‘நாயகன்’ படத்துக்குப் பிறகு மணிரத்னத்துடன் நடிகர் கமல்ஹாசன், மீண்டும் இணைந்துள்ள படம் ‘தக் லைஃப்’. த்ரிஷா, அபிராமி, கவுதம் கார்த்திக், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி உட்பட பலர் இதில் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். இதில் கமல்ஹாசன் 3 வேடங்களில் நடிக்கிறார். ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தில் கமல்ஹாசனுடன் சிலம்பரசன் நடிக்க இருப்பதை படக்குழு இன்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. […]
