`இவரையுமா விட்டுவைக்கலை' – சென்னை மாநகராட்சி கமிஷனர் பெயரிலும் பணம் பறிக்க முயற்சி! – உஷார் மக்களே!

சென்னை மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் பெயரில் போலி வாட்ஸ்-அப் அக்கவுன்ட்டை உருவாக்கி, சம்பந்தப்பட்டவர்களிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்த கும்பலின் மோசடி முயற்சி, பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சமீப காலமாக, பொதுமக்களின் சோசியல் மீடியா அக்கவுன்ட்களின் தகவல்களைத் திருடி, முகப்பு புகைப்படங்களுடன் அச்சு அசல் அதேபோலொரு அக்கவுன்ட்டை உருவாக்கி, சம்பந்தப்பட்டவர்களின் மியூட்சுவல் நண்பர்களிடம் ஜி-பேவில் பணத்தைச் சுருட்டும் ஆன்லைன் திருட்டுக் கும்பலின் போக்கு எல்லைமீறி சென்றுகொண்டிருக்கிறது.

வாட்ஸ்-அப் போலி அக்கவுன்ட்

ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில்தான் இது போன்ற சம்பவங்கள் அதிகரித்து வந்த நிலையில், தற்போது வாட்ஸ்-அப் எண் அக்கவுன்ட்களிலிருந்தும் ஆரம்பித்துவிட்டன. இது தொடர்பாக பல்வேறு புகார்கள் சைபர் குற்றப் பிரிவுக்கு வந்திருக்கும் நிலையிலும், சங்கிலித் தொடராகத் தொடரும் இந்தக் குற்றங்களை யாராலும் தடுத்து நிறுத்தமுடியவில்லை.

இதுவரையில், சாமானிய மக்கள், சோசியல் மீடியா பிரபலங்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோரே பாதிக்கப்பட்டுவந்த நிலையில் தற்போது அரசாங்கத்தின் உச்ச பதவியில் இருப்பவர்களே இது போன்ற பிரச்னையை எதிர்கொள்வது விவகாரத்தின் தீவிரத்தன்மையை எடுத்துக்காட்டுகிறது. அந்த வகையில், சென்னை மாநகராட்சி கமிஷனராகப் பணியாற்றிவரும் டாக்டர்.ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸின் பெயரில் வாட்ஸ்-அப் அக்கவுன்ட் உருவாக்கி, அவர் புகைப்படத்துடன் போலியான மொபைல் எண்ணிலிருந்து பணம் கேட்டு மெசேஜ் அனுப்பப்பட்டிருக்கிறது.

ஸ்கிரீன் ஷாட்டுடன் அலர்ட் பதிவு வெளியிட்டிருக்கும் கமிஷனர் ராதாகிருஷ்ணன்

புகைப்படம், Dr. J. Radhakrishnan, Government official, Additional Chief secretary/comissioner, GCC என்ற தகவலுன், +91 6283805581 என்ற எண்ணிலிருந்து வந்த மெசேஜ்ஜில், `Name- Anand Singh Bhadoriya, Gpay 7869853454′ என்ற எண்ணுக்கு பணம் அனுப்பும்படி கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக தனது சோசியல்மீடி பக்கங்களில், ஸ்கிரீன் ஷாட்டுடன் அலர்ட் பதிவு வெளியிட்டிருக்கும் கமிஷனர் ராதாகிருஷ்ணன், “இது என்னுடைய தொலைபேசி எண் அல்ல. பணம் பறிக்கும் போலி வாட்ஸ்-அப் கணக்கு. இதில் நேரத்தை வீணாக்க வேண்டாம், இந்த அக்கவுன்ட்டை பிளாக் & ரிப்போர்ட் செய்யவும். (This is not my phone number. Fake wahtsapp account seeking money. Do not entertain and block and also report. I have also reported to police.)” எனத் தெரிவித்திருக்கிறார். மேலும், இது சம்பந்தமாக காவல்துறையில் புகார் அளித்திருப்பதாகவும் கமிஷனர் ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் தெரிவித்திருக்கிறார்.

உஷாரய்யா… உஷாரு!

இது போல் உங்களுக்கு அனுபவம் ஏற்பட்டிருந்தால், கமென்ட்டில் எங்களுடன் பகிருங்கள்..!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.