Reliance Jio 699 Rupees Plan Free Netflix: இந்தியாவின் முன்னணி டெலிகாம் ஆபரேட்டரான ரிலையன்ஸ் ஜியோ , சீனா மொபைலை விஞ்சி உலகின் மிகப்பெரிய மொபைல் டேட்டா ட்ராஃபிக் வழங்கும் நுகர்வோராக மாறியுள்ளது. தற்போது இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ, உலகின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாகவும் மாறியுள்ளது. ஜியோவின் பல்வேறு போர்ட்ஃபோலியோ ஒவ்வொரு வாடிக்கையாளரின் தேவைக்கேற்ப வெவ்வேறு ரீசார்ஜ் திட்டங்களைக் கொண்டுள்ளது.
ரிலையன்ஸ் ஜியோவின் போஸ்ட்பெய்டு திட்டம்
முகேஷ் அம்பானிக்கு சொந்தமான இந்த டெலிகாம் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ ப்ரீபெய்டு திட்டத்துடன், ஏராளமான போஸ்ட்பெய்டு திட்டங்களையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. இன்று ஜியோவின் போஸ்ட்பெய்டு திட்டம் குறித்து பார்ப்போம். இந்த போஸ்ட்பெய்ட் திட்டத்தின் விலை ரூ.699 ஆகும். இந்த திட்டத்தில் நீங்கள் சேருவதன் மூலம் நெட்ஃபிக்ஸ், அமேசான் பிரைம் லைட் சந்தா இலவசமாக கிடைக்கும். அதைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.699 திட்டதின் சிறப்பு
ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.699 திட்டம் போஸ்ட்பெய்டு திட்டமாகும். மாதம் மாதம் சுழற்சி முறையில் பில் கட்ட வேண்டியிருக்கும். இந்த திட்டத்தில் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு 100 ஜிபி 4ஜி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் கிடைக்கும் டேட்டா தீர்ந்த பிறகு, நிறுவனம் ஒரு ஜிபிக்கு ரூ.10 வசூலிக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
ரிலையன்ஸ் ஜியோ ஆட்-ஆன் பேமிலி (Add-on Family)
ரிலையன்ஸ் ஜியோவின் இந்த போஸ்ட்பெய்ட் திட்டத்தில் 3 ஆட்-ஆன் குடும்ப சிம் கார்டுகளும் வழங்கப்படுவது சிறப்பு. குடும்ப சிம் கார்டுக்கு ஒவ்வொரு மாதமும் 5 ஜிபி கூடுதல் டேட்டாவும் கிடைக்கும். இந்த திட்டத்தில் வழங்கப்படும் ஆட்-ஆன் குடும்ப சிம் கார்டுக்கு மாதம் ரூ.99 மட்டுமே செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
வரம்பற்ற அழைப்பு & தினமும் 100 எஸ்எம்எஸ்
இந்த போஸ்ட்பெய்ட் திட்டத்தில் ஜியோ வாடிக்கையாளர்கள் வரம்பற்ற குரல் அழைப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அதாவது நாடு முழுவதும் உள்ள எந்த நெட்வொர்க்கிலும் வரம்பற்ற உள்ளூர் மற்றும் எஸ்டிடி அழைப்புகள் வழங்கப்படுகின்றன. மேலும் இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் இலவசமாக கிடைக்கும்.
வரம்பற்ற 5ஜி டேட்டா
நீங்கள் ஜியோவின் 5ஜி நெட்வொர்க்கைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், இந்தத் திட்டத்தில் வரம்பற்ற 5ஜி டேட்டாவைச் செலவிடலாம்.
நெட்ஃபிக்ஸ், அமேசான் பிரைம் லைட், ஜியோசினிமா இலவசம்
இந்த திட்டத்தில் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு Netflix (பேசிக் திட்டம்) மற்றும் அமேசான் பிரைம் லைட்டின் இலவச சந்தா வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் கிடைக்கும் Amazon Prime Lite சந்தா 2 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். இது தவிர, JioTV, JioCinema மற்றும் Jiocloud சந்தாவும் இந்த பேக்கில் இலவசமாகக் கிடைக்கும்.