read more

“கச்சத்தீவு குறித்து ஸ்டாலினுக்கு 21 முறை பதில் அளித்துள்ளேன்” – வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்

புதுடெல்லி: “முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நான் 21 முறை கச்சத்தீவு தொடர்பாக பதில் அளித்துள்ளேன். இது திடீரென எழுந்த பிரச்சினை அல்ல.” என்று வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். கச்சத்தீவு தொடர்பான 1974 ஒப்பந்தம் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பெற்ற ஆர்டிஐ தகவலுக்கு பிறகு இந்த விவகாரம் மீண்டும் சர்ச்சையாகி வருகிறது. பிரதமர் மோடி இந்த விவகாரத்தில் திமுகவின் இரட்டை வேடம் அம்பலமாகிவிட்டது என்று கூறி விமர்சித்த நிலையில், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் … Read more