கோழிக்கோடு:
கேரளாவின் கோழிக்கோட்டில் உள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் (என்.ஐ.டி.) தங்கி படித்து வந்த மாணவர் ஒருவர் இன்று அதிகாலையில், கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதி கட்டிடத்தில் இருந்து குதித்து இறந்துள்ளார். இதுபற்றி கண்ணமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்த மாணவர் மூன்றாம் ஆண்டு மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து வந்த யோகேஷ்வர் நாத் என்பதும், அவர் வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.
இது தற்கொலையாக இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. எனினும், விரிவான விசாரணைக்கு பிறகே மாணவரின் மரணம் தொடர்பான கூடுதல் தகவல்கள் தெரியவரும் என போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கல்லூரி வளாகத்தில் மாணவர் ஒருவர் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம், சக மாணவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.