டெல்லி: போதை பொருள் கடத்தியதாக கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் திமுக நிர்வாகி, ஜாபர் சாதிக் உள்ளிட்ட 5 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்ய அனுமதி கோரி டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மனு செய்துள்ளது. டெல்லியில் கைப்பற்றப்பட்ட போதைபொருள் கடத்தல் வழக்கில், முக்கிய குற்றவாளியாக கருதப்படும், தமிழ் சினிமா தயாரிப்பாளரும் முன்னாள் திமுக நிர்வாகியுமான ஜாபர் சாதிக், முஜிபுர், முகேஷ், அசோக்குமார், சதானந்தம் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது குற்றப்பத்திரிகை […]