SRH vs RR: வியாழன் அன்று நடைபெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணிக்கு எதிரான பரபரப்பான ஐபிஎல் போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணி தோல்வியை தழுவியது. அதற்கு அந்த அணியில் இடம்பிடித்திருக்கும் ஸ்டார் பந்துவீச்சாளரே முக்கிய காரணமாக அமைந்ததார். அவர் இப்போது 20 ஓவர் உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார். இப்போட்டியில் சன்ரைசர்ஸ் அணி ஒரு ரன்னில் கடைசி பந்தில் வெற்றியை பெற்ற நிலையில், அவர் வீசிய 4 ஓவர்களில் 62 ரன்களை வாரி வழங்கினார். அவர் வேறு யாரும் அல்ல, யுஸவேந்திர சாஹல் தான்
யுஸ்வேந்திர சாஹல் மோசமான பந்துவீச்சு
இந்தப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக யுஸ்வேந்திர சாஹல் ரன்களை வாரி வழங்கினார். 2024 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடித்த மிக சில நாட்களே ஆன நிலையில், சாஹலிடம் இருந்து வெளிப்பட்ட இப்படியான பந்துவீச்சு பிசிசிஐ தேர்வாளர்களுக்கும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. ஏற்கனவே 20 ஓவர் உலக கோப்பைக்கான இந்திய அணியில் நான்கு சுழற்பந்துவீச்சாளர்கள் எதற்கு? என்ற கேள்வி ஓங்கி ஒலித்துக் கொண்டிருகிறது. மே 15 ஆம் தேதிக்குள் அணிக்குள் ஏதேனும் மாறுதல்கள் இருந்தால் செய்து கொள்ளலாம் என ஐசிசி அறிவித்திருக்கும் இந்த நேரத்தில் சாஹல் இப்படி மோசமாக பந்துவீசுயுள்ளார். இதனால், அவரது இடம் இப்போது கேள்விக்குறியாகியுள்ளது.
யுஸ்வேந்திர சாஹல் மோசமான ரெக்கார்டு
டி20 உலகக் கோப்பைக்கு முன் யுஸ்வேந்திர சாஹல் இப்படி பந்துவீசுவது இந்திய அணிக்கு நல்ல அறிகுறி அல்ல. அவர் விரைவில் தனது செயல்திறனை மேம்படுத்த வேண்டும். சாஹல் ஐபிஎல் 2024 சீசனில் இதுவரை 10 போட்டிகளில் 13 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஐபிஎல் தொடரில் யுஸ்வேந்திர சாஹல் 155 போட்டிகளில் விளையாடி 200 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஐபிஎல்லில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பந்து வீச்சாளராகவும் சாஹல் மாறியுள்ளார்.
ரிங்கு சிங் அல்லது கேஎல் ராகுல்
அவருடைய ரெக்கார்டு நல்லதாக இருந்தாலும் சமீபத்திய பார்ம் கவலைக்குறியதாக இருப்பதை பிசிசிஐ கவனத்தில் கொள்ளும். அவர் ஏற்கனவே இந்திய அணியில் நீண்ட நாட்களாக விளையாடாமல் இருக்கிறார். தற்போது வாய்ப்பளிக்கப்பட்டிருக்கும் நிலையில், 20 ஓவர் உலக கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன்பே அந்த வாய்ப்பும் பறிபோகவும் வாய்ப்பு இருக்கிறது. ஒருவேளை யுஸ்வேந்திர சாஹல் நீக்கப்பட்டால் அவருக்கு பதிலாக கேஎல் ராகுல் அல்லது ரிங்கு சிங் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது.