திருப்பூர் மாநகராட்சி நல்லூர் 2-வது வீதியைச் சேர்ந்தவர் பிரகாஷ் (36). இவர் சிட்கோ பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் டைலராக பணியாற்றி வந்தார். இவரின் மனைவி உமா மகேஷ்வரி. பிரகாஷ், தன்னுடைய மனைவி, தாய் மற்றும் சகோதரர் உடன் வசித்து வருகிறார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் பிரகாஷ் கிரெடிட் கார்டு வாங்கி உள்ளார். ஆனால், வீட்டில் உள்ளவர்கள் கிரெடிட் கார்டு வேண்டாம் என தெரிவித்ததால், அதை மீண்டும் வங்கியில் ஒப்படைக்க பிரகாஷ் முடிவு செய்துள்ளார்.

அப்போது, வங்கியில் இருந்து பேசுவதாக பெண் ஒருவர் பிரகாஷை செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். அவரிடம் தனக்கு கிரெடிட் கார்டு தேவை இல்லை என பிரகாஷ் தெரிவித்துள்ளார். இதையடுத்து, அந்த அழைப்பில் பேசிய பெண் உங்களுக்கு ஒரு ஓடிபி வரும், அதை தெரிவித்தால் உடனடியாக கிரெடிட் கார்டு ரத்து செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.
இதை நம்பிய பிரகாஷ் தனக்கு வந்த ஓடிபி என்னை அப்பெண்ணிடம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, சிறிது நேரத்தில் பிரகாஷின் கிரெடிட் கார்ட் மூலம் ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்துக்கு பொருள்கள் வாங்கப்பட்டதாக குறுந்தகவல் வந்துள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த பிரகாஷ் வங்கி நிர்வாகத்திடம் இதை தெரிவித்துள்ளார். ஆனால், பணம் முறையாக அனுப்பப்பட்டுள்ளது எனவும், பணத்தை திரும்ப செலுத்துமாறும் வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, கடந்த மூன்று ஆண்டுகளாக நண்பர்கள் உதவியுடன் சைபர் கிரைம் போலீஸ் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் என பல இடங்களில் பிரகாஷ் புகார் அளித்தும் இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த சூழலில் வங்கி தரப்பில் இருந்து பணத்தை திரும்ப செலுத்துமாறு பிரகாஷுக்கு அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான பிரகாஷ், விஷ மாத்திரை உட்கொண்டு தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பாக நல்லூர் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb