டெல்லி கேப்பிட்டல்ஸ் கேப்டன் ரிஷப் பந்த்துக்கு ரூ. 12 லட்சம் அபராதம்! ஏன் தெரியுமா?

ரிஷப் பந்த் தலைமையில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ஐபிஎல் 2024ல் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளனர். விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டெல்லி அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் 2024 போட்டியின் போது நடத்தை விதிகளை மீறியதாக டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ரிஷப் பந்திற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ராஜசேகர ரெட்டி ACA-VDCA கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இந்த போட்டியில் சிஎஸ்கே அணிக்கு … Read more

நீதிபதி ஜெயச்சந்திரனிடம் மீண்டும் விசாரணைக்கு வந்த பொன்முடி உள்பட முன்னாள் இந்நாள் அமைச்சர்களின் வழக்குகள்….

சென்னை:  முன்னாள், இந்நாள் அமைச்சர்களின் மீதான ஊழல் வழக்குகளை ​நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்  விசாரித்து வரும் நிலையில், அவர் மதுரை உயர்நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளதால், இந்த வழக்குகள் அனைத்தும் மீண்டும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரனிடம் வந்தள்ளது.  இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே, அமைச்சர் பொன்முடி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பரபரப்பை ஏற்படுத்தி நீதிபதி ஜெயச்சந்திரனிடமே மற்ற வழக்குகளும் வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமைச்சர், … Read more

இந்த வாரமும் இத்தனை படங்களா? எது ஓடும்…?

2024ம் ஆண்டின் மூன்று மாதங்கள் முடிந்துவிட்டது. முக்கியப் படங்கள் எதுவும் இல்லாமல் கடந்த மாதமும் கடந்துவிட்டது. ஏப்ரல் மாதத்திலாவது தமிழ் சினிமாவுக்கு ஏற்றம் தரக் கூடிய படங்கள் ஏதாவது வராதா என பலரும் காத்திருக்கிறார்கள். இருப்பினும் இந்த மாதத்தின் முதல் வாரத்திலேயே ஏழு படங்கள் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் வியாழனன்று ஏப்ரல் 4ம் தேதி ஜிவி பிரகாஷ்குமார் கதாநாயகனாக நடித்துள்ள 'கள்வன்' படம் வருகிறது. அதற்கடுத்த தினமான வெள்ளியன்று ஏப்ரல் 5ம் தேதி “டபுள் டக்கர், … Read more

Manjummel Boys OTT Release: வசூல் வேட்டை நடத்திய மஞ்சும்மல் பாய்ஸ்..ஓடிடியில் எப்போ ரிலீஸ் தெரியுமா?

சென்னை: கொடைக்கானலில் குணா குகையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட மலையாள படமான மஞ்சும்மல் பாய்ஸ். கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி தியேட்டரில் வெளியானது. இந்த படம் மலையாளத்தில் மட்டுமில்ல, தமிழிலும் அமோக வரவேற்பை பெற்று வசூலை அள்ளியத் இத்திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது. ஓடிடியிலும் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாக

காங்கிரசுக்கு மேலும் ரூ.1,745 கோடி அபராதம்: வருமானவரித்துறை நோட்டீஸ்

புதுடெல்லி, காங்கிரஸ் கட்சி கடந்த 2018-2019-ம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கை 45 நாட்கள் தாமதமாக தாக்கல் செய்ததாக கூறி, அந்த கட்சியின் 4 வங்கி கணக்குகளை வருமான வரித்துறை முடக்கியது. மேலும் அபராதமாக காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகளில் இருந்து ரூ.135 கோடியை வருமான வரித்துறை எடுத்துக்கொண்டது. இதை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் காங்கிரஸ் வழக்கு தொடர்ந்தது. அதனை தள்ளுபடி செய்து கோர்ட்டு உத்தரவிட்டது. இதனிடையே கடந்த 2017-2018, 2018-2019, 2019-2020, 2020-2021 ஆண்டுகள் வரையிலான … Read more

ஒரே நேரத்தில் 23 செயற்கைக்கோள்களை அனுப்பிய ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்

வாஷிங்டன், விண்வெளி ஆராய்ச்சியில் உலக நாடுகள் பலவும் போட்டிப்போட்டு வருகின்றன. அதன்படி அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் என்ற தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனமும் இந்த போட்டியில் இணைந்துள்ளது. இந்த நிறுவனம் சார்பில் ஒரே நேரத்தில் 23 ஸ்டார் லிங்க் செயற்கைக்கோள்கள் அனுப்பப்பட்டன. இவை வெற்றிகரமாக அதன் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. இதற்காக புளோரிடாவின் கேப் கனாவெரல் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து பால்கன்-9 வகை ராக்கெட் ஏவப்பட்டது. இந்த செயற்கைக்கோள்கள் நம்பமுடியாத அளவுக்கு அதிவேக பிராட்பேண்ட் இணையத்தை வழங்கும் என … Read more

2015இல் தேசிய கீதம் தமிழில் பாடவேண்டுமென தீர்மானம் எடுத்தது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க – மனுஷ நாணயக்கார

“வவுனியாவுக்கு வந்து தமிழில் தேசிய கீதம் பாடினோம். யாழ்ப்பாணம் சென்ற போது தமிழில் மாத்திரமே தேசிய கீதம் பாடப்பட்டது. இன்று நாம் சகோதரத்துவத்துடன் வாழ்வதற்காக 2015 ஆம் ஆண்டு தமிழில் தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என்று தீர்மானித்தவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க என்று தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார். ஸ்மார்ட் யூத் கிளப்’ இளம் தொழில் வல்லுனர்களை ஊக்குவிக்கும் வகையில் ஜயகமு ஸ்ரீலங்கா மக்கள் நடமாடும் சேவையின் எட்டாம் கட்டத்தின் இரண்டாம் … Read more

ஏப்.9-ல் பிரதமர் மோடி தமிழகம் வருகை: சென்னையில் ரோடு ஷோ நடத்த ஏற்பாடு

பிரதமர் நரேந்திர மோடி ஏப். 9-ம் தேதி தமிழகம் வருகிறார். அப்போது சென்னையில் ரோடு ஷோ நடத்த பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பதற்காக பிரதமர் மோடி ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் தமிழகம் வருகிறார். ஏற்கெனவே, கடந்த ஜனவரி மாதத்தில் 2 முறை தமிழகம் வந்துள்ளார் பிரதமர் மோடி. 3-வது முறையாக இரண்டு நாள் பயணமாக பிப்.27-ம் தேதி தமிழகம் வந்தார். அப்போது, பல்லடத்தில் நடைபெற்ற ‘என் … Read more

“அனைத்து கட்சிகளையும் தேர்தல் ஆணையம் சமமாக நடத்த வேண்டும்” – பிரியங்கா

பொதுக் கூட்டத்தில் காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பேசியதாவது: ராமாயணத்தில் ராவணனிடம் படை பலம், ஆயுத பலம், ஏராளமான செல்வம் குவிந்திருந்தது. பகவான் ராமரிடம் உண்மை, நம்பிக்கை, பொறுமை, வீரம் மட்டுமே இருந்தது. இறுதியில் ராமர்தான் வெற்றி பெற்றார். தேர்தலில் உண்மையை முன்வைத்து, மக்களை நம்பி களமிறங்கி உள்ளோம். 5 கோரிக்கைகள்: அனைத்து கட்சிகளையும் தேர்தல் ஆணையம் சமமாக நடத்த வேண்டும். எதிர்க்கட்சிகளை குறிவைக்கும் வருமான வரித் துறை, சிபிஐ, அமலாக்கத் துறையின் நடவடிக்கைகளை … Read more