டீசல் விலை கடந்த 30ஆம் திகதியிலிருந்து குறைவடைந்ததால் பஸ் கட்டணத்தில் திருத்தம் செய்யப்படவில்லை என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.
கடந்த 30ஆம் திகதி நள்ளிரவிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் இவ்வேரிபொருள் விலைக்குறைப்பு இடம்பெற்றதுடன் அதில் டீசலின் விலை 30 ரூபாவால் குறைவடைந்துள்ளது.
அமைச்சரவையினால் 2002.06.12 அன்று அனுமதிக்கப்பட்ட தேசிய பஸ் கட்டணக் கொள்கைக்கு இணங்க 2002 ஜூலை மாதத்திலிருந்து தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் பஸ் கட்டண திருத்தம் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.