புதிய தொழில்நுட்பத்துடன் திரைப்படக் கூட்டுத்தாபனம் மாற்றத்திற்கு உள்ளாக்கப்படும்

கலைஞர்கள் மற்றும் வடிவமைப்பாளர் நவீன தொழில்நுட்பத்துடன் முன்னேறுவதற்காக வெளிநாட்டு பயிற்சி வாய்ப்புகள். நாட்டில் முதலாவது AI திரைப்படம் தயாரிப்பதற்கு அரசாங்கம் ஆதரவளிக்கும் – 2023 ரைகம் விருது விழாவில் ஜனாதிபதி தெரிவிப்பு. பழமையான பாரம்பரியத்துடன் காணப்படும் திரைப்படக் கூட்டுத்தாபனம் நவீன தொழில்நுட்பத்துடன் மாற்றத்திற்கு உள்ளாக்கப்பட்டு இலங்கை திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நாடக அபிவிருத்தி நிறுவனமாக கட்டியெழுப்பப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அதேவேளை, கலைஞர்கள் மற்றும் வடிவமைப்பாளர்களை நவீன தொழில்நுட்ப அறிவுடன் வலுவூட்டுவதற்கு வெளிநாட்டு பயிற்சி … Read more

Doctor Vikatan: சர்க்கரை நோயாளிகளும், எடைக்குறைப்பு முயற்சியில் உள்ளோரும் பலாக்கொட்டை சாப்பிடலாமா?

Doctor Vikatan: நீரிழிவு உள்ளோர், எடைக் குறைப்பு முயற்சியில் உள்ளோர் ஆகியோர் பலாப்பழம் சாப்பிடக்கூடாது என அறிவுறுத்தப் படுகிறார்கள். இதே அறிவுரை, பலாக் கொட்டைக்கும் பொருந்துமா? அவர்கள் பலாக்கொட்டைகள் சாப்பிடலாமா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் அம்பிகா சேகர் அம்பிகா சேகர் பலாப்பழத்தில் உள்ள அனைத்து நல்ல தன்மைகளும் பலாக்கொட்டைக்கும் உண்டு. குறிப்பாக, குடல் ஆரோக்கியத்துக்கு பலாக்கொட்டை மிகவும்  நல்லது. பலாக்கொட்டையிலும் கார்போஹைட்ரேட் உள்ளது. ஆனாலும், உருளைக்கிழங்கோடு ஒப்பிடுகையில், இது ஆரோக்கியமானதுதான். உருளைக்கிழங்கில் நார்ச்சத்து கிடையாது. பலாக்கொட்டையில் … Read more

அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேறும் காலம் கனியும்: ‘இந்து தமிழ் திசை’ நேர்காணலில் முதல்வர் ஸ்டாலின் உறுதி

சென்னை: அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேறும் காலம் கனியும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். ‘இந்து தமிழ் திசை’ நாளிதழுக்கு தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அளித்த நேர்காணலில் கூறியதாவது: டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறித்து… ஜனநாயக நெறிமுறைகள், அரசியல் சட்ட மாண்பை சிதைக்கும் வகையில் செயல்படும் மத்திய பாஜக அரசின் பழிவாங்கும் நடவடிக்கையால் சிறைபட்டுள்ள டெல்லி முதல்வர் கேஜ்ரிவால், சிறையில் இருந்தபடியே நடத்தும் மாநில உரிமைக்கான போராட்டத்தை … Read more

மோடியின் ‘மேட்ச் பிக்ஸிங்’ – ராகுல் காந்தி விமர்சனம்

புதுடெல்லி: டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை கண்டித்து டெல்லியில் நேற்று இண்டியா கூட்டணி சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதில் அந்த கூட்டணியை சேர்ந்த 28 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கடந்த 21-ம்தேதி கைது செய்யப்பட்டார். இதைகண்டித்து எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணி சார்பில் டெல்லி ராம்லீலா மைதானத்தில் நேற்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, … Read more

பாகிஸ்தானில் நிதி நெருக்கடி எதிரொலி: சிவப்பு கம்பள வரவேற்புக்கு தடை – பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உத்தரவு

இஸ்லாமாபாத்: அரசு விழாக்களில் சிவப்பு கம்பள வரவேற்பு நிகழ்வுக்கு தடை விதிக்கப்படுவதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடியை காரணம் காட்டிபிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. பாகிஸ்தானில் மத்திய அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் கலந்து கொள்ளும் அரசு விழாக்களில் சிவப்பு கம்பள வரவேற்புஅளிக்கப்படுவது முக்கிய சம்பிரதாய நடவடிக்கையாக உள்ளது. இந்த நடவடிக்கை பிரதமருக்கு அதிருப்தியையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதனால், அவற்றை பயன்படுத்துவதில் கட்டுப்பாடுகளை விதிக்க அவர் முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து பாகிஸ்தான் அமைச்சரவை … Read more

மக்களவை தேர்தல் எதிரொலி: தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளின் கட்டண உயர்வு வாபஸ்….

டெல்லி: மக்களவை தேர்தல் எதிரொலியாக, தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளின் இன்றுமுதல் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்ட சுங்க கட்டண உயர்வு முடிவை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திரும்பப் பெற்றது . நாடு முழுவதும்  பல ஆயிரக்கணக்கான சுங்கச்சாவடிகள் தேசிய நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டு, கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, ஆண்டு இரண்டு முறை சுங்கக்கட்டணங்கள் உயர்த்தப்பட்டு வருகிறது. இதுபோன்ற சுங்க சாவடி கட்டணங்களுக்கு நாடு முழுவதும்  தொடர்ச்சியாக எதிர்ப்பு இருந்து வருகிறது. தமிழகத்தில் சுங்க சாவடிகளை அகற்ற வலியுறுத்தி … Read more

எங்களை விட பிரித்விராஜூக்கு தான் பஞ்ச் வசனங்கள் அதிகம்: அக்சய் குமார்

பாலிவுட்டில் அக்சய் குமார் மற்றும் டைகர் ஷெராப் இருவரும் இணைந்து நடித்துள்ள 'படே மியான் சோட்டே மியான்' திரைப்படம் வரும் ஏப்ரல் 10ம் தேதி ரிலீசுக்கு தயாராகி வருகிறது. டைகர் ஜிந்தகி படத்தை இயக்கிய அலி அப்பாஸ் ஜாபர் இந்த படத்தை இயக்கியுள்ளார். ராணுவ பின்னணியில் அதிரடி ஆக்சன் படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் வில்லனாக நடித்துள்ளார் மலையாள நடிகர் பிரித்விராஜ். ஏற்கனவே ஹிந்தியில் மூன்று படங்களில் நடித்துள்ள பிரித்விராஜ் மூன்றிலுமே வில்லனாகத்தான் நடித்திருந்தார். இந்த நிலையில் … Read more

கிளாமராக ஆடினால் என்னங்க தப்பு?.. அப்படி பார்க்காதீங்க.. போட்டு பொளந்து எடுத்த நடிகை தமன்னா

சென்னை: நடிகை தமன்னா தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். பல படங்களில் நடித்த அவருக்கு பாலிவுட் கதவும் திறந்தது. இதனையடுத்து அங்கு நடித்துக்கொண்டிருந்தபோத் விஜய் வர்மாவை காதலிக்க ஆரம்பித்தார். இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் கிளாமராக நடனம் ஆடுவது குறித்து தமன்னா சமீபத்திய பேட்டி

'கியூட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க காலஅவகாசம் நீட்டிப்பு

புதுடெல்லி, புதிய கல்வி கொள்கையின்படி மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளின் சேர்க்கைக்கு ‘கியூட்’ என்னும் பல்கலைக்கழகளுக்கான பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. இளங்கலை பட்டப்படிப்புக்கான கியூட் தேர்வுக்கான விண்ணப்பதிவு கடந்த மாதம் 10-ந்தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவு பெறுவதாக இருந்தது. இந்தநிலையில் கியூட் தேர்வுக்கான விண்ணப்பதிவை வருகிற 5-ந்தேதிவரை நீட்டித்து தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. இந்த நுழைவுத்தேர்வு மே மாதம் 15-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை நடைபெற உள்ளது. தினத்தந்தி Related Tags : கியூட் … Read more

இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் முதல் அணியாக சாதனை படைத்த சென்னை சூப்பர் கிங்ஸ்

புதுடெல்லி, ஐ.பி.எல். தொடரின் 17-வது சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்த நைட் ரைடர்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், பஞ்சாப் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய 10 அணிகள் பங்கேற்றுள்ளன. கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் வரவேற்பை பெற்றுள்ள இந்த தொடரில் இதுவரை அதிகபட்சமாக மும்பை மற்றும் சென்னை அணிகள் தலா … Read more