‘வீடமைப்பு மற்றும் சர்வதேச நிர்மாணக் கண்காட்சி – 2024’ ஜனாதிபதி பார்வையிட்டார்

இலங்கை நிர்மாணக் கைத்தொழில் சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட ”வீடமைப்பு மற்றும் சர்வதேச நிர்மாணக் கண்காட்சி – 2024”ஐ (Housing & Construction International Expo – 2024) பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் நேற்று (10) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பார்வையிட்டார்.

‘இலங்கையைக் கட்டியெழுப்புவோம்’ என்ற தொனிப்பொருளின் கீழ் இவ்வருட கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், நிர்மாணத்துறை நிறுவனங்களின் 300 விற்பனை கூடங்கள் இந்தக் கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், சீனாவில் உள்ள 30 முக்கிய நிறுவனங்களின் தயாரிப்புகளுடன் கூடிய விற்பனை கூடங்கள் இந்த கண்காட்சியில் முதல் முறையாக இணைந்துள்ளதுடன், இலங்கை முப்படைகளின் நிர்மாணத் தொழில்நுட்பத்தைக் காட்சிப்படுத்தும் கூடங்களை உள்ளடக்கிய இக்கண்காட்சி, எதிர்வரும் 12 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விற்பனை கூடங்கள் மற்றும் ஆயுதப்படைகளின் கண்காட்சிக் கூடங்களை ஜனாதிபதி பார்வையிட்டதுடன், கண்காட்சியின் ஏற்பாட்டாளர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.

இலங்கை நிர்மாணக் கைத்தொழில் சபையின் தலைவர் பட்டய கட்டிடக்கலை நிபுணர் ஜயந்த பெரேரா, பொதுச் செயலாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரி பொறியியலாளருமான நிஷங்க என். விஜேரத்ன உள்ளிட்ட பலர் இதன்போது உடனிருந்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.