பீட் மோடி முஸ்லிம்களை வெளிப்படையாக தாக்கிப்பேசுவதாக சரத்பவார் குற்றம் சாட்டி உள்ளார். பிரதமர் மோடி நேற்று முன்தினம் நந்துர்பரில் பேசுகையில், தேர்தலுக்கு பின்பு காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து அழிவதற்கு பதில் அஜித்பவாருடன் சரத்பவார் இணையவேண்டும் என்று கூறியிருந்தார். உடனடியாக இதற்கு பதிலடியாக சரத்பவார், “நாடாளுமன்ற ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாத யாருடனும் கூட்டணி வைக்க மாட்டேன்” என்றார். நேற்று பீட்டில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் சரத்பவார், ”பிரதமர் மோடியால் விமர்சனங்களை பொறுத்துக்கொள்ள முடியாது. ஆனால் அவர் மற்றவர்களுக்கு எதிராக […]
