டோமினார் 400 மோட்டார் சைக்கிள் பெரிய அளவில் சந்தை மதிப்பை பெறவில்லை, என்றாலும் கூட தொடர்ந்து இந்த மாடலை முற்றிலும் மாறுபட்டதாக மேம்படுத்த பஜாஜ் ஆட்டோ திட்டமிட்டு இருக்கின்றது.
விற்பனையில் உள்ள மாடல் ஆனது முதன்முறையாக 2016 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட பொழுது ராயல் என்ஃபீல்டுக்கு எதிராக களமிறக்கப்பட்டிருந்தாலும் கூட இந்த மாடல் பெரிதான வரவேற்பினை பெறவில்லை.
மாடர்ன் பவர் குரூஸர் ஸ்டைல் பெற்றிருந்தாலும் கூட பெறவில்லை. ஆனாலும் தொடர்ந்து இந்த மாடல் ஆனது பல்வேறு அப்டேட்களை வழங்கி வந்த நிலையில் அடுத்ததாக வரவுள்ள மாடல் முற்றிலும் மேம்பட்டு பல நவீனத்துவமான ஸ்டைலிங் அம்சங்களுடன் மிகவும் சவாலாக விளங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தற்பொழுது உள்ள மாடலில் இருந்து முற்றிலும் மாறுபட்ட டாமினார் 400 விற்பனைக்கு வரவுள்ளது இது இந்த ஆண்டின் இறுதி அல்லது அடுத்த ஆண்டின் துவக்க மாதங்களில் எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆனால் என்ஜின் ஆப்ஷனில் எந்த ஒரு மாற்றமும் இருக்காது தற்பொழுது உள்ள 373 சிசி எஞ்சினை பயன்படுத்தப்பட்டு இருக்கும்.
குறிப்பாக பஜாஜ் ஆட்டோ நிறுவனம் நடுத்தர மோட்டார் சைக்கிள் பிரிவில் தனது பிரிமியம் பிராண்டுகளான கே.டி.எம் ட்ரையம்ப் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய பல்சர் என்எஸ் 400Z, டோமினார் உட்பட மாறுபட்ட பிரிவுகளில் மாடல்களை 250 முதல் 500 சிசி வரையிலான பிரிவில் களம் இறக்க திட்டமிட்டு இருக்கின்றது. ஏனென்றால் கிளாசிக் ரக மாடல்களை பொறுத்தவரை ராயல் என்ஃபீல்டு ஆக்கிரமித்துள்ளதால் மற்ற ஸ்டைலிசான டிசைன் பெற்றவைக்கு பஜாஜ் ஆட்டோ நிறுவனம் மிகப்பெரிய அளவில் சந்தை மதிப்பை கைப்பற்ற திட்டமிட்டு இருக்கின்றது.
ஆனால் மாறிவரும் சந்தையில் நிலை ஹீரோ மோட்டோகார்ப் உட்பட ஹோண்டா, டிவிஎஸ், சுசூகி, யமஹா போன்ற நிறுவனங்களும் இந்த பிரிவில் மிகப்பெரிய அளவில் கவனம் செலுத்த துவங்கி உள்ளதால் பஜாஜ் ஆட்டோவிற்கு பல்சர், டோமினார் பிராண்டுகளின் மதிப்பு கேடிஎம் மற்றும் ட்ரையம்ப போன்ற மாடல்களின் மதிப்பு இருப்பதினால் சற்று கூடுதல் பலமாக அமைந்திருக்கும் ஆனால் போட்டியாளர்கள் கொடுக்கப் போகின்ற மிகவும் சவாலான மாற்றங்கள் எவ்வாறு இருக்கும் என்பதை எதிர்காலம் தான் பதில் சொல்ல வேண்டும்