கர்நாடகாவில் ஜேடி(எஸ்) எம்.பி பிரஜ்வல் ரேவண்ணா மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் அரசியல் அரங்கில் பெரும் அதிர்வலைகள் ஏற்பட்டிருக்கின்றன. அது தொடர்பாக ஜேடி(எஸ்), பா.ஜ.க கூட்டணிக் கட்சிகளை விமர்சித்த ராகுல் காந்தி, “கர்நாடகாவில் பெண்களுக்கு எதிரான கொடூரமான குற்றங்கள் குறித்து மோடி வழக்கம் போல் வெட்கமே இல்லாமல் மௌனம் காத்து வருகிறார். எல்லாம் தெரிந்திருந்தும், சிறு குழந்தைகள் உட்பட நூற்றுக்கணக்கான பெண்களிடம் பாலியல் சுரண்டலில் ஈடுபட்ட அரக்கனை, வெறும் ஓட்டுக்காக ஏன் பெருமைப்படுத்தினார் என்பதற்கு அவர் பதில் சொல்ல வேண்டும்?
இவ்வளவு பெரிய குற்றவாளி எப்படி இவ்வளவு எளிதாக நாட்டிலிருந்து தப்பினார்? கைசர்கஞ்ச் (பிரிஜ் பூஷன்) கர்நாடகா (ரேவண்ணா) உன்னாவ் முதல் உத்தரகாண்ட் வரை, பெண்களைக் குறிவைக்கும் குற்றவாளிகளுக்கு பிரதமரின் மௌன ஆதரவு, அவர்களின் மன உறுதியை அதிகரிக்கிறது. எனவே மோடியின் அரசியல் குடும்பத்தில் ஒரு அங்கமாக இருப்பதுதான் குற்றவாளிகளுக்குப் பாதுகாப்பின் உத்தரவாதமா?” எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
அஸ்ஸாமில் பேசிய பிரியங்கா காந்தி,“கர்நாடகாவில் நடப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அந்தக் குற்றங்களைச் செய்தவருக்கு ஆதரவாக மோடி பிரசாரம் செய்தார். தேர்தலுக்குப் பிறகு குற்றவாளி நாட்டை விட்டு ஓடிவிட்டார். மோடி, அமித் ஷா யாரும் அவரைத் தடுக்கவில்லை.
உன்னாவ் உள்ளிட்ட எங்குப் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடந்தாலும், மோடி அமைதியாகவே இருக்கிறார். குற்றவாளிகளைப் பாதுகாக்க முயல்கிறார். மணிப்பூரில் நிர்வாணமாக அழைத்துச் செல்லப்பட்ட பெண்ணின் வீடியோவை மோடி, அமித் ஷா பார்த்திருக்க வேண்டும். ஆனாலும் அவர்கள் ஏன் மௌனமாக இருந்தார்கள் எனப் புரியவில்லை” எனப் பேசியிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs