
அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை
தெலுங்கு சினிமாவில் சமீபத்தில் அரை டஜன் படங்களுக்கு மேல் நடித்து முன்னணி நடிகையாக வளர்ந்து வருகிறார் இளம் நடிகை ஸ்ரீ லீலா. இவர் தமிழில் தற்போது கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் 'குட் பேட் அக்லி' என்கிற படத்தில் நடிக்கவுள்ளார். இதில் அஜித்துடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஸ்ரீ லீலா இணைந்துள்ளார் என நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து தெரிவிக்கின்றனர். இதனை தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கின்றார். இதன் படப்பிடிப்பு வருகின்ற மே 10ம் தேதி அன்று ஐதராபாத்தில் தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.