கர்நாடகாவில் கடந்த வாரம், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் தொகுதியின் ஜே.டி.எஸ் வேட்பாளருமான சிட்டிங் எம்.பி பிரஜ்வல் ரேவண்ணா தொடர்புடைய 2,000-க்கும் மேற்பட்ட பாலியல் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியானது. நாடாளுமன்றத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்கு பதிவுக்கு முந்தைய நாள் இந்த வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியதையடுத்து, இதில் சிறப்பு விசாரணைக் குழுவை மாநில அரசு அமைத்தது.

இன்னொருபக்கம், பிரஜ்வல் ரேவண்ணா ஜெர்மனிக்கு தப்பிவிட்டதாக தகவல் வெளியானது. இருப்பினும், பிரஜ்வல் ரேவண்ணா மீது பல பெண்கள் போலீஸில் புகாரளிக்க, அவரின் தந்தையான முன்னாள் அமைச்சர் ரேவண்ணா மீதும் பலரும் பாலியல் வன்கொடுமை புகார் அளித்தனர்.
#WATCH | Karnataka: JD(S) leader HD Revanna taken into custody by SIT officials in connection with a kidnapping case registered against him at KR Nagar police station, in Bengaluru.
More details awaited. pic.twitter.com/9ciIjhlmmu
— ANI (@ANI) May 4, 2024
அதில் ஒருவர், ரேவண்ணா வீட்டில் வேலைபார்த்துவந்த தன்னுடைய தாய் அவரால் பாலியல் வன்கொடுமைக்குள்ளானதாகவும்,இந்த விவகாரம் வீடியோ வெளியானதால் மூலம் தெரியவந்ததாகவும், இது தொடர்பாக புகாரளித்த தன்னுடைய தாய் கடத்தப்பட்டுவிட்டதாகவும் கே.ஆர்.நகர் காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கிறார். அதைத்தொடர்ந்து, ரேவண்ணா மீது போலீஸார் கடத்தல் வழக்கு பதிவுசெய்தனர். இந்த நிலையில், சிறப்பு விசாரணைக் குழு அதிகாரிகளால் ரேவண்ணா தற்போது கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88