Nala Damayanthi: முடிவடைந்த தொடர்; நிஜ வாழ்க்கையில் ரெஸ்டாரண்ட் ஆரம்பித்த தொடர் நாயகி பிரியங்கா!

ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் தொடர் `நளதமயந்தி’. இந்தத் தொடரில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருந்தவர் பிரியங்கா. `ரோஜா’ தொடர் வெற்றிக்குப் பிறகு பிரியங்கா ஜீ தமிழ் பக்கம் வந்தார். `சீதா ராமன்’ தொடரில் நடித்துக் கொண்டிருந்தவர் அந்தத் தொடரில் இருந்து வெளியேற, அவருக்குப் பதிலாக வேறொருவர் அந்தக் கதாபாத்திரத்தில் இணைந்தார். சிறிய இடைவெளிக்குப் பின் பிரியங்கா அதே சேனலில் `நளதமயந்தி’ தொடரில் இணைந்தார்.

நளதமயந்தி

திடீரென அந்தத் தொடரின் கதைக்களம் வேறொரு டிராக்கில் செல்ல இருப்பதாகவும் இனி அதில் ஶ்ரீநிதிதான் நடிப்பார் எனவும் தகவல்கள் வெளியாகின. ஶ்ரீநிதியும் அந்தத் தொடரில் நடிக்க இருப்பதை உறுதிப்படுத்தி இருந்தார்.

ஆனால், பிரியங்காவோ தான் அடுத்த செட்டியூலுக்காகக் காத்திருந்ததாகவும், அவரிடம் சொல்லாமல் கதையின் டிராக்கை மாற்றியதற்கு என்ன காரணம் என்பது விரைவிலேயே தெரிய வரும் எனவும் கூறியிருந்தார். 

இந்நிலையில் அந்தத் தொடரின் க்ளைமாக்ஸ் காட்சிகள் தற்போது நிறைவடைந்திருக்கின்றன. தொடரில் பிரியங்கா இறந்தது போலக் காட்டியிருக்கின்றனர். கேமியோ ரோலிலேயே ஶ்ரீநிதி நடித்திருக்கிறார். க்ளைமாக்ஸ் ஷூட்டில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூகவலைதளப் பக்கங்களில் வைரலாகி வருகின்றன.

பிரியங்கா

திருமணமாகி மலேஷியாவில் செட்டிலான பிரியங்கா அவருடைய கணவருடன் இணைந்து ரெஸ்டாரண்ட் ஒன்றைத் தொடங்கியிருக்கிறார். அது சார்ந்த புகைப்படங்களையும், வீடியோக்களையும் அவர் அவருடைய யூடியூப் சேனலில் பகிர்ந்திருந்தார்.

`நளதமயந்தி’ தொடரில் பிரியங்கா ஹோட்டல் ஒன்றை நடத்திக் கொண்டிருப்பார். நிஜ வாழ்க்கையிலும் அவர் அதனைத் தொடங்கியதற்கு அவருடைய ரசிகர்கள் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.