ஐசிசி டி20 உலககோப்பை ஜூன் மாதம் தொடங்க உள்ளது. 20 அணிகள் பங்கேற்கும் இந்த டி20 உலகக் கோப்பையின் 9வது பதிப்பு, அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் ஜூன் 1 முதல் ஜூன் 29 வரை நடைபெற உள்ளது. இதற்கான தங்களது அணிகளை ஒவ்வொரு கிரிக்கெட் வாரியமும் அறிவித்து வருகிறது. ஏப்ரல் 29 அன்று நியூசிலாந்து தங்கள் அணியை முதலில் அறிவித்தது. அதனை தொடர்ந்து ஒவ்வொரு நாடும் தங்களது அணிகளை அறிவித்து வருகிறது. ஒவ்வொரு நாடும் 15 பேர் கொண்ட அணியையையும், கூடுதலாக 5 பேரை காத்திருப்பு பட்டியலில் வைத்து கொள்ளலாம்.
இதுவரை அணிகளை அறிவித்துள்ள நாடுகள்:
ஆப்கானிஸ்தான்: ரஹ்மானுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), இப்ராஹிம் சத்ரான், அஸ்மத்துல்லா உமர்சாய், நஜிபுல்லா ஜத்ரான், முகமது இஷாக், முகமது நபி, குல்பாடின் நைப், கரீம் ஜனத், ரஷித் கான் (கேப்டன்), நங்யால் கரோட்டி, முஜீப் உர் ரஹ்மான், நூர் அகமது, நவீன்-உல்-ஹக், ஃபசல்ஹக் ஃபரூக்கி, ஃபரீத் அகமது மாலிக்
காத்திருப்பு வீரர்கள்: செடிக் அடல், ஹஸ்ரத்துல்லாஹ் ஜசாய், சலீம் சஃபி
ஆஸ்திரேலியா: மிட்செல் மார்ஷ் (கேப்டன்), ஆஷ்டன் அகர், பாட் கம்மின்ஸ், டிம் டேவிட், நாதன் எல்லிஸ், கேமரூன் கிரீன், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், கிளென் மேக்ஸ்வெல், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டோனிஸ், மேத்யூ வேட், டேவிட் வார்னர், ஆடம் ஜாம்பா
இங்கிலாந்து: ஜோஸ் பட்லர் (கேப்டன்), மொயின் அலி, ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜொனாதன் பேர்ஸ்டோவ், ஹாரி புரூக், சாம் கர்ரன், பென் டக்கெட், டாம் ஹார்ட்லி, வில் ஜாக்ஸ், கிறிஸ் ஜோர்டான், லியாம் லிவிங்ஸ்டோன், அடில் ரஷித், ஃபில் சால்ட், ரீஸ் டாப்லி, மார்க் வுட்
இந்தியா: ரோஹித் சர்மா (கேப்டன்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா, முகமது. சிராஜ்.
காத்திருப்பு வீரர்கள்: சுப்மான் கில், ரின்கு சிங், கலீல் அகமது மற்றும் அவேஷ் கான்
நியூசிலாந்து: கேன் வில்லியம்சன் (கேப்டன்), ஃபின் ஆலன், ட்ரென்ட் போல்ட், மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாப்மேன், டெவோன் கான்வே, லாக்கி பெர்குசன், மாட் ஹென்றி, டேரில் மிட்செல், ஜிம்மி நீஷம், க்ளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, மிட்செல் சான்ட்னர், இஷி சோதி.
காத்திருப்பு வீரர்கள்: பென் சியர்ஸ்
தென்னாப்பிரிக்கா: எய்டன் மார்க்ராம் (கேப்டன்), ஓட்டீனல் பார்ட்மேன், ஜெரால்ட் கோட்ஸி, குயின்டன் டி காக், ஜார்ன் ஃபோர்டுயின், ரீசா ஹென்ட்ரிக்ஸ், மார்கோ ஜான்சன், ஹென்ரிச் கிளாசென், கேசவ் மஹாராஜ், டேவிட் மில்லர், அன்ரிச் நார்ட்ஜே, ககிசோ ரபாடா, ட்ரைஸ்டன் ரிக்கெல்டன், ட்ரைஸ்டன் ரிகெல்டன், ஸ்டப்ஸ்
இந்த அணிகளை தவிர பங்களாதேஷ், கனடா, அயர்லாந்து, நமீபியா, நேபாளம், நெதர்லாந்து, ஓமன், பப்புவா நியூ கினியா, பாகிஸ்தான், ஸ்காட்லாந்து, இலங்கை, உகாண்டா, அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகள் இன்னும் தங்களது உலக கோப்பைக்கான அணியை அறிவிக்கவில்லை.