சென்னை: தமிழ்நாட்டில் அரசு பேருந்துகள் முறையான பராமரிப்பு இல்லாமல் இயக்கப்படுவதால், தொடர் விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக சென்னையில் மாநகர பேருந்தின் கதவு கழன்று விழுந்த விபத்தில், பேருந்துக்காக காத்திருந்த பெண் பயணி காயமடைந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ‘சென்னை, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து 70ஏ வழித்தட எண் கொண்ட பேருந்து ஆவடி நோக்கி நேற்று இரவு சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து திருமங்கலம் பேருந்து நிறுத்தம் அருகில் வந்தபோது, பேருந்துக்காக காத்திருந்த […]
