ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2'
கடந்த 1996ம் ஆண்டில் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வெளிவந்த திரைப்படம் 'இந்தியன்'. தற்போது ஷங்கர், கமல்ஹாசன் கூட்டணியில் 'இந்தியன் 2' படம் உருவாகி வருகிறது. இதில் காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் பீர்த் சிங், விவேக், மனோபாலா, சமுத்திரக்கனி, பிரியா பவானி சங்கர், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். லைகா மற்றும் ரெட் ஜெயன்ட் ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார்.
இதன் படப்பிடிப்பு நிறைவு பெற்று கடந்த சில மாதங்களாக போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இத்திரைப்படம் வருகின்ற ஜூன் மாதத்தில் திரைக்கு வரும் என அறிவித்தனர். கடந்த சில நாட்களாக இந்தியன் 2ம் பாகம் தள்ளி வெளியாகும் என தகவல் பரவி வந்தது. இந்நிலையில் இந்தியன் 2ம் பாகம் திட்டமிட்டபடி வருகின்ற ஜூன் 13ம் தேதியில் வெளியிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.