
ரஜினியுடன் இணைந்து நடனமாடும் அனிரூத்?
ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'வேட்டையன்' . இதில் ரஜினியுடன் இணைந்து அமிதாப் பச்சன், பஹத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷரா விஜயன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். லைகா புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார்.
இதன் படப்பிடிப்பு பல கட்டமாக திருவனந்தபுரம், கன்னியாகுமரி, மும்பை, சென்னை, ஐதராபாத் ஆகிய பகுதிகளில் நடைபெற்று வந்தது. கடந்த சில நாட்களாக வேட்டையன் படத்திற்காக ஓப்பனிங் பாடல் காட்சிகளைக் படமாக்கி வந்தனர். இப்போது கிடைத்த தகவலின் படி, இந்த ஓப்பனிங் பாடலில் ஒரு சில நிமிட காட்சிகளில் ரஜினியுடன் இணைந்து அனிரூத்தும் நடனமாடியுள்ளார் என தெரிவிக்கின்றனர்.
ஏற்கனவே தான் இசையமைத்த சில முன்னணி நடிகர்களின் படங்களில் அனிருத்தும் சில காட்சிகளில் தோன்றி நடனமாடி உள்ளார். இப்போது முதன்முறையாக ரஜினி உடன் இணைந்து ஆடுகிறார்.