ஆஸ்திரிரேலியாவில் 103 ஆண்டுகள் விமான சேவையில் ஈடுபட்டு வரும் நிறுவனம் Qantas airline. இந்த நிறுவனம் மீது ரத்து செய்யப்பட்ட விமானங்களுக்கும் டிக்கட் விற்கப்பட்டு மோசடி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பான விசாரணை நடந்து வந்தது. அதில், விமான நிறுவனம், விமானம் ரத்து செய்யப்பட்ட போதிலும், பல்லாயிரக்கணக்கான விமான டிக்கெட்களை விளம்பரப்படுத்துவதன் மூலம் விற்றிருப்பதும், இதனால் 86,000 பயணிகள் பாதிக்கப்பட்டதும் தெரியவந்தது.
இந்த நிலையில், பதிவு செய்யப்பட்ட விமானம் திடீரென ரத்து செய்யப்படும் விவகாரம் தொடர்ந்ததால், ஆஸ்திரேலியாவில் Ghost Flights (பேய் விமானம்) என்ற சொல்லின் மூலம் இந்த ஊழல் பெரும் விவாதமானது. இந்த நிலையில், அந்த நாட்டின் கண்காணிப்பு அமைப்பு, “விமானங்கள் ரத்து செய்யப்பட்ட போதிலும், பல்லாயிரக்கணக்கான விமான இருக்கைகளை விளம்பரப்படுத்துவதன் மூலம் நுகர்வோரை தவறாக வழிநடத்தியதை Qantas ஒப்புக்கொண்டது. மேலும், இந்த செயலுக்காக 66 மில்லியன் டாலர் அபராதம் செலுத்தவும், பாதிக்கப்பட்ட 86,000 பயணிகளுக்கு 13 மில்லியன் டாலர் இழப்பீடு வழங்கவும் ஒப்புக்கொண்டது” எனக் குறிப்பிட்டிருக்கிறது.66 மில்லியன் டாலர் என்பது இந்திய மதிப்பில் சுமார் 550 கோடி ரூபாய் ஆகும்.
இந்த விவகாரம் குறித்துப் பேசிய குவாண்டாஸ் தலைமை நிர்வாகி வனேசா ஹட்சன்,“எங்கள் வாடிக்கையாளர்களில் பலருக்கு சரியான நேரத்தில் ரத்து அறிவிப்புகளை வழங்கத் தவறியதால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை நாங்கள் அறிவோம். அதற்காக நாங்கள் வருந்துகிறோம்” எனக் குறிப்பிட்டிருக்கிறார். இந்த விமான ஊழல் வழக்கு முடிவுக்கு வந்ததில், விமானப் பயணிகளுக்கு மத்தியில் அதிர்ச்சி கலந்த மகிழ்ச்சி ஏற்பட்டிருப்பது குறிப்பிடதக்கது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88