இங்கிலாந்தில் மெகா கருத்துக் கணிப்பு முடிவுகள்: ஆளுங்கட்சிக்கு கடும் பின்னடைவு.. பிரதமரின் தொகுதியும் ரிஸ்க்

லண்டன்: இங்கிலாந்தில் இந்த ஆண்டின் இறுதியில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு? என்பது தொடர்பாக சிவில் சமூக பிரச்சார அமைப்பான ‘பெஸ்ட் ஃபார் பிரிட்டன்’ மெகா கருத்துக் கணிப்பு நடத்தியுள்ளது. அதன் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில், ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி பெரும் தோல்வியைச் சந்திக்கும் என்று தெரியவந்துள்ளது. கருத்துக் கணிப்பில், கன்சர்வேடிவ் கட்சியைவிட 19 புள்ளிகள் முன்னிலையுடன், எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி 45 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. இப்போது … Read more

கேரளா: வீடு, நிலம் இல்லாத மத்திய அமைச்சர்; 20,000 புத்தகம் சொத்தாக வைத்துள்ள முன்னாள் நிதி அமைச்சர்!

கேரள மாநிலத்தைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர் வீ.முரளிதரன் ஆற்றிங்கல் தொகுதியில் பா.ஜ.க வேட்பாளராக போட்டியிடுகிறார். அவர் திருவனந்தபுரம் கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார். தனது வேட்புமனுவில் இணைத்துள்ள அபிடவிட்டில் தனக்கு சொந்தமாக வீடு, நிலம் இல்லை என குறிப்பிட்டுள்ளார். தனது கையில் ஆயிரம் ரூபாய் மட்டுமே உள்ளதாகவும், தனது வங்கி கணக்கில் மத்திய அமைச்சருக்கான சம்பளமாக வந்த வகையில் 10,44,274 ரூபாய் உள்ளதாகவும் கூறியுள்ளார். அவருக்கு சொந்தமாக 12 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கார் … Read more

தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்றும், நாளையும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 3-ம் தேதி தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் … Read more

பான் அட்டை துஷ்பிரயோகம்: குவாலியர் கல்லூரி மாணவருக்கு ரூ.46 கோடி வரி நோட்டீஸ்

குவாலியர்: கல்லூரி மாணவனின் பான் அட்டையை துஷ்பிரயோகம் செய்த கம்பெனியில் ரூ.46 கோடி அளவுக்கு பணப் பரிமாற்றம் நடைபெற்றுள்ளது. இதனால் அந்த மாணவருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் குவாலியரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் பிரமோத் குமார். அவருக்கு வருமான வரித்துறை மற்றும் ஜிஎஸ்டியிலிருந்து வரி நோட்டீஸ் வந்திருந்தது. அதில்ரூ. 46 கோடிக்கு பணப் பரிமாற்றம் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. பிரமோத் குமார் பான் அட்டை எண்ணில் ஒரு நிறுவனம் மும்பை மற்றும் டெல்லியில் … Read more

பருவநிலை மாற்றம் குறித்து கேள்வி; எங்களுக்கு பாடம் எடுக்க அதிகாரம் அளித்தது யார்? – பிபிசி செய்தியாளரை கண்டித்த கயானா அதிபர்

லண்டன்: தன்னை பேட்டி கண்ட தனியார் தொலைக்காட்சி செய்தியாளரை கயானா நாட்டு அதிபர் இர்ஃபான் அலி கடுமையாக சாடியதால் பரபரப்பு ஏற்பட்டது. பருவநிலை மாற்றம், புவி வெப்பமடைதல் உள்ளிட்ட சூழலியல் பிரச்சினைகள் இன்று உலகம்எதிர்கொள்ளும் மிகப்பெரும் சிக்கலாக கருதப்படுகிறது. இதனால், நிலையான வளர்ச்சியையும் சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் முன்னிலைப்படுத்தி கார்பன் வெளியீட்டை கட்டுப்படுத்த பல நாடுகள் முயற் சித்து வருகின்றன. இந்நிலையில், பிபிசி தொலைக்காட்சி செய்தியாளர் கயானா நாட்டுஅதிபர் இர்ஃபான் அலியை நேற்று பேட்டி கண்டார். அப்போது அந்த … Read more

கண்ணீர் மல்க வாக்கு சேகரித்த தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்!

வாணாபுரத்தில் அதிமுக வேட்பாளர் குமரகுருவிற்கு ஆதரவாக கண்ணீர் மல்க வாக்கு சேகரித்த தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வீடியோ வைரல் ஆகி வருகிறது.   

வணிகப் பயன்பாட்டு எரிவாயு சிலிண்டர் விலை குறைப்பு

சென்னை இன்று முதல் வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையைச் சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப நிர்ணயித்துக் கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதி கொடுத்துள்ளது.  மேலும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்கின்றன. அதன்படி ஒவ்வொரு மாதமும் சர்வதேசச் சந்தை நிலவரத்திற்கு ஏற்ப இந்த விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.  எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி வணிகப் பயன்பாட்டு சிலிண்டரின் விலை குறைந்துள்ளது.   இன்று முதல் 19 கிலோ எடை கொண்ட வணிகப் பயன்பாடு சிலிண்டர் விலை ரூ.30.50 விலை குறைந்து ரூ.1,930 ஆக ஆக விற்பனை செய்யப்படுகிறது.  ஆனால் வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் … Read more

பட்டப்பெயர் வைத்துக் கொள்ளாதது ஏன் ? விஜய் தேவரகொண்டா விளக்கம்

சினிமாவைப் பொறுத்தவரை தொடர்ந்து மூன்று, நான்கு படங்கள் ஹிட் கொடுத்து விட்டாலே அடுத்ததாக அவர்கள் பெயருக்கு முன்னால் தானாகவே ஒரு பட்டம் சேர்ந்து கொள்ளும். ரசிகர்கள் அன்பாக கொடுத்தார்கள், தயாரிப்பாளர்கள் விரும்பினார்கள் என காரணம் சொல்லிக்கொண்டு சம்பந்தப்பட்ட நடிகர்களும் ஆர்வத்தோடு தங்களுக்கு பட்டம் சூட்டி கொள்வார்கள். இப்படி வளர்ந்து வந்த காலத்தில் தான் நடிகர் பரத் சின்ன தளபதி என்றும் விஷால் புரட்சி தளபதி என்றும் டைட்டில் போட்டுக் கொண்டதும் சில படங்களிலேயே அந்த டைட்டிலை தூக்கி … Read more

பிரமாண்டமாக நடந்த ரோபோ சங்கர் மகள் இந்திரஜாவின் ரிசப்ஷன்.. திரையுலகினர் குவிந்து வாழ்த்து மழை

சென்னை: கோலிவுட்டில் பிரபலமான காமெடி நடிகராக வலம் வருபவர் ரோபோ சங்கர். இவரது மகள் இந்திரஜாவுக்கும் அவரது உறவினர் பையன் கார்த்திக் என்பவரை கடந்த 24ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார். அவர்களது திருமணம் மதுரையில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து திரையுலகினர் கலந்துகொள்வதற்காக திருமணம் ரிசப்ஷன் சென்னையில் நேற்று இரவு நடந்தது. இதில் கமல் ஹாசன், சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர்

அசாமில் கொட்டித்தீர்த்த கனமழை: கவுகாத்தி சர்வதேச விமான நிலையத்தின் மேற்கூரை இடிந்து விபத்து

கவுகாத்தி, திடீர் கனமழை மற்றும் சூரை காற்றினால் கவுகாத்தி சர்வதேச விமான நிலையம் சேதமடைந்தது, இதனால் விமானங்களின் புறப்பாடு தாமதமானது. மேலும் விமான முனையத்தின் ஒரு பகுதிக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் அதிகாரிகள் ஆறு விமானங்களை வேறு இடங்களுக்கு திருப்பிவிட்டனர். விமான நிலைய முனையத்திற்குள் மழை நீர் ஒழுகியதால் பயணிகள் கடுமையாக அவதியடைந்தனர். இந்நிலையில் புயலைத் தொடர்ந்து பெய்த பலத்த மழை காரணமாக விமானநிலைய மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் … Read more