பங்குச் சந்தையில் முதலீடு செய்து பணம் சம்பாதிக்க பலரும் விரும்புகிறோம். ஆனால், எந்தப் பங்கை எப்போது என்ன விலையில் வாங்க வேண்டும், எப்போது அதை விற்க வேண்டும் என்பது பலருக்குத் தெரியாது. அதுமட்டுமல்லாமல், சந்தை ஏறும் போதும் என்ன செய்ய வேண்டும், சந்தை இறங்கும் போது என்ன செய்ய வேண்டும், ஒரு பங்கை தேர்வு செய்யும்போது என்ன விஷயங்களெல்லாம் பார்க்க வேண்டும் என்று எதுவுமே தெரியாது. இதெல்லாம் தெரியாததால் பங்குச் சந்தையில் முதலீடு செய்யாமல் தயக்கத்திலேயே இருக்கிறோம்.
பங்கு முதலீடு குறித்த தயக்கம் புதிதாக முதலீடு செய்பவர்களுக்குத்தான் என்றில்லை… 20, 30 வருடங்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்பவர்களுக்குக்கூட இந்த விஷயத்தில் கொஞ்சம் சறுக்கிவிடவே செய்கிறார்கள். உண்மையைச் சொன்னால், பங்குச் சந்தையில் அனுபவம் கொண்ட ஆராய்ச்சியாளர்களால்தான் பங்குகளைப் பற்றி துல்லியமாகக் கணிக்க முடியும்.
அத்தகைய ஆராய்ச்சியாளர்கள்தான் பங்குச் சந்தையை வழிநடத்தவும் செய்கிறார்கள். பங்குத் தரகு நிறுவனங்கள், மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் என அனைத்து பங்கு முதலீடு சார்ந்த விஷயங்களிலும் அவர்களுடைய பங்கு இருக்கிறது. அத்தகைய ஆராய்ச்சியாளர்கள் தங்களின் முதலீட்டு அறிவையும், அனுபவத்தையும் கற்றுத் தர முன்வந்தால் யாரும் பங்குச் சந்தையில் சிறப்பாக முதலீடு செய்து லாபத்தை ஈட்ட முடியும். அந்த வகையில் 30 வருடங்களாக இந்தியப் பங்குச் சந்தையில் அனுபவம் பெற்ற, ஐ.டி.பி.ஐ கேப்பிடல் நிறுவனத்தின் ஆராய்ச்சிப் பிரிவின் தலைவராகவும் இருந்த ஏ.கே.பிரபாகர் தன்னுடைய 30 வருட பங்குச் சந்தை நிபுணத்துவத்தை நாணயம் விகடன் நடத்தும் பயிற்சி வகுப்பு மூலம் பகிர்ந்துகொள்ள இருக்கிறார்.
ஏற்கெனவே நாணயம் விகடனில் ஷேர் போர்ட்ஃபோலியோ தொடரை அவர் எழுதி அதன் மூலம் முதலீட்டாளர்களுக்கு கிட்டதட்ட 40 சதவிகித லாபம் கிடைக்க செய்தார். அந்த ஷேர் போர்ட்ஃபோலியோவில் அவர் பரிந்துரை பங்குகளில் அனைத்துமே சிறப்பான லாபத்தைக் கொடுத்தன.
ஷேர் போர்ட்ஃபோலியோ தொடரைத் தொடர்ந்துதான் அதைப் பயிற்சி வகுப்பாகவும் எடுக்கலாம் என்று முடிவு செய்து பங்குச் சந்தை நுணுக்கங்களை, பங்குச் சந்தை முதலீட்டில் லாபம் பார்ப்பதற்கான உத்திகளைக் கற்றுத்தர முன்வந்தார். சென்னையிலும், கோவையிலும் நடந்த ஷேர் போர்ட்ஃபோலியோ பயிற்சி வகுப்பில் முதலீட்டாளர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர். இப்போது, அடுத்த பயிற்சி வகுப்பு திருச்சியில் நடத்த திட்டமிட்டிருக்கிறோம்.
நாணயம் விகடன் நடத்தும் ‘ஷேர் போர்ட்ஃபோலியோ: பங்கு முதலீட்டின் வழிகாட்டி..!’ என்கிற நேரடி பயிற்சி வகுப்பு திருச்சியில் ஜூன் 15, 2024 (சனிக்கிழமை) அன்று நடக்கிறது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கும் இந்தப் பயிற்சி வகுப்பில் பங்குச் சந்தை நிபுணர் ஏ.கே.பிரபாகர் தன்னுடைய 30 வருட கால பங்குச் சந்தை அனுபவத்தையும் நிபுணத்துவத்தையும் கற்றுத்தர இருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள கட்டணம் ரூ.5,000 மட்டுமே. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பங்குச் சந்தை முதலீட்டில் வெற்றிகரமாக லாபம் ஈட்ட இன்றே முன் பதிவு செய்யுங்கள்.
பயிற்சி வகுப்பில் கற்றுத்தரும் விஷயங்கள் அனைவருக்கும் புரிய வேண்டும் என்பதற்காக குறைவான இருக்கைகளே ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன. அதனால் வாய்ப்பை தவற விடாதீர்கள். முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை. முன் பதிவு செய்ய https://bit.ly/NVSharePortfolio என்ற லிங்கை க்ளிக் செய்யவும்.