உலகின் முதல் சிஎன்ஜி மோட்டார்சைக்கிள் அறிமுக தேதி வெளியானது

வரும் ஜூன் 18 ஆம் தேதி சர்வதேச அளவில் முதல் சிஎன்ஜி மோட்டார்சைக்கிளை பஜாஜ் ஆட்டோ விற்பனைக்கு அறிமுகம் செய்ய உள்ளதை இன்றைய பல்சர் என்எஸ் 400இசட் அறிமுகத்தின் பொழுது ராஜீவ் பஜாஜ் உறுதிப்படுத்தியுள்ளார்.

முதற்கட்டமாக 100-150சிசி சிஎன்ஜி என்ஜின் பிரிவுகளில் மூன்று மாடல்களை அறிமுகம் செய்ய பஜாஜ் ஆட்டோ திட்டமிட்டு வருகின்றது. சில வாரங்களுக்கு முன்பாக சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டு வந்த சில பஜாஜ் சிஎன்ஜி பைக்கின் மாதிரிகள் வெளியானதை தொடர்ந்து தற்பொழுது அறிமுக தேதியும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

சிஎன்ஜி பைக் குறித்து ராஜீவ் பஜாஜ் கூறுகையில், வரவுள்ள முதல் சிஎன்ஜி பைக் மூலம் எரிபொருள் செலவு பாதியாக அல்லது அதை விட மிக குறைவாகும் என குறிப்பிட்டுள்ளார். எனவே, பஜாஜ் சிஎன்ஜி பைக்குகளின் மைலேஜ் கிலோ ஒன்றுக்கு 100 கிலோ மீட்டருக்கு கூடுதலாக வழங்கலாம்.

வரவிருக்கும் மாடல் குறித்தான பெயர் பற்றி எந்த உறுதியான தகவலும் இல்லையென்றாலும், ப்ரூஸர் (Bruzer CNG) சிஎன்ஜி மோட்டார்சைக்கிள் என அழைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.