சென்னை தேர்தல் ஆணையத்துக்கு வாக்குப்பதிவு விவர வெளியீடு தாமதம் குறித்து விசிக தலைவர் திருமாவளவன் கடிதம் எழுதி உள்ளார். இன்று தேர்தல் ஆணையத்திற்கு விசிக தலைவர் திருமாவளவன் எழுதியுள்ள கடிதத்தில், ”இந்தியத் தேர்தல் ஆணையம் 2024 மக்களவைக்கான முதல் 2 கட்டத் தேர்தலுக்கான இறுதி வாக்காளர் எண்ணிக்கைத் தரவுகளை 2024 ஏப்ரல் 30 அன்றுதான் வெளியிட்டது. முதல் கட்ட வாக்குப்பதிவின் (19 ஏப்ரல் 2024) தரவுகள் 10 நாட்களுக்குப் பிறகுதான் வெளியிடப்பட்டது. இரண்டாம் கட்ட வாக்குப்பதிவின் தரவுகள் […]