மூதூர் சுகாதார வைத்திய பிரிவிலுள்ள மூதூர் – பெரியபாலம் கிராமிய சுகாதார நிலையம் புனரமைப்புச் செய்யப்பட்டு (09) கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் திறந்து வைக்கப்பட்டது.
சுகாதார மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 16 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்ட இக்கட்டிடத்தை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் திறந்து வைத்ததுடன், இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கபில நுவான் அத்துகோரல , கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கொஸ்தா ,பிரதி பிராந்திய சுகாதார சேவை வீ.பிரேமானந், சுகாதார வைத்திய அதிகாரி ஹில்மி முகைதீன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் உரையாற்றுகையில் நாடு தற்போது இருக்கின்ற பொருளாதார நெருக்கடியில் ஒவ்வொரு வேலைத்திட்டங்களுக்கும் உலக வங்கியானது பல்வேறு கேள்விகளை கேட்கின்றது.
இந்த கிராமிய சுகாதார நிலையமானது நான்காயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு பிரயோசனம் மிக்கதாக அமைந்துள்ளது.
பொருளாதார நெருக்கடியினால் நாட்டை விட்டு பலரும் வெளியேறும் நிலையில் இந்த நாட்டை மீட்டெடுக்க முடியும் என்று ஜனாதிபதி திடசந்தர்ப்பம் பூண்டு சேவையாற்றி வருகிறார்.குழந்தைகள் முதல் தாய்மார் வரை அனைவருக்குமான வேலை திட்டங்களை அவர் முன்னெடுத்து வருகிறார்.ஆதலால் ஜனாதிபதிக்கு நான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.