க்ரீவஸ் காட்டன் நிறுவனத்தின் ஆம்பியர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பாளர் வெளியிட்டுள்ள புதிய நெக்ஸஸ் மாடலில் உள்ள பேட்டரி, ரேஞ்ச், வசதிகள் மற்றும் தமிழ்நாட்டின் ஆன்ரோடு விலை உள்ளிட்ட விபரங்களை தொகுத்து அறிந்து கொள்ளலாம்.
முந்தைய ஆம்பியர் மாடல்களில் இருந்து மாறுபட்ட நெக்சஸ் மாடல் மூலம் போட்டியாளர்களான ஓலா, ஏதெர், பஜாஜ் சேட்டக், ஹீரோ விடா மற்றும் டிவிஎஸ் ஐக்யூப் ஆகியவற்றை எதிர்கொள்ள உள்ளது.
Ampere Nexus Escooter
ரிஸ்டா, ஐக்யூப் என இரு மாடல்களையும் நேரடியாக எதிர்கொள்ளும் வகையில் ஆம்பியர் நெக்சஸ் இ-ஸ்கூட்டரில் 3 கிலோவாட் ஹவர் LFP பேட்டரி ஆனது பொருத்தப்பட்டு அதிகபட்சமாக சிங்கிள் சார்ஜில் 136 கிமீ வழங்கும் என CVMR சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. 15A சார்ஜர் மூலம் 0-100 % சார்ஜிங் பெற 3 மணி நேரம் 22 நிமிடங்கள் மட்டும் எடுத்துக் கொள்ளும்.
கூடுதலாக 25A விரைவு சார்ஜர் ஆப்ஷனலாக 2 மணி நேரம் 30 நிமிடங்கள் மட்டுமே எடுத்துக் கொள்ளும் என ஆம்பியர் தெரிவித்துள்ளது.
அதிகபட்சமாக 4 கிலோவாட் பவர் 35Nm டார்க் வழங்கும் மோட்டாரை கொண்டுள்ள நெக்சஸில் ஈக்கோ,சிட்டி, பவர், லிம்ப் ஹோம் மற்றும் ரிவர்ஸ் என 5 விதமான ரைடிங் மோடுகள் ஆனது பெற்றுள்ளது. இதில் டாப் பவர் மோடில் மணிக்கு அதிகபட்ச வேகம் 93 கிமீ ஆக எட்டுகின்றது. ஈக்கோ மோடில் அதிகபட்சமாக மணிக்கு 42 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறனுடன் நிகழ்நேரத்தில் 100-110 கிமீ ரேஞ்ச் வெளிப்படுத்தலாம். சிட்டி மோடில் அதிகபட்ச வேகம் மணிக்கு 63 கிமீ ஆக உள்ளது.
இருபக்கத்திலும் 90/90 -12 டயர் பெற்று முன்புறத்தில் டிஸ்க் மற்றும் பின்புறத்தில் டிரம் பிரேக்குடன் அலாய் வீல் கொண்டு முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் டூயல் ஷாக் அப்சார்பர் கொண்டதாக அமைந்துள்ளது.
ஆம்பியர் நெக்சஸ் ஸ்கூட்டரில் EX மற்றும் ST என இரு வேரியண்டுகளை பெற்றுள்ள நிலையில் குறைந்த விலை EX வேரியண்டில் 6.2 அங்குல எல்சிடி டிஸ்பிளே பெற்றதாக அமைந்துள்ளது. பிரீமியம் நெக்சஸ் ST மாடலில் 7 அங்குல தொடுதிரை டிஎஃப்டி கிளஸ்ட்டரை கொண்டு ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி அம்சங்களுடன் டர்ன் பை டர்ன் நேவிகேஷன் உட்பட இசைக் கட்டுப்பாடு ஆகியவற்றை பெற்றுள்ளது.
அக்வா, வெள்ளை, கிரே மற்றும் சிவப்பு என நான்கு நிறங்களை பெற்றுள்ள ஆம்பியர் நெக்சஸ் EX விலை ரூ.1.10 லட்சம் முதல் டாப் ST வேரியண்ட் ரூ.1.20 லட்சம் ஆக உள்ளது. இந்த அறிமுக சலுகை குறிப்பிட்ட சில வாரங்களுக்கு மட்டுமே கிடைக்கும். அதன்பிறகு வேரியண்ட் விலை ரூ.10,000 வரை உயர்த்தப்பட உள்ளது.
ஆம்பியர் நெக்சஸ் EX – ₹ 1,18,432
ஆம்பியர் நெக்சஸ் ST – ₹ 1,28,543
(on road price in tamilnadu)