தங்கம் விலை ரூ.50,000 ஆக உயர்ந்தது முதல் ரூ.55,000 வரை விறுவிறுவென்று ஏறிக்கொண்டே சென்றது. ‘இப்படியே போச்சுனா எப்படி தங்கம் வாங்கறது?’ என்ற மக்களின் கேள்விக்கு, சற்று ஆறுதலாக சில நாட்களாக தங்கம் விலை கொஞ்சம் ஏறியும், கொஞ்சம் இறங்கியும் வந்தது. இன்று ஒரே நாளில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.920 குறைந்துள்ளது.
நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.6,750-க்கும், ஒரு பவுன் தங்கம் ரூ.54,000-க்கும் விற்பனை ஆனது. இன்று கிராமுக்கு ரூ.115 குறைந்து ரூ.6,635-க்கும், பவுனுக்கு ரூ.920 குறைந்து ரூ.53,080-க்கும் விற்பனை ஆகி வருகிறது.
ஒரு கிராம் வெள்ளி நேற்று ரூ.87-க்கு விற்பனை ஆன நிலையில், இன்று ரூ.86.50-க்கு விற்பனை ஆகி வருகிறது.
அடுத்தடுத்து முகூர்த்த நாள்களும், முக்கியமாக அட்சய திருதியையும் வர இருக்கும்பட்சத்தில் தங்கம் விலை இன்னும் குறையுமா? அல்லது இப்படியே தொடருமா? என்பது பெரிய கேள்விக்குறியாக உள்ளது.
என்ன மக்களே…தங்கம் விலை இன்னும் குறையுமா அல்லது ஏறுமா? – நீங்க என்ன நினைக்குறீங்க?