இந்திய சந்தையில் ஆஃப் ரோடு சாகசங்களுக்கு ஏற்ற பிரத்தியேகமான மாடல்களில் ஒன்றான ஃபோர்ஸ் கூர்க்காவில் 3 டோர் மற்றும் 5 டோர் என இரண்டிலும் விற்பனைக்கு ரூ.16.75 லட்சம் முதல் ரூ.18 லட்சம் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனத்தில் இருந்து பெறப்பட்ட 2.6 லிட்டர் டீசல் என்ஜின் அதிகபட்சமாக பவர் 140 hp, மற்றும் 250Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் உள்ளது. இதே எஞ்சினை இரண்டு மாடல்களும் பகிர்ந்து கொள்ளுகின்றது. கூடுதலாக முதன்முறையாக இந்த பிரிவில் shift-on-the-fly 4WD (4H,4L மற்றும் 2H) பெற்றுள்ளது.
233 மிமீ கிரவுண்ட் கிளியரண்ஸ் பெற்றுள்ள இந்த மாடலில் பச்சை, வெள்ளை, சிவப்பு மற்றும் கருப்பு ஆகிய நான்கு நிறங்களை கொண்டுள்ளது. 16 அங்குல புதிய டிசைன் பெற்ற அலாய் வீல் (245/70 R16) கொண்டுள்ளது.
3 டோர் மற்றும் 5 டோர் பெற்ற கூர்க்கா எஸ்யூவி இன்டிரியரில் 9.0-இன்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, டிஜிட்டல் கிளஸ்ட்டர், ORVM, டில்ட் மற்றும் டெலஸ்கோபிக் ஸ்டெரிங் அட்ஜஸ்ட் மற்றும் ரியர் வியூ கேமரா, டயர் பிரஷர் கண்காணிப்பு உள்ளிட்ட வசதிகளை பெற்றதாக அமைந்துள்ளது.
இந்திய சந்தையில் கிடைக்கின்ற கூர்க்கா எஸ்யூவிக்கு சவால் விடுக்கும் வகையில் மாருதி ஜிம்னி, மஹிந்திரா தார் மற்றும் வரவிருக்கும் மஹிந்திரா தார் அர்மடா ஆகியவற்றை எதிர்கொள்ளுகின்றது.