எளிய மக்களுக்கும் இனி குஷி தான்… குறைந்த விலையில் பக்காவான டேட்டா பிளான்கள்!

BSNL New Cheap Recharge Plans: ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் தொலைத்தொடர்பு துறையில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன எனலாம். ஜியோ நிறுவனம் இந்த துறையில் கால் பதித்ததில் இருந்து அதன் தனித்துவமான ரீசார்ஜ் திட்டங்கள், வாடிக்கையாளர்களை கவரும் வகையிலான ஆப்பர்கள் ஆகியவற்றால் இந்திய சந்தையில் அசைக்க முடியாத நிறுவனமாக உயர்ந்தது எனலாம். இதனால் அதன் போட்டி நிறுவனங்களும் சந்தையில் நீடிக்க இயலாமல் தடுமாறின. 

இதில் ஏர்டெல் நிறுவனம் மட்டும் ஜியோவுடன் சரிக்கு சமமாக நின்று போட்டியிட்டு வருகிறது. ஏர்டெல் நிறுவனமும் ஜியோவை போன்று ரீசார்ஜ் திட்டங்களில் சலுகைகளையும், டேட்டா போன்ற சேவைகளில் பல்வேறு தள்ளுபடிகளையும் அள்ளி வீசி வருகிறது. ஜியோவுக்கு அடுத்து இந்திய சந்தயைில் ஏர்டெல் நிறுவனம் இதனாலேயே நிலைத்து நிற்கிறது எனலாம். மொபைல் நெட்வொர்க் மட்டுமின்றி பிராட்பிராண்ட் போன்றவற்றிலும் இந்த இரு நிறுவனங்கள் இடைய கடும் போட்டி நிலவுகிறது. 

கலக்கும் 5ஜி சேவை

கடந்தாண்டு முதல் இந்தியாவில் 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள்தான் தற்போது இந்தியாவில் 5ஜி சேவையை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றன. குறிப்பாக 5ஜி இணைய சேவையை வரம்பற்ற வகையில் நீங்கள் பயன்படுத்தலாம். 4ஜி டேட்டாவுக்கு ரீசார்ஜ் செய்யும் அதே ரீசார்ஜ் பிளானில் இந்த வரம்பற்ற இணைய சேவையை நீங்கள் பெறுவீர்கள். 5ஜி சேவைக்கு என தனி ரீசார்ஜ் கிடையாது. இருப்பினும் இந்தாண்டில் 5ஜி சேவைக்கும் கட்டணம் வசூலிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

நீடிக்கும் பிஎஸ்என்எல்

ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் மட்டுமின்றி தொலைத்தொடர்பு துறையில் வோடபோன் ஐடியா மற்றும் பிஎஸ்என்எல் நிறுவனங்களும் நீடித்து வருகின்றன. இதில் வோடபோன் ஐடியா நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு 5ஜி சேவையை வழங்கவில்லை. 4ஜி சேவையைதான் வழங்கி வருகிறது. பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி சேவையை சமீபத்தில் தொடங்கியது. பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் போட்டியாளர்களை சமாளிக்க தொடர்ந்து வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பல ரீசார்ஜ் திட்டங்களை கொண்டு வருகிறது. 

எளிய மக்களுக்கான திட்டங்கள்

அந்த வகையில் எளிய மக்களை கவரும் வகையில் விலை குறைந்த 2 ரீசார்ஜ் பிளான்களை பிஎஸ்என்எல் தற்போது அறிமுகப்படுத்தி உள்ளது. பிஎஸ்என்எல் என்றாலே குறைந்த விலையில் சேவையை வழங்க பெயர் பெற்றது என்பதால் இந்த திட்டங்களையும் அதில் சேர்க்கலாம். இவை இரண்டு பிளான்களும் 60 ரூபாய்க்கும் குறைவானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டும் டேட்டா ரீசார்ஜ் திட்டங்களாகும். இதில் உங்களுக்கான ஒரு நாள் டேட்டா வரம்பு தீர்ந்துவிட்டால் இந்த திட்டத்தால் கிடைக்கும் டேட்டாவை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். 

தற்போதெல்லாம் காலிங், மெசேஜ் ஆகிய சேவைகளை விட வாடிக்கையாளர்களுக்கு டேட்டா சேவைதான் முக்கியமாக உள்ளது. குறிப்பாக தற்போது ஐபிஎல் சீசன் வேறு என்பதால் மொபைலில், மொபைல் டேட்டாவை மட்டும் வைத்துக்கொண்டு ஜியோ சினிமாவில் போட்டிகளை கண்டு ரசிக்க வழக்கமான திட்டம் போதாது. அந்த வகையில் பிஎஸ்என்எல் கொண்டு வந்த இந்த 2 டேட்டா திட்டங்கள் பரந்த வாடிக்கையாளர்களுக்கு பயனளிக்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ளது. பிஎஸ்என்எல் கொண்டு வந்துள்ள இந்த திட்டங்கள் 58 ரூபாய் மற்றும் 59 ரூபாய் ரீசார்ஜ் திட்டமாகும். 

பிஎஸ்என்எல் 58 ரூபாய் ரீசார்ஜ் பிளான்

இந்த பிளானின் வேலிடிட்டி 7 நாள்கள் ஆகும் இது. தினமும் வாடிக்கையாளர்களுக்கு தலா 2 ஜிபி டேட்டாவை வழங்கும். அதாவது மொத்தம் 7 நாள்களுக்கு 14 ஜிபி டேட்டா கிடைக்கும். ஒரு நாளில் 2 ஜிபியும் முடிந்துவிட்டால் 40 kbps இணைய வேகமே கிடைக்கும். இதில் காலிங் மற்றும் மெசேஜிற்கான பயன்கள் இருக்காது. எனவே, இதற்கு அடிப்படையான திட்டம் தேவை.

பிஎஸ்என்எல் 59 ரூபாய் பிளான்

இந்த பிளானின் வேலிடிட்டியும் 1 நாள் தான். ஆனால், இதில் ஒரு நாளுக்கு 1 ஜிபி டேட்டாவே கிடைக்கும். அதாவது 7 ஜிபி டேட்டாதான் கிடைக்கும். 59 ரூபாய் பிளானில் வெறும் 1 ஜிபி கொடுக்க முக்கிய காரணம் இதில் வரம்பற்ற காலிங் வசதியும் வழங்கப்படுகிறது, ஆனால் மெசேஜ் வசதியில்லை. எனவே, இதற்கு அடிப்படை பிளான் தேவையில்லை.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.