சென்னையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது கணவருடன் மேட்டுப்பாளையத்தில் இருந்து சென்னை செல்வதற்காக நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு பெட்டியில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது, அந்தப் பெண்ணுக்கு எதிர் இருக்கையில் நீலகிரி மாவட்டம், உதகை, அருள் நகரைச் சேர்ந்த ஜிம்ரிஸ் ராஜ்குமார் (45) என்பவர் பயணம் செய்து கொண்டிருந்தார். இவர் நீலகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராகப் பணிபுரிந்து வருகிறார்.
ரயில் பயணத்தின்போது, ஜிம்ரிஸ் ராஜ்குமார் அந்தப் பெண்ணுக்கு தொந்தரவு கொடுத்துள்ளார். அந்தப் பெண் எச்சரித்ததை அடுத்து ஜிம்ரிஸ் ராஜ்குமார் தூங்கச் சென்றுவிட்டார். பின்னர் அந்த இளம்பெண்ணும் இரவு நேரம் ஆனதால் தூங்கிக் கொண்டிருந்தார். நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் ஈரோடு அருகே வந்தபோது, மீண்டும் ஜிம்ரிஸ் ராஜ்குமார் அந்தப் பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால், அந்தப் பெண் கத்தி கூச்சலிட்டார். உடனடியாக ரயிலில் பயணம் செய்தவர்கள் ஜிம்ரிஸ் ராஜ்குமாரை மடக்கிப் பிடித்தனர். அப்போது அவர் மது போதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
ஈரோடு ரயில் நிலையம் வந்ததும் நடந்த சம்பவம் குறித்து அந்தப் பெண் ரயில்வே காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதையடுத்து ஜிம்ரிஸ் ராஜ்குமாரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், அப்பெண்ணுக்குப் பாலியல் தொந்தரவு அளித்ததை ஒப்புக் கொண்டார். இதையடுத்து, ஜிம்ரிஸ் ராஜ்குமார் மீது ஈரோடு ரயில்வே போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். தொடர்ந்து, ஈரோடு மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோபியில் உள்ள மாவட்டக் கிளை சிறையில் ஜிம்ரிஸ் ராஜ்குமார் அடைக்கப்பட்டார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb