பீஜப்பூர்: சத்தீஸ்கர் மாநிலம் பீஜப்பூர் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில், 12 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.
இதனை அதிகாரபூர்வமாக அறிவித்த சத்தீஸ்கர் முதல்வர் விஷ்ணு தியோ சாய், “இந்த என்கவுன்டர் மூலம் இந்த ஆண்டு கொல்லப்பட்ட நக்சலைட்டுகள் எண்ணிக்கை 100-ஐ தாண்டியுள்ளது. ஏப்ரல் இறுதி வரை பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில் 91 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர்; இந்த எண்ணிக்கை இப்போது 103 ஆக உயர்ந்துள்ளது. இது 2019ம் ஆண்டுக்குப் பிறகு மிக அதிகம்.
பாதுகாப்புப் படையினருக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாங்கள் ஆட்சிக்கு வந்ததில் இருந்து நக்சலிஸத்துக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறோம். விரைவில் நக்சல் தீவிரவாதத்தில் இருந்து பஸ்தர் பகுதி விடுபடும்” என்று தெரிவித்தார்.
இதற்கிடையே, என்வுன்டரின் போது நடந்த மோதலில் பாதுகாப்பு படையினர் சிலருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.