இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ள புதிய பிஎம்டபிள்யூ 3 Series கிராண் லிமோசின் M ஸ்போர்ட் புரோ எடிசன் மாடலின் அறிமுக விலை ரூ. 62.60 லட்சம் (எக்ஸ்ஷோரூம்) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஒற்றை வேரியண்டில் மட்டும் கிடைக்கின்ற இந்த காரில் 258hp பவர், 400Nm டார்க் வெளிப்படுத்துகின்ற 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 8 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பெற்றதாக அமைந்துள்ளது.
புதிய எம் ஸ்போர்ட் ப்ரோ எடிஷனில் பிளாக் நிறத்திலான கிட்னி கிரில், அடாப்டிவ் எல்இடி ஹெட்லைட் மற்றும் பளபளப்பான கருப்பு பின்புற டிஃப்பியூசர் ஆகியவை பெற்றுள்ளன.ஞ. M ஸ்போர்ட் புரோ மாடலில் ADAS அம்சங்களான பிளைண்ட் ஸ்பாட் அசிஸ்டண்ட், லேன் சேஞ்ச் அசிஸ்டண்ட் மற்றும் ரிமோட் 3D வியூ உடன் பார்க்கிங் அசிஸ்டெண்ட் பிளஸ் போன்ற அம்சங்களையும் பெறுகிறது.
இன்டிரியரில் 12.3-இன்ச் டிஜிட்டல் டிஸ்ப்ளே மற்றும் 14.9-இன்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் பல்வேறு கனெக்ட்டிவிட்டி வசதிகளுடன் வயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, மூன்று மண்டல ஏசி கட்டுப்பாடு, 16-ஸ்பீக்கர் ஹர்மன் கார்டன் சரவுண்ட் சவுண்ட் சிஸ்டம், 360 டிகிரி கேமரா ஆகியவற்றை பெற்றுள்ளது.